என் மலர்
சேலம்
- லாரி உரிமையாளர்களுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
- டிசம்பர் மாத இறுதியில் லாரி உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம்.
சேலம்:
தமிழகத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமாக லாரிகள் இயக்கப்படுகின்றன. இதில் 4 லட்சம் லாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், 1 லட்சம் லாரிகள் வட மாநிலங்களுக்கும் சென்று வருகின்றன.
டிரைவர்கள், கிளீனர்கள், பாரம் ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் 8 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் இதனை நம்பி உள்ளனர்.
இந்தநிலையில் டீசல் மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு, சுங்க சாவடி கட்டண உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் லாரி உரிமையாளர்களுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
மேலும் டிரைவர், கிளீனர் தட்டுப்பாட்டால் லாரிகளை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே போக்குவரத்து போலீசார் விதி முறைகளை மீறி விதிக்கும் ஆன்லைன் அபாராதத்தால் லாரி தொழில் மேலும் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் கூறி உள்ளனர். இதனால் விரைவில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறுகையில், டீசல் விலை உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் லாரி தொழில் முடங்கி உள்ளது. இதனால் லட்சக்கணக்கான லாரிகளை இயக்க முடியாமல் சாலை யோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து லாரிகளும் ஆண்டுதோறும் எப்.சி. காட்டி தான் சாலையில் ஓட்டுகிறோம். ஆனால் ஏதாவது ஒரு காரணத்தை கூறி லாரிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கிறார்கள்.
மேலும் லோடு, ஏற்றி இறக்கும் போதும் லாரிகளுக்கு போலீசார் அபராதம் விதிக்கிறார்கள். இதுதவிர வணிக நிறுவனங்கள் முன்பு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் லாரிகளுக்கு சில நேரங்களில் வாரத்திற்கு இரு முறை கூட ஒரே லாரிக்கு போக்குவரத்து போலீசார் ஏதாவது காரணம் கூறி ஆன்லைனில் அபராதம் விதித்து வருகிறார்கள். இது சென்னையில் தான் அதிக அளவில் நடக்கிறது.
இது குறித்து போலீஸ் டி.ஜி.பி. மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரிடமும் பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் லாரிகளில் உள்ள ஒளிரும் பட்டைகள் நல்லபடி இருந்தாலும் அடிக்கடி மாற்றும்படி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வலியுறுத்துகிறார்கள்.
புதிதாக டிரைவிங் லைசன்ஸ் எடுக்கும் போது அன்று மாலையே லைசன்ஸ் எடுப்பவரிடம் புதிய லைசன்ஸ் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது லைசன்ஸ் எடுப்பவரின் ஆவணங்களில் உள்ள முகவரிக்கு தான் லைசன்ஸ் செல்கிறது . அதற்கு ஒரு வாரம் ஆகிறது. இதனால் காலவிரயம் ஆகிறது.
லாரிகளை ஒரு வாரம் இதனால் நிறுத்தி வைக்கும் நிலை உள்ளது. எனவே முன்பு போல லைசன்சை உடனடியாக அவர்களிடமே போக்குவரத்து அதிகாரிகள் வழங்க வேண்டும், இந்த கோரிக்கைகள் குறித்து பல முறை வலியுறுத்தியும் நிறைவேறவில்லை.
இதனால் ஒரு லாரிக்கு 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கூடுதல் செலவாகிறது. இதனால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை.
இனி வரும் காலங்களிலும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் டிசம்பர் மாத இறுதியில் லாரி உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் அனைவரின் கருத்தையும் கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தேதி அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டம்.
- போராட்டத்தால் நாமக்கல்லில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
நாமக்கல்:
நாமக்கல் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாமக்கல் நகருக்குள் வரும் வெளியூர் பஸ்கள் பழைய பஸ் நிலையத்திற்குள் வராமல் மெயின் ரோட்டில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு செல்கிறது.
இதனால் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று ஒரு நாள் நாமக்கல் நகரம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.
இதில் மருந்து வணிகர்கள் சங்கத்தினர் மருந்து கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கடையடைப்பு செய்வதாகவும், பிற வணிக நிறுவனங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை நாமக்கல் நகரில் கடைகள் திறக்கப்படவில்லை. நாமக்கல் பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடைகள், நாமக்கல் கோட்டை பகுதியில்உள்ள கடைகள், ஆஞ்சநேயர் கோவில் அருகாமையில் உள்ள கடைகள், பூங்கா ரோடு, தாலுகா அலுவலகம் அருகாமையில் உள்ள கடைகள், மின்சார வாரியம் அருகில் உள்ள கடைகள், மருத்துவமனை அருகில் உள்ள கடைகள், திருச்சி- நாமக்கல் ரோடு, நாமக்கல்- துறையூர் ரோடு, மோகனூர்- சேந்தமங்கலம் ரோடு, சேலம்- நாமக்கல் ரோட்டில் உள்ள கடைகள் மூடப்பட்டிருந்தது. இந்த கடைகளின் உரிமையாளர்கள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதில் மளிகை கடைகள், மருந்து கடைகள், ெஜராக்ஸ் கடைகள், எலக்ட்ரிக்கல் கடை, செல்போன் கடை, நகை கடைகள், பாத்திர கடைகள், ஆட்டோ மொபைல், பழைய இரும்பு கடைகள் என 3000 -க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு இருந்தன. முட்டை விற்பனை கடைகள், பேக்கரி கடைகள், பழக்கடைகளும் திறக்கப்பட வில்லை.
