என் மலர்tooltip icon

    சேலம்

    • சமத்துவ விருந்து சேலம் தாரமங்கலம் மெயின் ரோடு இரும்பாலை மோகன்நகர் பி.ஆர்.ஆர் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் மகளி ரணி செயலாளர் செல்வி உறுதிமொழி வாசித்தார்.

    சேலம்:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பிறந்த நாளையொட்டி சமத்துவ விருந்து சேலம் தாரமங்கலம் மெயின் ரோடு இரும்பாலை மோகன்நகர் பி.ஆர்.ஆர் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.

    உறுதி மொழி

    இந்த நிகழ்ச்சியில் மகளி ரணி செயலாளர் செல்வி உறுதிமொழி வாசித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் செங்கோடன் வரவேற்றார். சேலம் மண்டல அமைப்பு செயலாளர் மைக்கேல் தங்கராஜ் தலைமை தாங்கினார். மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செய லாளர் ஜவகர், தெற்கு மாவட்ட செயலாளர் ராஜு,

    தொகுதி செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமத்துவ விருந்து சரத்குமார் பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்து பொது மக்களுடன் அமர்ந்து உணவு அருந்தி பேசியதாவது:-

    இந்த சமத்துவ விருந்தை ஒற்றுமை வலியுறுத்தும் விருந்தாக எடுத்துக் கொள்ள வேண்டும். சமத்துவம் என்பது கொள்கை அடிப்ப

    டையில் மட்டும் இல்லா

    மல் அனைவரது எண்ணங்க ளிலும் இருக்க வேண்டும்.தானத்தில் சிறந்ததானம் அன்னதானம். அந்த வகையில் மாதந்தோறும் 10 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இதில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சுந்தர், சமத்துவ விருந்து குறித்து விளக்கி பேசினார். பொருளாளர் சுந்தரேசன், துணைப் பொதுச் செயலாளர்கள் ஈஸ்வரன், மகாலிங்கம், கொள்கை பரப்புச் செயலா ளர் விவேகானந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இதில் மாவட்ட செயலாளர் மாதையன், சிவா, முருகேசன், சரவணன், தங்கவேல், மோகனவேல், கோவிந்தசாமி, பகுதி, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மகளிரணி துணை செயலாளர் தனலட்சுமி நன்றி கூறினார்.

    • 8-ந் தேதி தனது மனைவி சைதன்யா, மாமனார் ராம்நாத், மாமியார் கலைச்செல்வி ஆகியோ ருடன் வெளிநாட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.
    • ஆடிட்டர் விக்னேஷ் வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்த பொது மக்கள் கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் சின்னத்திருப்பதி சந்திரன் கார்டன் அனெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். ஆடிட்டர். இவர் கடந்த 8-ந் தேதி தனது மனைவி சைதன்யா, மாமனார் ராம்நாத், மாமியார் கலைச்செல்வி ஆகியோ ருடன் வெளிநாட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

    இந்த நிலையில் ஆடிட்டர் விக்னேஷ் வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்த பொது மக்கள் கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் குடும்பத்தினர் நேரில் வந்து பார்த்தால் மட்டுமே என்னென்ன பொருட்கள் திருட்டு போனது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்தனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் முகமூடி அணிந்து சென்றது தெரியவந்தது.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாங்காடு மாடல் பள்ளி அருகில் வசித்து வரும் சேகர் என்பவர் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
    • தவறி கீழே விழுந்து டிராக்டரின் சக்கரம் அவரது தலை மீது ஏறியதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    சேலம்:

    கொளத்தூர் மாங்காடு மாடல் பள்ளி அருகில் வசித்து வரும் சேகர் என்பவர் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று டிராக்டரில் எட்டாம் வகுப்பு படித்து வரும் அவரது மகன் வெங்கடேஷ் என்பவரை டிராக்டரில் அழைத்து கொண்டு வரும்போது கருங்கல்லூர் அருகே உள்ள வால் கிணத்தூர் பகுதியில் வளைவில் வேகமாக வந்து டிராக்டரை திரும்பும் போது எதிர்பாராத விதமாக வெங்கடேஷ் டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்து டிராக்டரின் சக்கரம் அவரது தலை மீது ஏறியதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கொளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் அவர்கள் விசாரித்து வருகிறார்கள்

    • ராயலூர் 3-வது வார்டில் 12 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் மற்றும் குழந்தை கள் பயன்பாட்டிற்காக ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
    • தண்ணீர் வசதி இல்லாததால் கடந்த சில மாதங்களாக சுகாதார வளாகம் பூட்டியே கிடக்கிறது.

