என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைனின் மூலம் புகார்"

    • சமூக விரோதிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரிப்பு
    • பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சமூக விரோதிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது.

    பயணிகளிடம் செல்போன் உள்ளிட்ட வற்றை மர்ம நபர் பறித்து செல்கின்றனர். இது குறித்து ரெயில்வே போலீசாரிடம் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. ரெயில்வே போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பிரைட் வின் என்ற வாலிபர் மும்பைக்கு வேலை சம்பந்தமாக சென்று இருந்தார். பின்னர் அவர் மும்பையில் இருந்து ரெயில் மூலம் அரக்கோணத்திற்கு வந்தார்.

    காட்பாடி செல்வதற்காக முதலாம் நடைமேடையில் காத்திருந்தார். அப்போது அவர் வைத்திருந்த பையில் சான்றிதழ்கள் மற்றும் உடைமைகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.

    அதனை அமரும் இடத்தில் வைத்துவிட்டு ரெயில் வருகிறதா என்று பார்த்தார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் பையை திருடி சென்று விட்டனர்.

    பை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரைட் வின் இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் ஆன்லைனின் மூலம் புகார் அளிக்க அறிவுறுத்தினர்.

    அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அவர்கள் உடமைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. மேலும் இது போன்ற பல்வேறு சிக்கலில் தவிக்கும் பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

    ×