என் மலர்
ராணிப்பேட்டை
- சமூக விரோதிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரிப்பு
- பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சமூக விரோதிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது.
பயணிகளிடம் செல்போன் உள்ளிட்ட வற்றை மர்ம நபர் பறித்து செல்கின்றனர். இது குறித்து ரெயில்வே போலீசாரிடம் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. ரெயில்வே போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரைட் வின் என்ற வாலிபர் மும்பைக்கு வேலை சம்பந்தமாக சென்று இருந்தார். பின்னர் அவர் மும்பையில் இருந்து ரெயில் மூலம் அரக்கோணத்திற்கு வந்தார்.
காட்பாடி செல்வதற்காக முதலாம் நடைமேடையில் காத்திருந்தார். அப்போது அவர் வைத்திருந்த பையில் சான்றிதழ்கள் மற்றும் உடைமைகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.
அதனை அமரும் இடத்தில் வைத்துவிட்டு ரெயில் வருகிறதா என்று பார்த்தார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் பையை திருடி சென்று விட்டனர்.
பை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரைட் வின் இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் ஆன்லைனின் மூலம் புகார் அளிக்க அறிவுறுத்தினர்.
அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அவர்கள் உடமைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. மேலும் இது போன்ற பல்வேறு சிக்கலில் தவிக்கும் பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது
- போலீசார் விபத்து குறித்து விசாரணை
காவேரிப்பாக்கம்:
ஆந்திர மாநிலம், கடப்பா பகுதியில் இருந்து வாழைப்பழத்தார்களை ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோ திண்டிவனம் நோக்கி இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த சேந்தமங்கலம் அருகே வரும்போது எதிரே வந்த பால் வேன் மீது லோடு ஆட்டோ உரசியது.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது. ஆட்டோவில் இருந்த வாழைப்பழத்தார்கள் சாலையில் விழுந்து நசுங்கியது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லோடு ஆட்டோவை அப்புறப்ப டுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
மேலும் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை
- மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தையும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலா ளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்ப தாவது:-
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா கந்தனேரியில் வருகிற 17-ந் தேதி நடைபெறும் தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் தமிழ்நாடு முதல் அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்ச ருமான உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்கி றார்கள்.
எனவே மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு, உறுப்பி னர்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை பிரதிநிதிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
அதே போன்று நாளை 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளன்று முதல் அமைச்சரின் முக்கிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தையும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தி.மு.க நிர்வாகிகள் அண்ணாவின் சிலை, திருவுருவப்படங்க ளுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்க வேண்டும்.
திமுக தோன்றிய செப்டம்பர் 17-ந் தேதி பவள விழாவை கொண்டாடும் விதமாக கட்சி கொடி ஏற்றி அண்ணா, பெரியார் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டுகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- தீபனின் பெற்றோர் அவருக்கு 2-வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
- அரக்கோணம் இன்ஸ்பெக்டர் பாரதி மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 24). இவரும் தீபன் (27) என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சென்னையில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
தீபனின் பெற்றோர் ராஜேஸ்வரிடம் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டுக்கு ராஜேஸ்வரி ஒரு மாதத்திற்கு முன்பு சென்று விட்டார்.
இந்த நிலையில் தீபனின் பெற்றோர் அவருக்கு 2-வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
பின்னர் தீபனுக்கு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த ராஜேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். மேலும் தனது டைரியில் கணவர் தீபன் 2-வது திருமணம் செய்து கொண்டத்தால் மன உளைச்சலில் உள்ளேன் என்று எழுதி வைத்துவிட்டு வீட்டின் அறையில் நேற்று காலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதில் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரியின் உறவினர்கள் இன்று அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையம் அருகே திரண்டனர்.
அரக்கோணம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் ராஜேஸ்வரி சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த அரக்கோணம் இன்ஸ்பெக்டர் பாரதி மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீபனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்தது
- அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்ட பதிவுத்துறை சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி நெமிலி சார் பதிவாளர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
மாவட்ட பதிவாளர் வாணி தலைமை வகித்தார். சார்பதிவாளர்கள் செந்தில்ரமணன், உதயன் முன்னிலை வகித்தனர். நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பா ளர்களாக கலெக்டர் வளர்மதி, நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
விழாவில் நெமிலி ஒன்றிய குழு துணை தலைவர் தீனதயாளன், நெமிலி பேரூர் திமுக செயலாளர் ஜனார்த்தனன், பேரூராட்சி துணைத் தலைவர் சந்திரசேகர், ஒன்றிய கவுன்சிலர் சங்கீதாக திரவன், மாவட்ட இளை ஞரணி துணை அமைப்பாளர் முரளி, நெமிலி இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு மற்றும் சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
- பலர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணத்தில் ரூ.6 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் புதிய மார்க்கெட்' கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
இதில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
மாவட்ட கலெக்டர் வளர்மதி அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, தாசில்தார் சண்மு கசுந்தரம், நகர மன்றத் தலைவர் லட்சுமி பாரி, துணைத்த லைவர் கலாவதி அன்பு லாரன்ஸ், நகராட்சி ஆணையர் ரகுராமன் மற்றும் தி.மு.க. நகர செயலாளர் வி.எல்.ஜோதி, நகர மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- நெடுஞ்சாலை துறை சார்பில் நடந்தது
- விபத்துகளில் 7200 பேர் இறந்துள்ளனர்
அரக்கோணம்:
அரக்கோணம் தனியார் பள்ளி வளாகத்தில் தமிழக நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாலை பாதுகாப்பு திட்ட விழுப்புரம் கோட்ட பொறியாளர் ஸ்ரீகாந்த் பேசுகையில்;
கடந்த 8 மாதங்களில் சாலை விபத்துகளில் 7200 பேர் இறந்துள்ளனர். ஆகையால் வாகனங்களை சாலை விதிகளை கடைப்பிடித்து இயக்க வேண்டும்.