    சங்ககிரி:

    சங்ககிரி சின்னாக் கவுண்டனூர் ஊராட்சி, ராயலூர் 3-வது வார்டில் 12 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் மற்றும் குழந்தை கள் பயன்பாட்டிற்காக ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் தண்ணீர் வசதி இல்லாததால் கடந்த சில மாதங்களாக சுகாதார வளாகம் பூட்டியே கிடக்கிறது.

    மேலும் பராமரிப்பின்றி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பெண்கள், குழந்தைகள் திறந்த வெளிக் கழிப்பிடமாக சாலை ஓரங்களையே பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    புகார்

    இது குறித்து ஊராட்சி மன்றத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் சுகாதார வளாகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      நங்கவள்ளி:

      மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஐயம்புதூரில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்த கம்ப்யூட்டர், லேப்டாப், சார்ஜர் என 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ெபாருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பில் கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

      2 பேர் கைது

      இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாங்காடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான வகை யில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்ட தில் அவர்கள் கொளத்தூர் பாலவாடியை சேர்ந்த விஜய் (26), அவரது நண்பர் வெங்கடேஷ் (23) என்பதும் இவர்கள் இரு வரும் தனி யார் கல்லூரியில் கணினி உள்ளிட்ட சாதனங்களை திருடியதும் தெரியவந்தது.

      இவர்களிடமிருந்து கல்லூரியில் திருடப்பட்ட 3 சிபியூ, 4 மானிடர், 1 எல்.இ. டி, டிவி, 1 லேட்டாப், 4 சார்ஜர் ஆகியவற்றை பறி முதல் செய்த போலீசார் 2 ேபரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்த னர். இதில் விஜய் என்பவர் மீது ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட வழக்கு ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

      • கொரோனாவுக்கு பின், அதாவது கடந்த 2020-ம் ஆண்டு விமான சேவை நிறுத்தப்பட்டது.
      • ஒரே நேரத்தில் 4 விமானங்கள் நிறுத்தி வைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

      சேலம்:

      சேலம் காமலாபுரம் விமான நிலையம் கடந்த 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் விமானங்களை இயக்க விமான நிறுவனங்கள் முன்வரவில்லை. பின்னர் அரசின் முயற்சியால் கடந்த 2018-ம் ஆண்டில் உதான் திட்டத்தின் கீழ் ட்ரூஜெட் விமான சேவை நிறுவனம் சென்னை- சேலம் இடையே விமான போக்குவரத்து தொடங்கியது.

      தினமும் காலையில் சென்னையில் இருந்து சேலத்திற்கும் மறுமார்க்கமாக சேலத்தில் இருந்து சென்னைக்கும் ஒரே ஒரு விமானம் இயக்கப்பட்டு வந்தது. கொரோனாவுக்கு பின், அதாவது கடந்த 2020-ம் ஆண்டு விமான சேவை நிறுத்தப்பட்டது.

      இந்த நிலையில் விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கும், விமான போக்குவரத்து துறைக்கும் கோரிக்கை விடுத்தனர். மேலும் சேலம் பாராளுமன்ற தொகுதி எம்.பி. பார்த்திபனும் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தார்.

      இதையடுத்து மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் சேலத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்கும். இதற்காக அலையன்ஸ் ஏவியேஷன் நிறுவனமும் மற்றும் இண்டிகா விமான நிறுவனமும் முன்வந்துள்ளது.

