என் மலர்
சேலம்
- தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் செல்லப்பாண்டியன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று பலியான மதீஷ் உடலை மீட்டனர்.
- கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள மண்மலை விநாயகபுரத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் மதீஷ்(வயது17). இவர் முருங்கைபட்டி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துள்ளார்.
சம்பவத்தன்று மாணவர் மதீஷ் தனது உறவினர் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் நீச்சல் கற்றுக்கொள்ள சென்றார். இடுப்பில் கயிறு கட்டிக்கொண்டு அவர் நீச்சல் பழகினார். அப்போது எதிர்பாராத விதமாக இடுப்பில் கட்டியிருந்த கயிறு அறுந்தது. இதனால் மதீஷ் நீரில் மூழ்கினான். அருகில் நின்றவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கெங்கவல்லி தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் செல்லப்பாண்டியன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று பலியான மதீஷ் உடலை மீட்டனர். இதை தொடர்ந்து மதீஷ் உடல் பிரேத பரிசோதனைக்கான ஆத்தூர் அரசு ஆச்பத்திரிக்கு அனுப்பி வைக்கபப்ட்டது. இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கை விளங்குடன் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- சேலம் மாநகரில் அதிகரித்து வரும் கொலைகள், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுபடுத்திட வேண்டும்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கை விளங்குடன் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாநகரில் அதி கரித்து வரும் கொலைகள், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுபடுத்திட வேண்டும். போதை பொருட்கள் விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்திட வேண்டும்.
சமூக விரோதிகள் நடமா டும் பகுதிகளை அடை யாளப்படுத்தி கூடுதல் போலீசாரை ரோந்து பணிகளில் ஈடுபடுத்திட வேண்டும். பழுதடைந்த சி.சி.டி.வி காமிராக்களை பராமரித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாந கர செயலாளர் பிரவீன்கு மார் தலைமை தாங்கினார். கிளை செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் சண்முகராஜா கண்டன உரையாற்றினார். மாநகரக் குழு உறுப்பினர் ராஜேஷ்கு மார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழில் படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
- இதில் முதல், 2-ம் மற்றும் 3-ம் பரிசுகள் முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 11, 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே தமிழில் படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் முதல், 2-ம் மற்றும் 3-ம் பரிசுகள் முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
இந்த போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர் சென்னையில் நடைபெறும் மாநில போட்டியில் அரசு செலவில் செல்லும் வாய்ப்பையும் பெறுவர். இந்த ஆண்டுக்கான கவிதை,
கட்டுரை, பேச்சுப் போட்டிகள்வருகிற 27-ந்தேதி( புதன்கிழமை) காலை 9 மணிக்கு சேலம் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. போட்டி நாளன்று மாணவர்கள் தங்கள் வருகையை பதிவு செய்து போட்டிகளில் கலந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் விதிமுறைகள் அனைத்து பள்ளி, க்ல்லூரிகளுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் மூலம் அனுப்பப்பட்டு உள்ளது.
இப்போட்டிக்கான விதிமுறைகள், போட்டியில் சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் மட்டும் பங்கேற்கலாம். போட்டியில் கலந்து கொள்பவர்கள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வரின் அனுமதி பெற்று பரிந்துரையுடன் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர் வீதம் மொத்தம் 3 பேரை மட்டும் தெரிவு செய்து பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர் அனுப்பி வைக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு போட்டி யில் மட்டுமே கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.
போட்டியில் பங்கேற்கும் மாணவருக்குப் பயணப்படி வழங்கப்பட மாட்டாது. போட்டி நாளன்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். போட்டிக்கான
தலைப்புகள் போட்டி நடைபெறும் அரங்கில் அறி விக்கப்படும். சேலம் மாவட்டத்தினர் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிட மும், கல்லூரி மாணவ, மாணவியர் தங்கள் கல்லூரி முதல்வரிடமும் பறிந்து ரைப்பெற்று போட்டிகளில் கலந்து கொள்லலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
- சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்த நிலையில் கிடந்தார்.
- அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையத்தில், கடந்த 4-ந் தேதி மாலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்த நிலையில் கிடந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவையில் இருந்து சேலம் வரும் தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் 3 பேரும் மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.
- சேலம் நோக்கி வந்த சொகுசு கார், எதிர்பாராத விதமாக வெங்கடாசலம் ஓட்டி சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதியது.