இதேபோல் நாமக்கல் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர், மருந்து வணிகர்கள் தங்களது கடைகளை திறக்கவில்லை. இந்த கடையடைப்பு போராட்டத்தால் நாமக்கல்லில் இன்று சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தனர். மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள், கூலி தொழிலாளர்கள் தங்கள் தொழில்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
- மேட்டூர் அணைக்கு கடந்த 2 வாரமாக நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வருகிறது.
- இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.52 அடியாக உயர்ந்து காணப்பட்டது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த 2 வாரமாக நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வருகிறது.
அதே நேரம் நீர்வரத்தை விட பாசனத்துக்கு குறைந்த அளவிலேயே தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.52 அடியாக உயர்ந்து காணப்பட்டது. நீர்வரத்து அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 395 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 77.73 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெகதீஷ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.
- என்னோடு களமாடிய உண்மையான களபோராளிகளுக்கும் என்னுடைய புரட்சிகர நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
நாம் தமிழர் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெகதீஷ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் அ.ஜெகதீஷ் ஆகிய நான் நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன்.
இதுவரை என்னோடு களமாடிய உண்மையான களபோராளிகளுக்கும் என்னுடைய புரட்சிகர நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
நான் மிகவும் நேசித்த நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவது கடினமாக இருந்தாலும் சமீப கால செயல்பாடுகள் கட்சியின் உள் கட்டமைப்பில் கவனம் செலுத்தாதது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
அதன் அடிப்படையில் கனத்த இதயத்தோடு இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். கொள்கை கோட்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை என்றும் தலைவர் வே பிரபாகரன் அவர்கள் நினைவில் தமிழ் தேசியப் பாதையில் தொடர்ந்து பயணிப்பேன் நன்றி...
இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
- அணையின் நீர்மட்டம் 108.97அடியாக உயர்ந்து காணப்படுகிறது.
- தற்போது அணையில் 76.95 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று வினாடிக்கு 7 ஆயிரத்து 545 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 6 ஆயிரத்து 422 கனஅடியாக குறைந்தது.
அணையின் நீர்மட்டம் 108.97அடியாக உயர்ந்து காணப்படுகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது.
தற்போது அணையில் 76.95 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.
- ஆசிரியர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தல்.
- ஆசிரியர் ஜெயபிரகாஷை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.
சேலம் மாவட்டம் கிழக்கு ராஜபாளையம் வீரகனூர் அருகே உள்ள அரசு பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளியில் கணித ஆசிரியராக ஜெயபிரகாஷ் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர், மாணவர்களை கால் அழுத்திவிட சொல்லி ஓய்வெடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
இதனால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோரும், கல்வி ஆர்வலர்களும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், மாணவர்களை கால் அழுத்த சொல்லி ஓய்வெடுத்த ஆசிரியர் ஜெயபிரகாஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட கணித ஆசிரியர் ஜெயபிரகாஷை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மாணவர்களை கால் அழுத்த சொல்லி, ஆசிரியர் தூங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
- தற்போது அணையில் 76.54 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 355 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 7 ஆயிரத்து 545 கனஅடியாக குறைந்தது.
அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் 108.68 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 76.54 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டும், குடை பிடித்த படியும் சென்றனர்.
- ஏற்காடு படகு இல்லம் பனிப்பொழிவால் சூழப்பட்டு இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டது.
ஏற்காடு:
சுற்றுலா தலமான ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சாரல்மழை, பனிப்பொழி, கடும் குளிர் என மாறிமாறி சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று காலை வெயில் ஏற்பட்ட நிலையில் நேற்று மாலை முதல் மீண்டும் பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவி வருகிறது.
இன்று காலை முதல் ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் சுற்றுலா தலங்கள் மற்றும் மலைப்பாதைகளில் பனிப்பொழிவும் அதிகளவில் நிலவியது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டும், குடை பிடித்த படியும் சென்றனர்.