      அலையன்ஸ் ஏவியேஷன் நிறுவனம் சார்பில் பெங்களூரு-சேலம், கொச்சின்-சேலம், சேலம்-பெங்களூரு ஆகிய விமான சேவைகளை வாரத்தில் 7 நாட்களுக்கு வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த விமான சேவையில் 2 விமானங்கள் ஈடுபட உள்ளது.

      அதேபோல் இண்டிகோ நிறுவனம் சார்பில் பெங்களூரு-சேலம், ஐதராபாத்-சேலம், சேலம்-பெங்களூரு ஆகிய சேவைகளை வாரத்தில் 4 நாட்களுக்கு வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதற்கு 1 விமானம் பயன்படுத்தப்பட உள்ளது.

      சேலம்-சென்னை இடையேயான விமான சேவைக்கு மத்திய அரசின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

      கடந்த சில ஆண்டுகளாக கூடுதல் விமானங்கள் வந்து நிற்கும் வகையில் ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்பட்டது. விமான நிலைய விரிவாக்கத்துக்காக பலர் தாமாகவே முன்வந்து நிலங்களை வழங்கினர். தற்போது 136 ஏக்கர் நிலப்பரப்பில் விமானம் நிலையம் அமைந்துள்ளது.

      விமான நிலையத்தில் 6 ஆயிரம் அடி நீளத்துக்கு ரன்வே உள்ளதை விரிவாக்கம் செய்து 8 ஆயிரம் அடி நீளத்துக்கு ரன்வே மாற்றப்பட்டுள்ளது. தற்போது 2 விமானங்கள் நிறுத்தி வைக்கும் அளவுக்கு இடம் உள்ளது.

      ஒரே நேரத்தில் 4 விமானங்கள் நிறுத்தி வைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் முடிந்து விடும் என தெரிகிறது.

      • மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரத்து 232 கன அடியாக இருந்தது.
      • இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 9,071 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

      நங்கவள்ளி:

      கர்நாடகத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததால் காவிரி படுகையில் உள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கபினி, கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

      கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 4 நாட்களாக பிலிகுண்டு வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

      மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரத்து 232 கன அடியாக இருந்தது. நேற்று காலை நீர்வரத்து 18 ஆயிரத்து 58 கன அடியாக அதிகரித்தது.

      தற்போது காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நா டக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப் பட்டுள்ளது. அதாவது கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 9,071 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

      இதனால் நேற்று மாலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரத்து 839 கன அடியாக குறைந்தது.

      இன்று காலை மேலும் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 13 ஆயிரத்து 104 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

      அணையில் இருந்து காவிரி டெல்டா பாச னத்திற்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது.

      நீர் திறப்பை விட, நீர் வரத்து அதிகமாக உள்ள தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை 65.53 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 65.63 அடியாக அதிகரித்து உள்ளது. அணையில் நீர் இருப்பு 29.06 டி.எம்.சி.யாக உளளது.

      • என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
      • இதை கண்டித்து தமிழகம் முழுவதும பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

      சேலம்:

      நெய்வேலியில் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து தமிழகம் முழுவதும பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

      சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே முன்னாள் பா.ம.க எம்.எல்.ஏ. கார்த்தி, மாவட்ட தலைவர் கதிர் ராசரத்தினம் மற்றும் சத்திரிய சேகர், கவிதா தலைமையில் 118 பேர் ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர்.

      இதுகுறித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சேலம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா கொடுத்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

      இதேபோல் சேலம் இரும்பாலை மாரமங்கலத்துபட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இன்ஸ்பெக்டர் சாரதா கொடுத்த புகாரின் பேரில் பா.ம.க. மாவட்ட துணை செயலாளர் லட்சுமணனம் உள்பட 13 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

      கரும்பாலை பஸ் நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் செய்ததாக கோட்டகவுண்டம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மோகன் கொடுத்த புகாரின் பேரில் பா.ம.க. பொதுக்குழு உறுப்பினர் சதாசிவம் உள்பட 10 பேர் மீது கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

      • மணிப்பூரில் நடைபெறும் சம்பவங்களை கண்டித்தும் பொது சிவில் சட்டத்தை கைவிட கோரியும் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நாட்டாமை கட்டிடம் முன்பு நடந்தது.
      • இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சேது மாதவன் தலைமை தாங்கினார்.