சேலம்:
சேலம் அருகே உள்ள கல்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 70). இவர் இன்று காலை தனது மொபட்டில் மனைவி மாரியம்மாள் (60), மகள் பூங்கொடி (27) ஆகியோருடன் உத்தமசோழபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
கோவையில் இருந்து சேலம் வரும் தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் 3 பேரும் மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த சொகுசு கார், எதிர்பாராத விதமாக வெங்கடாசலம் ஓட்டி சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதியது.
இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் மாரியம்மாள் மற்றும் பூங்கொடி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த வெங்கடாஜலம் உயிருக்கு போராடினார்.
அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள், வெங்கடாஜலத்தை மீட்டு அரியானூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்த தகவலின்பேரில், கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ரோட்டில் இறந்து கிடந்த மாரியம்மாள் மற்றும் பூங்கொடியின் உடல்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரவி (வயது 34). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.
- இரவு 11 மணியளவில் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த போது நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் பெட்ரோல் திருடிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சேலம்:
ஓமலூர் அடுத்த பூசாரிப்பட்டி தாசசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 34). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். இரவு 11 மணியளவில் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த போது நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் பெட்ரோல் திருடிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அந்த வாலிபரை பிடித்து தீவட்டிப்பட்டி போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பண்ணப்பட்டி காங்கேய னூர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரின் மகன் விக்னேஷ் (23), என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
- வாழப்பாடி அருகே பேளூரில் உள்ள ஒரு மளிகை கடைக்கு பொருட்கள் ஆர்டர் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- எதிர்பாராத விதமாக, கோபிநாத்தின் மோட்டார் சைக்கிளும், சக்திவேலின் மொபட்டும் மோதிக்கொண்டன. இதில் இரு வாகனங்களும் சேதமடைந்தது.
சேலம்:
சேலம் அருகே உள்ள ஜாகீர்ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 33). தனியார் நிறுவன மார்க்கெட்டிங் பிரதிநிதி யான இவர், நேற்று வாழப்பாடி அருகே பேளூ ரில் உள்ள ஒரு மளிகை கடைக்கு பொருட்கள் ஆர்டர் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
விபத்து
அயோத்தியாபட்டணம் ராமர் கோவில் அருகே சென்றபோது, எதிரே மேட்டுப்பட்டி தாதனுாரை சேர்ந்த சக்திவேல் (40) என்பவர் மொபட்டில் வந்தார். அப்போது எதிர்பா ராத விதமாக, கோபிநாத்தின் மோட்டார் சைக்கிளும், சக்திவேலின் மொபட்டும் மோதிக்கொண்டன. இதில் இரு வாகனங்களும் சேதமடைந்தது.
தகராறு
இந்த நிலையில், சேத மான தனது மொபட்டை சரி செய்ய பணம் கேட்டு சக்திவேல் மற்றும் அவரு டன் வந்த அவரது அண்ணன் சரவணன் ஆகி யோர் கோபிநாத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோபிநாத் பணம் தர மறுக்கவே, சக்திவேல் அவரது நண்பர்கள், உறவி னர்களை செல்போனில் அழைத்து சம்பவ இடத்திற்கு வரவழைத்தார்.
கொலை
இதையடுத்து அங்கு வந்த சக்திவேலின் நண்பர்க ளான தேவ், சந்தோஷ் ஆகியோரும், சக்திவேல், சரவணனுடன் சேர்ந்து, கோபிநாத்திடம் தகராறில் ஈடுபட்டு கடுமையாக தாக்கினர். இதில் கோபிநாத் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அதிர்ச்சி அடைந்து அனைவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கோபிநாத் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
4 பேருக்கு வலைவீச்சு
ஏற்கனவே உடல் நலம் சரியில்லாத கோபிநாத்துக்கு விபத்தில் சிக்கி சாலையில் விழுந்ததில் தலையில் அடி பட்டுள்ளது. இந்த சூழலில் சக்திவேல் மற்றும் நண்பர்கள் அவரை தாக்கி யுள்ளனர். இதனால் படுகா யத்துடன் சாய்ந்த கோபிநாத் இறந்தது போலீஸ் விசா ரணையில் தெரிய வந்தது.
இந்த கொலை தொடர்பாக காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல், அவரது அண்ணன் சரவணன் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.
- புதிய சுண்ணாம்பு சூலை தெரு வில் 60-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கின்றனர்.
- அடிப்படை வசதியும் செய்து கொடுக்க கோரி, அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி சார்பில் சேலம் மாநகராட்சி நுழைவு வாயில் முன்பு சாகும் வரை உண்ணாவிர போராட்டம் நடந்தது.