இதில் அரக்கோணம் போக்கு வரத்துத் துறை மோட்டார் வாகன ஆய்வாளர் செங்கோட்டு வேல், ராணிப்பே ட்டை கோட்ட பொறியாளர் செல்வகுமார், அரக்கோணம் உதவிக் கோட்டப் பொறியாளர் உமா செல்வன், வாலாஜா உதவிக் கோட்ட பொறியாளர் பாலாஜிசிங், ஆற்காடு உதவிக் கோட்ட பொறியாளர் சரவணன், அரக்கோணம் உதவிப் பொறியாளர் லிங்கேஷ்வ ரன், சாலை ஆய்வாளர்கள் ஆறுமுகம், சபிதா, ரேணுகா மற்றும் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
- சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம், கொண்டாபுரம் கிராமத்தில் காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ பஞ்சலிங்கேஷ்சுவர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
முன்னதாக நந்தி பகவானுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- அவசர உதவிக்கு 1033 என்ற எண்ணை வாகன ஓட்டிகள் பயன்படுத்த வேண்டும்
- கலெக்டர் வளர்மதி பேச்சு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் திறந்த வெளி கிணறுகள்,ஆழ்துளை கிணறுகள், கட்டுமான பள்ளங்கள் மற்றும் குவாரிகள் ஆகியவை கண்ணுக்கு தெரியாத வகையில் இருப்பதால் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன. எனவே அவற்றால் விபத்து ஏற்படாத வண்ணம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சோளிங்கர் தாலுகா, பெருங்காஞ்சியில் மாநில நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கவும், பள்ளி கல்லூரி நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓச்சேரி அருகில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் இணைப்பு பாதை மட்டும் சரி செய்யப்படாமல் உள்ளது.
தற்போது எந்த வேலைகளும் நடைபெறவில்லை எனினும் சுரங்கப்பாதையின் கீழ் செல்ல தடை செய்யப்பட்டு ள்ளது. இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளதால் பாலம் வேலை தொடங்கும் வரை பாலத்தின் கீழ் போக்குவரத்தை அனுமதிக்க வட்டார போக்குவரத்து அலுவலர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பழுதடைந்த, ஓய்வு எடுக்க நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துகள், உயிர் பலி ஏற்படுகிறது.
இதை தடுத்திட வாகன ங்களை நிறுத்தக்கூடாது என்ற பலகை உபயோகிக்க வேண்டும். அவசர உதவிக்கு 1033 என்ற எண்ணை வாகன ஓட்டிகள் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, திட்ட இயக்குநர் லோகநாயகி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடவடிக்கை
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பின்னாவரம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டடம் மற்றும் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் நெற்களம் அமைக்கும் பணி ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேல் கலந்துகொண்டு, திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
சேந்தமங்கலம் கிராமத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டவும் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ஒன்றிய குழு துணை தலைவர் தீனதயாளன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- 2 பேர் படுகாயம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த வி.சி.மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 20) ஏ.சி.மெக்கானிகாக வேலை பார்த்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த இவரது நண்பர் மாணிக்கம்(21) வெல்டராக வேலைசெய்து வருகிறர்.
இந்த நிலையில் இரவு 2 பேரும் வாலாஜா அடுத்த டோல்கேட் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும். பைக்கில் வாலாஜா நோக்கி வந்தனர்.
இதில் யுவராஜ் ைபக்கை ஓட்டி வந்துள்ளார். அப்போது புலித்தாங்கல் பகுதி அருகே வந்த போது எதிர்பாராத விதமாக பைக் சாலை தடுப்பில் மோதியது.
இதில் தூக்கி எறியப்பட்ட இருவரும் படுகாய மடைந்தனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த யுவராஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னால் அமர்ந்து வந்ததில் பலத்த காயம் அடைந்த மாணிக்கம் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
- போக்குவரத்து பாதிப்பு
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு கன்டெய்னர் லாரி ஒன்று வந்தது . இந்த லாரி ராணிப்பேட்டை ஆட்டோ நகர் பகுதியை கடந்து செல்லும் போது குறுக்கே சாலையை கடக்க முயன்றது. அப்போது மற்றொரு மினி லாரி மீது திடீரென மோதியது.
இதில் மினி லாரி சாலை தடுப்பின் மீது மோதி நின்றது. இதனால் சாலையின் இரு புறங்களிலும் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