      சேலம்:

      மணிப்பூரில் நடைபெறும் சம்பவங்களை கண்டித்தும் பொது சிவில் சட்டத்தை கைவிட கோரியும் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நாட்டாமை கட்டிடம் முன்பு நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சேது மாதவன் தலைமை தாங்கினார். இதில் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி அன்வர், முத்தவல்லி சங்கத் தலைவர் அமான் என்கிற நாசர் கான் உள்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசியதாவது, இந்திய நாட்டில் பல்வேறு மதங்கள் உள்ளன. பன்முகத்துவத்தில் உள்ள இந்தியா உலகுக்கு முன் உதாரணமாக திகழ்கிறது. பா.ஜ.க. ஆட்சி பொறுப்பு ஏற்ற காலம் முதல் பன்முகத்துவத்தை ஒழித்து ஒரே நாடு ஒரே மொழி ஒரே பண்பாடு என்ற ஒற்றை தன்மையை திணித்து வருகிறது. பொது சிவில் சட்டத்தை கையில் எடுத்துள்ளது. குற்றவியல் சட்டங்களைப் போல சிவில் உரிமைகள் சார்ந்த சட்டங்கள் ஏற்கனவே நாட்டில் அனைவருக்கும் பொதுவாக உள்ளது. சிறுபான்மை மக்களை தனிமைப்படுத்தி வாக்கு வங்கி அரசியலை முன்வைத்து செயல்படுவதை கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

      • மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
      • ஜங்சன் பிரதான சாலையில் இருந்து ரெயில் நிலையம் முகப்பு பகுதி வரை ஊர்வலமாக சென்றனர்.

      சேலம்:

      மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில்இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது, அதன்படி திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஜங்சன் பிரதான சாலையில் இருந்து ரெயில் நிலையம் முகப்பு பகுதி வரை ஊர்வலமாக சென்றனர். அப்போது மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும் நடவடிக்கை எடுக்காத பா.ஜ.க அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுபட முயற்சி செய்த 130 பேரை கைது செய்தனர்.

      இந்த சம்பவத்தால் ரெயில் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

      • செங்கோடன் வயது (67), விவசாயியான இவர் வீட்டு அருகே மாட்டு கொட்டகை அமைத்திருந்தார்.
      • நேற்றிரவு திடீரென மாட்டு கொட்ட கையில் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் தீயைஅணைக்க முயன்றனர்.

      சேலம்:

      சேலம் கொண்டலாம் பட்டியை அடுத்த பனங்காடு லட்சுமி நகரை சேர்ந்தவர் செங்கோடன் வயது (67), விவசாயியான இவர் வீட்டு அருகே மாட்டு கொட்டகை அமைத்திருந்தார்.

      இந்தநிலையில் நேற்றிரவு திடீரென மாட்டு கொட்ட கையில் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் தீயைஅணைக்க முயன்ற னர். அப்போது தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அருகில் செல்ல முடியவில்லை.

      உடனே செவ்வாய்ப் பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் அருகில் இருந்த மாட்டு தீவனத்திற்கும் தீ பரவியது. இதனால் அந்த பகுதியே புகை மூட்டமாக காட்சி அளித்தது.

      தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து அக்கம் பக்கம் பரவாமல் தடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீ விபத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மாட்டு தீவனங்கள் எரிந்து சாம்பலானது.

      தீ விபத்துக்கான காரணம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

      • சேலம் மாவட்டம் ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
      • அதன் தொடர்ச்சியாக ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 500 பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

      சேலம்:

      சேலம் மாவட்டம் ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 500 பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த விளக்கு பூஜையில் பெண்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளையும் வேண்டுதலை வைத்து திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்கள்.

      ×