search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The driver was killed"

    • பகண்டை கூட்டு ரோட்டில் நடந்த விபத்தில் கார் மரத்தில் மோதி டிரைவர் பலியானார்.
    • கார் நிலை தடுமாறி சாலை யோரம் உள்ள மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கண்டாச்சிபுரத்தை அடுத்த குடமரட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 42). டிரைவர். இவர் காரில் பகண்டை கூட்டு ரோட்டில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது புதூர் கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி சாலை யோரம் உள்ள மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கார் டிரைவர் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரெயில் நிலையம் பகு தியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35). டிரைவர். இவர் நேற்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டில் இருந்து சென்றார். அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது திருத்தணி - அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில் அந்த வழியாக வந்த ரெயில் சீனிவாசன் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீ சார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக் கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வளைவில் திரும்பும் போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    களம்பூர் அடுத்த சென்னானந்தல் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் முருகன் (வயது 33). ஆட்டோ டிரைவர்.

    இவரது மனைவி காவியா, 1 வயதில் மகன் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஆரணியிலிருந்து சென்னானந்தல் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆட்டோவுடன் வந்து கொண்டிருந்தார்.

    பெருமாள் என்பவரின் நிலத்திற்கு அருகில் ரோட்டின் வளைவில் திரும்பும் போது ஆட்டோ திடீரென நிலை தடு மாறி கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து களம்பூர் போலீசில் பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    • குடிப்பழக்கம் காரணமாக கணவன்-மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டு வந்தது.
    • கிணற்றில் வெள்ளிங்கிரி உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ஈரோடு:

    ஈரோடு அவல்பூந்துறை, கண்டிக்காட்டு வலசு இந்திரா நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (26). இவரது மனைவி சிவரஞ்சனி (21). இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

    வெள்ளிங்கிரி சொந்தமாக ஜே.சி.பி. எந்திரம் வைத்து டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. குடிப்பழக்கம் காரணமாக கணவன்-மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டு வந்தது.

    இதையடுத்து சிவரஞ்சனி கணவரிடம் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். வெள்ளியங்கிரி அவ்வப்போது மனைவி பார்ப்பதற்காக மாமியார் வீட்டிற்கு சென்று வருவார்.

    வெள்ளியங்கிரி அவ்வப்போது யாரிடம் சொல்லாமல் எங்கேயாவது கோவிலுக்கு சென்று விடுவார். அவர் கோவி லுக்கு செல்லும்போது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விடுவார். பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் வீட்டுக்கு வந்து விடுவார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று குடிபோதையில் மாமியார் வீட்டுக்கு வந்த வெள்ளியங்கிரி சாப்பிட்டு உள்ளார். அப்போது சாப்பாடு சரியில்லை என்று கூறி மனைவியை சத்தம் போட்டு விட்டு வெளியே சென்று விட்டார்.

    மாலை அம்மாபேட்டை அருகே கோனேரிப்பட்டி சாயுபுதோட்டம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். அதனை அவரது மாமியாரும் பார்த்து உள்ளார்.

    அதன் பின்னர் வெள்ளியங்கிரி எங்கையோ சென்று விட்டார். வழக்கம்போல் சிவரஞ்சனி கணவருக்கு போன் செய்த போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. ஒருவேளை கோவிலுக்கு சென்று இருப்பார் என்று கருதிய சிவரஞ்சனி பின்னர் கணவருக்கு போன் செய்யவில்லை.

    இந்நிலையில் சிங்கம்பேட்டை-எரன்கடு ஐயம் தோட்டம் பகுதியில் உள்ள கிணற்றில் வெள்ளிங்கிரி உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அம்மாபேட்டை போலீசார் மற்றும் வெள்ளிங்கிரி உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    போலீசார் விசார ணையில் வெள்ளிங்கிரி குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • படுகாயமடைந்த கிளீனருக்கு தீவிர சிகிச்சை
    • போலீசார் விசாரணை


    ராணிப்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (21) வேன் டிரைவர். அதே வேனில் கிளீனர் வேலை பார்ப்பவர் பிரவீன்குமார்(19).

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லோடு வேனில் காய்கறிகள் ஏற்றிக் கொண்டு சென்னை கோயம்பேடு நோக்கி செல்வதற்காக வந்தனர் .

    ராணிப்பேட்டையில், சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் வந்த போது திடீரென வேனின் பின்பக்க டயர் பழுதடைந்துள்ளது.

    இதை தொடர்ந்து வேனை நிறுத்திவிட்டு டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில் பின்னால் அதிவேகமாக வந்த லாரி லோடு வேன் மீது மோதியது.

    இதில் வேன் டிரைவர் சக்திவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    காயமடைந்த கிளீனர் பிரவீன்குமார் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    விபத்து தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உறவினர் வீட்டு விழாவுக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மாரியம்மன் கோவில் பகுதியை சதீஷ் (வயது 35) லாரி டிரைவர்.

    இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆம்பூரில் உள்ள உறவினர் காதணி விழாவுக்கு சென்றார்.

    பின்னர் விழா முடிந்து ஆம்பூர் பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி வந்த வாகனம் சதீஷ் மீது மோதியது.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் சதீஷ்சை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சதீஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவ இடத்திலேயே இறந்தார்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கலசபாக்கம் நடுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது47) வேன் டிரைவர். தனது மோட்டார் சைக்கிளில் வேலூருக்கு நேற்று காலை சென்றார்.

    அவரது பின்னால் திருவண்ணாமலை கோர்ட்டில் அமினா வேலை செய்யும் சொரகுளத்தூர் கண்ணதாசன் அமர்ந்து சென்றார். வண்ணாங்குளம் சுடுகாடு பகுதியில் எதிரே பஸ்ஸூக்கு வழிவிட ரமேஷ் தனது மோட்டார் சைக்கிளை ரோட்டோரமாக சென்றார்.

    பின்னர் சாலையில் பயணம் செய்ய முயன்ற போது எதிர் பாராத விதமாக கீழே விழுந்து இருவரும் படுகாயமடைந்தனர்.இதில் அடிபட்ட ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். கண்ணதாசன் காயத்துடன் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இந்த விபத்து தொடர்பாக கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒருவர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜா அடுத்த நாராயணகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் நேதாஜி (23) நெல் அறுவடை எந்திர டிரைவராக பணியாற்றி வந்தார்.

    வாலாஜா அடுத்த புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (34) இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு தனித்தனி பைக்குகளில் படியம்பாக்கம் தனியார் கேஸ் குடோன் அருகே வந்த போது எதிரே வந்த டிராக்டர் இவர்கள் வந்த பைக்குகள் மீது மோதியது.

    இதனையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் நேதாஜி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மோகன் மேல்சி கிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்ப வம் குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×