என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட தொடக்க நிகழ்ச்சி ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் எம்.பி முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு 2ஆயிரத்து 610 பயனாளிகளுக்கு மகளிர் உரிமை தொகை க்கான ஏ.டி.எம் அட்டைகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 614 ரேசன் கடைகளில் 3 லட்சத்து 48ஆயிரம் குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர்.

    அவர்களிடமிருந்து 2 லட்சத்து 29 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சுமார் 1½ லட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்ப ட்டுள்ளனர்.

    தி.மு.க. ஆட்சி வரும்போ தெல்லாம் மகளிர்க்கும், கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி, மக்களாட்சி என்றார்.

    நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயந்தி, ஜி.கே.பள்ளி நிர்வாக இயக்குனர் வினோத்காந்தி, நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, முகமது அமீன், தமிழ்செல்வி அசோகன், லட்சுமி பாரி, ஒன்றியக்குழு தலைவர்கள் சேஷா வெங்கட், வடிவேலு, அசோக், புவனேஸ்வரி, நிர்மலா சவுந்தர், கலைக்குமார், அனிதா குப்புசாமி, பேரூராட்சி தலைவர்கள் நாகராஜன், சங்கீதா மகேஷ் உள்பட நகரமன்ற, ஒன்றியக்குழு, பேரூராட்சி, ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திட்ட இயக்குநர் லோகநாயகி நன்றி கூறினார்.

    • மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் அண்ணாவின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு அரக்கோணம் நகர தி.மு.க செயலாளர் வி.எல்.ஜோதி தலைமையில், தி.மு.க வினர் பேரணியாக எஸ்.ஆர்.கேட் பகுதியில் தொடங்கி பழனி பேட்டை, அம்பேத்கர் நகர், மார்கெட், பழைய பஸ் நிலையம், வழியாக சுவால்பேட்டை பழைய நகராட்சி அலுவலகம் வரை சென்றனர்.

    பின்னர் பழைய நகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    உடன் மாவட்ட பொருளாளர் மு.கண்ணையன், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.தமிழ்ச்செல்வன், பசுபதி, முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்குமார், நகர துணை செயலாளர் தமிழ்வாணன், நகர மன்ற அவைத் தலைவர் துரை. சீனிவாசன், நகர மன்ற உறுப்பினர்கள் கே.எம்.பி.பாபு, மாலின் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • குண்டர் சட்டத்தில் கைது
    • மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தாலுகா, பில்லாந்தி, மேல்சீசமங்கலம், கிராமத்தை சேர்ந்த படப்பை விக்கி (எ) விக்னேஷ் (26) என்பவரை போலீசார் கடந்த மாதம் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் வளர்மதி, அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் படப்பை விக்கி (எ) விக்னேனை போலீசார் கைது செய்து சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • போலீசார் ஏற்றுக்கொண்டனர்
    • குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின்பேரில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

    இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    • மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
    • இனிப்புகள் வழங்கப்பட்டது

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் நெமிலி பேரூர் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணாவின் 115-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி நெமிலி பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர், ஒன்றிய குழு தலைவருமான வடிவேலு தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பேரூர் கழக செயலாளர் ஜனார்த்தனன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் பவானி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணன், நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி, நிர்வாகிகள் புருஷோத்தமன் ஹரிகிருஷ்ணன் சங்கர், முகமது அப்துல் ரகுமான், வக்கீல் கார்த்திகேயன், வடகண்டிகை பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • ரெயில் மோதியதில் போதை வாலிபர் தூக்கி வீசப்பட்டார்.
    • எக்ஸ்பிரஸ் ரெயில் 10 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில் நிலையம் மக்கள் அதிகம் கூடும் இடமாக உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ரெயில் நிலையத்தில் நேற்று மாலை பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    அப்போது 2-வது பிளாட்பாரத்தில் பெங்களூர்-அசாம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.

    அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே உள்ள ஏ.பீ.எம். சர்ச் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் போதையில் அங்கு வந்தார். அவர் 2-வது பிளாட்பார தண்டவாளத்தில் நின்று கொண்டு ரெயிலை நிறுத்தப் போவதாக ரகளையில் ஈடுபட்டார். அதனைப் பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

    ரெயில் வருவதை கண்டதும் போதை வாலிபர், தண்டவாளத்தில் இறங்கி ரெயிலை நோக்கி ஓடினார். அப்போது அவர் நிலை தடுமாறி தண்டவாளத்தில் திடீரென கீழே விழுந்து, எழுந்திருக்க முடியாமல் தட்டு தடுமாறினார்.

    இதனைப் பார்த்த என்ஜின் டிரைவர், ரெயிலை நிறுத்த முயற்சி செய்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் முன்பக்கம் போதை வாலிபர் மீது மோதிவிட்டு சிறிது தூரம் சென்று நின்றது.

    ரெயில் மோதியதில் போதை வாலிபர் தூக்கி வீசப்பட்டார். இதைப் பார்த்த பயணிகள் மற்றும் ரெயில்வே போலீசார் அந்த நபர் இறந்துவிட்டதாக கருதி அருகில் சென்று பார்த்தனர்.