இதே போல் மலை பகுதி முழுவதும் பனிபடர்ந்து காணப்பட்டதால் பகல் நேரத்திலேயே வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி மெதுவாக வாகனங்களை இயக்கினர். ஏற்காடு படகு இல்லம் பனிப்பொழிவால் சூழப்பட்டு இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டது.
தொடர் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் நடமாட்டமின்றி ஏற்காடு வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் சமவெளி பகுதிகளிலும் தற்போது பரவலாக மழை மற்றும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்து விட்டது. இதனால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.
- அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- மேட்டூர் அணையில் தற்போது 74.82 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 449 கனஅடியாக இருந்த நிலையில் இன்று நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரத்து 542 கனஅடியாக குறைந்தது. ஆனாலும் நீர்வரத்தை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.44 அடியாக உயர்ந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் தற்போது 74.82 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.
- விழாவில் பங்கேற்ற அரசு பள்ளி ஆசிரியர் தம்பயா தலைமை உரையாற்றினார்.
- தமிழக அரசு ஊழியர் ஒழுங்கு நடவடிக்கை விதிகள்படி தம்பயாவிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
சேலத்தில் நேற்று காவிரி- சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்திய அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற அரசு பள்ளி ஆசிரியர் தம்பயா தலைமை உரையாற்றினார்.
இந்நிலையில், விழாவில் பங்கேற் தம்பயாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முறையாக பள்ளிக்கு செல்லாமல், அதிமுக பணிகளில் ஈடுபட்டு வந்ததால் தொடக்க பள்ளி கல்வித்துறை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், தமிழக அரசு ஊழியர் ஒழுங்கு நடவடிக்கை விதிகள்படி தம்பயாவிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தம்பயா கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொடக்க கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
- நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகினார்.
- நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து இளவஞ்சி விலகினார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் தொடர்ந்து விலகி வருகின்றனர்.
கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகினார். அவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சாட்டினர்.
இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகினார். சீமான் தன்னிடம் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறியிருந்தார்
இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் விலகினார்.
இவரை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து இளவஞ்சி விலகினார். கட்சி தலைமையின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை, பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை, புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதே இளவஞ்சியின் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து சேலம் மாநகர மாவட்ட செயலாளர் விலகுவதாக அறிவித்துள்ளார்.
சேலம் மாநகர மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம் நாம் தமிழர் கட்சியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
- பனிப்பொழிவும் அதிகரித்துள்ளதால் ஏற்காட்டில் மரம், செடி கொடிகளிலும் பனி படர்ந்து காணப்படுகிறது
- சேலம் மாநகரில் நேற்று லேசான சாரல் மழை பெய்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்வார்கள். இதனால் ஏற்காட்டில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஏற்காட்டிலும் தொடர் மழை பெய்து வரும் நிலையில் நேற்றும் பகல் மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.
மேலும் பனிப்பொழிவும் அதிகரித்துள்ளதால் ஏற்காட்டில் மரம், செடி கொடிகளிலும் பனி படர்ந்து காணப்படுகிறது. இதனால் அருகில் நிற்பவர்களை கூட பார்க்க முடிவதில்லை. தொடர் மழை மற்றும் பனி காரணமாக ஏற்காட்டில் வரலாறு காணாத அளவில் கடும் குளிர் நிலவி வருகிறது.
இதனால் ஏற்காட்டில் வசிக்கும் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் தவியாய் தவித்து வருகிறார்கள். மேலும் கடும் குளிரில் இருந்து தப்பிக்க ஸ்வெட்டர் மற்றும் ஜர்கின் அணிந்த படியும் சாலையில் நடமாடுகின்றனர். ஆனாலும் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பெரும்பாலானோர் வீட்டில் முடங்கி உள்ளதால் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
மேலும் ஏற்காடு மலைப்பாதையில் அதிக அளவில் பனி மூட்டம் நிலவுவதால் மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே ஊர்ந்து செல்கின்றன. ஏற்காட்டில் நிலவும் கடும் குளிரால் அங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் அனைத்தும் கடந்த சில நாட்களாக வெறிச்சோடி காணப்படுகிறது.
சேலம் மாநகரில் நேற்று லேசான சாரல் மழை பெய்தது. இந்த மழையை தொடர்ந்து சேலம் மாநகரில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதே போல சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் பனியால் கடும் குளிர் நிலவி வ ருகிறது. இதனால் காலை நேரங்களில் வாகனங்களில் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குளிரில் இருந்து தப்பிக்க ஸ்வெட்டர் மற்றும் ஜெர்கின்கள், கம்பளி பெட்சீட், போர்வைகள் பொது மக்கள் அதிக அளவில் வாங்கி வருகிறார்கள். இதனால் அதன் விற்பனையும் சூடு பிடித்துள்ளது.