சேலம்:
சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலம் 44-வது டிவிசன், புதிய சுண்ணாம்பு சூலை தெரு வில் 60-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இவர்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவம் அளித்த உத்தரவின்படி, உடனடியாக சாலை, சாக்கடை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதியும் செய்து கொடுக்க கோரி, அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி சார்பில் சேலம் மாநகராட்சி நுழைவு வாயில் முன்பு சாகும் வரை உண்ணாவிர போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்திற்கு மாநில தலைவர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுச்செய லாளர் செல்வக் கண்ணன், மாநிலத் துணைத் தலைவர் சூரிய மூர்த்தி, மாவட்டத் தலைவர் வெங்கட்ராமன், துணைத் தலைவர்கள் பழனி, பெரியசாமி, மண்டல தலைவர் பால கஜேந்திரன், செயலாளர் சம்பத்குமார் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அம்மா பேட்டை போலீசார், அவர்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இத னால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- முத்தம்பட்டியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக, வாழப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- முத்தம்பட்டி பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது 12 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக, வாழப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீ சார், முத்தம்பட்டி பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது 12 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.
அவர்களை சுற்றி வளைத்த போலீசார், இந்த கும்பலிடமிருந்து ரூ.22 ஆயிரம் ரொக்கத்தை பறி முதல் செய்தனர். இது தொடர்பாக 12 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- காட்டூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி சாமி கோவில் அமைந்துள்ளது.
- இக்கோவிலின், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை தீர்த்தக் குடம் ஊர்வலம் நடைபெற்றது.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஆலச்சம்பாளையம், காட்டூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி சாமி கோவில் அமைந்துள்ளது. எடப்பாடி சுற்று வட்டார பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமான இக்கோவிலின், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை தீர்த்தக் குடம் ஊர்வலம் நடைபெற்றது.
முன்னதாக கல்வடங்கம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் புனித நீராடிய திரளான முருக பக்தர்கள், கும்பாபிஷேக விழாவிற்காக குடங்களில் புனித நீர் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
நகரின் பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக மேள தாளம் முழங்க நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலம், பால தண்டாயுதபாணி சாமி கோவில் வளாகத்தில் நிறைவுற்றது. தொடர்ந்து புனித நீர் அடங்கிய தீர்த்த குடங்களுக்கு யாக பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், நாளை மறுநாள் காலை, இக்கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகளை பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
- சேலத்தில் இருந்து வாழப்பாடி வழியாக நேற்று இரவு விருதாச்சலம் நோக்கி பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது.
- காய்கறி விற்பனை டெம்போ டிரைவர் தினேஷ்குமார் (வயது 23) என்பவர், ரெயில் பாதையை கடக்க முயன்றார்.
வாழப்பாடி:
சேலத்தில் இருந்து வாழப்பாடி வழியாக நேற்று இரவு விருதாச்சலம் நோக்கி பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த காய்கறி விற்பனை டெம்போ டிரை வர் தினேஷ்குமார் (வயது 23) என்பவர், ரெயில் பாதையை கடக்க முயன்றார்.
இதில் ரெயில் தினேஷ்கு மார் மீது மோதியதில், அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த சேலம் ரெயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தினேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் நீண்ட நேரமாக அமர்ந்திருந்தார். சற்று நேரத்தில் அவர் அதே பகுதியில் இறந்து கிடந்தார்.
- இதை கண்ட அப்பகுதி மக்கள், இது குறித்து கொங்கணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சாலையோரம், இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் நீண்ட நேரமாக அமர்ந்திருந்தார். சற்று நேரத்தில் அவர் அதே பகுதியில் இறந்து கிடந்தார்.
இதை கண்ட அப்பகுதி மக்கள், இது குறித்து கொங்கணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சாலையோரம் இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இதில், இறந்து கிடந்த நபர் சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த டேனிஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் (வயது 40) என்பதும், கட்டிடத் தொழிலாளியான இவர், ஈரோடு பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கொங்கணாபுரம் போலீசார், ஈரோட்டில் தங்கி பணிபுரிந்து வந்த கட்டிட தொழிலாளி வெள்ளையன் எதற்காக இப்பகுதிக்கு வந்தார்? மேலும் சாலை ஓரத்தில் அமர்ந்திருந்த அவர், திடீரென மர்மமாக இறந்து கிடந்தது எப்படி? அவரை யாரும் கடத்தி வந்து தாக்கி கொலை செய்தனரா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது.






