என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Modi birthday party"

    • ஆற்காடு நகர பா.ஜ.க சார்பில் நடந்தது
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    ஆற்காடு நகரத் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பிரச்சார பிரிவு மாநில செயலாளர் மனோகரன், வர்த்தக பிரிவு மாவட்ட துணைத் தலைவர் ராஜசேகர், கல்வியாளர் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் ஆச்சி. ரவி, முன்னாள் மாவட்ட துணை தலைவர் லோகநாதன், மண்டல் பொதுச் செயலாளர்கள் சுனில் குமார் சரவணன், நகர பொருளாளர் கமலக்க ண்ணன், நகர துணை தலைவர்கள் ஹேமந்த் சர்மா, குமரவேல், தியாகராஜன், நகர செயலாளர் சுரேஷ். சந்திரசேகர், கல்வியாளர் பிரிவு நகர தலைவர் பி.தினேஷ்குமார், துணைத் தலைவர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பொதுமக்களுக்கு இனிப்புகள், மரக்கன்றுகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் தேசிய, மாநில, மாவட்ட அணி பிரிவு நிர்வாகிகள், மண்டல் நிர்வாகிகள், கிளை தலைவர்கள் உட்பட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×