    ஆனால் போதை வாலிபர் உடலில் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் போதை வாலிபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து எக்ஸ்பிரஸ் ரெயில் 10 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. போதையில் வாலிபர் ரெயிலை நிறுத்த முயற்சி செய்த சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் செல்போனில் தகவல்
    • 3 பேர் மீது போலீசில் தாய் புகார்

    நெமிலி:

    நெமிலியை அடுத்த திருமால்பூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சம்பவத் தன்று மாலையில் வீட்டிற்கு அருகே உள்ள கடைக்கு சென்று பேனா வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார்.

    அப்போது அதேப் பகுதியை சேர்ந்த 3 பேர் மாணவியை காரில் கடத்தி சென்றதாகவும், இரவு முழுவதும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அடுத்தநாள் மதியம் பள்ளூரில் இறக்கிவிட்டு வீட்டிற்கு செல்லுமாறு கூறி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இதையடுத்து வீட்டுக்கு சென்ற மாணவி நடந்த சம்பவத்தை தாய் மற்றும் மாமாவிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச் சியடைந்த மாணவியின் தாய் இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் செல்போனில் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    மேலும் நேற்று நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித் தார், அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு நடந்தது
    • பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்புலிப்பாக்கம் கிராமத்தில் முத்தாலம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது.

    இதில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், இதற்கான ஏற்பாடுகளை ஊர் நாட்டாண்மை தாரர்கள் விழா குழுவினர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • தலைமை ஆசிரியர் தலைமையில் நடந்தது
    • பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சயனபுரம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்ப ள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் 70 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு தலைமை நேற்று நடைபெற்றது.

    இதேபோல பின்னாவரம் அரசு மேல்நிலைப்ப ள்ளியில் 52 மாணவ, மாணவியர் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிகளில், நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை மாணவ மாணவியருக்கு வழங்கினார்.

    இதில் நெமிலி ஒன்றிய குழு துணை தலைவர், தீனதயாளன், ஊராட்சி மன்ற தலை வர்கள், (சயனபுரம்) பவானி வடிவேலு, (பின்னா வரம்)

    மணிவண்ணன், பள்ளியின் ஆசிரிய பெருமக்கள் மாணவச் செல்வங்கள், துணைத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • கணவர் 2-வது திருமணம் செய்ததால் விபரீதம்
    • தலைமறைவான மாமியாரை தேடி வருகின்றனர்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட் டம் அரக்கோ ணத்தை அடுத்த குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 24).

    இவரும் மேல்பாக் கம் கிராமத்தை சேர்ந்த ஸ்டீபன் (26) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டு ஸ்டீபனின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

    திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் ராஜேஸ்வரி தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.

    இந்தநிலையில் ஸ்டீபனுக்கு அவரது பெற்றோர் 2-வது திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி வாழப் பிடிக்கவில்லை என்றும் கணவர் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்வதை ஏற்க முடிய வில்லை எனவும், பெற்றோருக்கு கஷ்டத்தை கொடுத்ததாக கூறி எழுதி வைத்து விட்டு வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த தற்கொலைக்கு ராஜேஸ்வரியின் கணவர் , மாமியார், மாமனார் தான் காரணம் என ராஜே ஸ்வரியின் தாயார் மகாலட்சுமி போலீசில் புகார் அளித்தார்.

    அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையைத் தொ டர்ந்து ராஜேஸ்வ ரியின் கணவர் மற்றும் மாமியார்,மாமனார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ராஜேஸ்வரியின் கணவர் ஸ்டீபன் மற்றும் மாமனார் செல்லையா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவான மாமியார் குமாரியை தேடி வருகின்றனர்.

    • பெற்றோர் இடையே அடிக்கடி தகராறு
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் அடுத்த சீனிவாசன் பேட்டையில் அம்பேத்கர் புது தெரு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஹேமகுமார் (வயது 18) தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

    ஹேமகுமாருக்கும், பெற்றோர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் ஹேமகுமார் தனது அறையில் தூங்க சென்றார்.

    நேற்று வேலைக்கு செல்வதற்காக ஹேமகு மாரை அவரது உறவினர் எழுப்ப சென்றபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவரை மீட்டு ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஹேமகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் தகவல்
    • ராணிப்பேட்டையில் நாளை நடக்கிறது

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்ப டுத்தப்பட உள்ளது.

    இந்தத் திட்டத்தை நாளை 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறார்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் அரசின் முறையான வழிகாட்டுதல்களை பின்பற்றி பல்வேறு கள ஆய்வுகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப ங்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் குடும்ப அட்டை வாரியாக ரேசன் கடை பணியாளர்கள் மூலம் பதிவு செய்யப்பட்டது.

    பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு நாளை முதல் ரூ.1000 வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நாளை காலை 10 மணிஅளவில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்து, தொடக்கமாக 2ஆயிரத்து 500 பயனாளிகளுக்கு உரிமை தொகையினை வழங்க உள்ளார்.

    இதில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் தெரிவித்துள்ளார்.

    ×