என் மலர்
ராணிப்பேட்டை
- நெடுஞ்சாலை துறை சார்பில் நடந்தது
- விபத்துகளில் 7200 பேர் இறந்துள்ளனர்
அரக்கோணம்:
அரக்கோணம் தனியார் பள்ளி வளாகத்தில் தமிழக நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாலை பாதுகாப்பு திட்ட விழுப்புரம் கோட்ட பொறியாளர் ஸ்ரீகாந்த் பேசுகையில்;
கடந்த 8 மாதங்களில் சாலை விபத்துகளில் 7200 பேர் இறந்துள்ளனர். ஆகையால் வாகனங்களை சாலை விதிகளை கடைப்பிடித்து இயக்க வேண்டும்.
இதில் அரக்கோணம் போக்கு வரத்துத் துறை மோட்டார் வாகன ஆய்வாளர் செங்கோட்டு வேல், ராணிப்பே ட்டை கோட்ட பொறியாளர் செல்வகுமார், அரக்கோணம் உதவிக் கோட்டப் பொறியாளர் உமா செல்வன், வாலாஜா உதவிக் கோட்ட பொறியாளர் பாலாஜிசிங், ஆற்காடு உதவிக் கோட்ட பொறியாளர் சரவணன், அரக்கோணம் உதவிப் பொறியாளர் லிங்கேஷ்வ ரன், சாலை ஆய்வாளர்கள் ஆறுமுகம், சபிதா, ரேணுகா மற்றும் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
- சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம், கொண்டாபுரம் கிராமத்தில் காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ பஞ்சலிங்கேஷ்சுவர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
முன்னதாக நந்தி பகவானுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- அவசர உதவிக்கு 1033 என்ற எண்ணை வாகன ஓட்டிகள் பயன்படுத்த வேண்டும்
- கலெக்டர் வளர்மதி பேச்சு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் திறந்த வெளி கிணறுகள்,ஆழ்துளை கிணறுகள், கட்டுமான பள்ளங்கள் மற்றும் குவாரிகள் ஆகியவை கண்ணுக்கு தெரியாத வகையில் இருப்பதால் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன. எனவே அவற்றால் விபத்து ஏற்படாத வண்ணம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சோளிங்கர் தாலுகா, பெருங்காஞ்சியில் மாநில நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கவும், பள்ளி கல்லூரி நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓச்சேரி அருகில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் இணைப்பு பாதை மட்டும் சரி செய்யப்படாமல் உள்ளது.
தற்போது எந்த வேலைகளும் நடைபெறவில்லை எனினும் சுரங்கப்பாதையின் கீழ் செல்ல தடை செய்யப்பட்டு ள்ளது. இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளதால் பாலம் வேலை தொடங்கும் வரை பாலத்தின் கீழ் போக்குவரத்தை அனுமதிக்க வட்டார போக்குவரத்து அலுவலர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பழுதடைந்த, ஓய்வு எடுக்க நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துகள், உயிர் பலி ஏற்படுகிறது.
இதை தடுத்திட வாகன ங்களை நிறுத்தக்கூடாது என்ற பலகை உபயோகிக்க வேண்டும். அவசர உதவிக்கு 1033 என்ற எண்ணை வாகன ஓட்டிகள் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, திட்ட இயக்குநர் லோகநாயகி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடவடிக்கை
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பின்னாவரம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டடம் மற்றும் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் நெற்களம் அமைக்கும் பணி ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேல் கலந்துகொண்டு, திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
சேந்தமங்கலம் கிராமத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டவும் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ஒன்றிய குழு துணை தலைவர் தீனதயாளன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- 2 பேர் படுகாயம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த வி.சி.மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 20) ஏ.சி.மெக்கானிகாக வேலை பார்த்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த இவரது நண்பர் மாணிக்கம்(21) வெல்டராக வேலைசெய்து வருகிறர்.
இந்த நிலையில் இரவு 2 பேரும் வாலாஜா அடுத்த டோல்கேட் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும். பைக்கில் வாலாஜா நோக்கி வந்தனர்.
இதில் யுவராஜ் ைபக்கை ஓட்டி வந்துள்ளார். அப்போது புலித்தாங்கல் பகுதி அருகே வந்த போது எதிர்பாராத விதமாக பைக் சாலை தடுப்பில் மோதியது.
இதில் தூக்கி எறியப்பட்ட இருவரும் படுகாய மடைந்தனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த யுவராஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னால் அமர்ந்து வந்ததில் பலத்த காயம் அடைந்த மாணிக்கம் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
- போக்குவரத்து பாதிப்பு
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு கன்டெய்னர் லாரி ஒன்று வந்தது . இந்த லாரி ராணிப்பேட்டை ஆட்டோ நகர் பகுதியை கடந்து செல்லும் போது குறுக்கே சாலையை கடக்க முயன்றது. அப்போது மற்றொரு மினி லாரி மீது திடீரென மோதியது.
இதில் மினி லாரி சாலை தடுப்பின் மீது மோதி நின்றது. இதனால் சாலையின் இரு புறங்களிலும் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
சனாதான ஒழிப்பு மாநாட்டில் இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி ராணிப்பேட்டை மாவட்ட பா.ஜ.க. தலைவர் விஜயன் தலைமையில் இந்து சமய அறிநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகை இட முயன்றதாக பா.ஜ.க.வினர் 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ரயில்வே ஸ்டேஷன் ரோடு அருகே நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சி.வாசுதேவன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வக்கீல் வி.அன்பழகன் முன்னிலை வைத்தார். அனைவரையும் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.தீபா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் நகரத் தலைவர் சண்முகம், பொதுச் செயலாளர்கள் கவியரசு, தண்டபாணி, மாவட்ட துணைத் தலைவர் ஈஸ்வர், நகர செயலாளர் குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பாஜகவினர் தர்மராஜா கோவிலில் உள்ள இந்து அறநிலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பெண்கள் உள்ளிட்ட 250 பேரை போலீசார் கைது செய்தனர்.
- காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் ஒச்சேரி அடுத்த ஆயர்பாடி கிராமத்தை சேர்ந்த விஜயன் (வயது 53). இவரின் மகள் பவித்ரா (25) என்பவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி சிறுகரும்பூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தின இரவு ஆயர்பாடி கிராமத்தை ேசர்ந்த மணிகண்டன்(32) என்பவர் பவித்ராவுக்கு போனில் குறுந்தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் இருதரப்புக்கும் ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் தாக்கப்பட்டு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதுகுறித்து இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் சத்தியமூர்த்தி, விஜயன், ராஜேஷ் ஆகிய 3 பேரையும் அவளூர் போலீசார் கைது செய்தனர்.
- கொசு மருந்து அடிக்கவேண்டும்
- குடிநீர் வசதி, கழிவு நீரோடை பராமரிப்பு, உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், துணைத்தலைவர் தீபிகா முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க கொசு மருந்து அடிக்கவேண்டும். பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பேரூராட்சியாக மாற்றவேண்டும். குடிநீர் வசதி, கழிவு நீரோடை பராமரிப்பு, உள்ளிட்டவை குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களும் கலந்துகொண்டனர்.
- அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
- தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி வருகிற செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் அன்று மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார்.
அதன்படி அன்று ராணிப்பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2ஆயிரத்து 500 பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இதில் உள்ளாட்சி பிரதிநிகள் கலந்து கொள்ள வேண்டும்.
வருகிற 17-ந்தேதி கந்தனேரியில் நடைபெறும் நடைபெறும் முப்பெரும் விழாவில் நிர்வாகிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார். கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவ ட்டத்தில் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது.
வேலூர் மாவட்டம், பள்ளி கொண்டா அருகே கந்தனேரியில் தி.மு.க. தலைவர், தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. இளைஞர் அணி செயலாளர்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் முப்பெரும் விழாவில் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் திரளாக கலந்து கொள்வது.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ராணி ப்பேட்டை மாவட்டத்தில் விழா நடைபெறாத பகுதிகளிலும் சிறப்பாக நடத்திட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி, தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய , நகர,பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போலீசார் விசாரணை
- தோகை முழுவதும் பிடுங்கப்பட்டிருந்தது
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இன்று காலை சென்னை-அரக்கோணம் முதலாவது நடைமேடை நுழைவாயிலில் ஆண் மயில் இறந்த நிலையில் கிடந்தது.
இதனை கண்ட பயணிகள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் போலீசார் மயிலை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது மயிலின் தலையில் அடிபட்டிருந்தது. ேமலும் மயிலின் தோகை முழுவதும் பிடுங்கப்பட்டிருந்தது.
மயிலை ரெயிலில் கடத்தி வந்த அந்த நபர் மயிலின் தோகை முற்றிலும் எடுத்துக்கொண்டு ரெயிலில் வரும் போது போலீசாருக்கு பயந்து தூக்கி வீசி எரிந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
இறந்த மயிலை ராணிப்பேட்டை மாவட்ட வனத்துறையிடம் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அரக்கோணம் ெரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சாகச பயணம் கூடாது
- கலெக்டர் அறிவுரை
ராணிப்பேட்டை:
தமிழம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை சாலை விபத்துகள் தொடர்பாக ஆய்வு செய்ததில், 7,303 மரணங்கள் நிகழ்ந்துள்ளது.
இதில் தேசிய நெடுஞ்சாலைகளில் 2,330, மாநில நெடுஞ்சாலைகளில்2,567, மாவட்ட சாலைகளில் 1,153, மற்றும் கிராமச் சாலைகளில் 1,253 சாலை விபத்து மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகள் மூலம் 110 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இதில், குறிப்பாக மாநில நெடுஞ்சாலையில் 96 மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் 14 சாலை விபத்து மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
இதுகுறித்து கலெக்டர் வளர்மதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த புள்ளி விவரங்கள் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், பைக் சாலை விபத்து மரணங்களே அதிகம் என்பதுதான்.
எனவே, பைக்கில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்திருத்தல் வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அதிவேகம் கொண்ட பைக்குகளை வாங்கித் தருவதை கைவிடுதல் வேண்டும்.
18 வயது நிரம்பாத, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்திட வேண்டும்.
பைக்கில் இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண் டும். அந்த இருவரும் ஹெல்மெட் அணிதல் வேண்டும். இவற்றைத் தவறாது கடைப்பிடித்தால், பைக் விபத்துகளில் உயிரிழப்பைக் கண்டிப்பாக தவிர்க்க முடியும்.
அதேபோல் கார்களில் பயணிப்போர் 'சீட் பெல்ட்' கண்டிப்பாக அணிந்துவாகனம் ஓட்ட வேண்டும், வாகனங்களின் டயர்களில் காற்றழுத்தம் சரியாக உள்ளதா, எரிபொருள் இருப்பு, பிரேக், ஒலிப்பான் ஆகியவை சரியாக இயங்குகிறதா என்பதைச் சரிபார்த்த பின் னரே வாகனத்தை ஓட்ட வேண்டும்.
பார்வை குறைவான வளைவுகளில் முந்திச் செல்ல முயலுதல் மற்றும் அதிவேக பயணம், சாகசப் பயணங்கள் கூடாது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்க ளும் சாலை விதிகளைக் கண் டிப்பாக கடைப்பிடித்து சாலை விபத்து மரணங்கள் இல்லா மாவட்டமாக மாற்றுவதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் நல்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






