என் மலர்
உள்ளூர் செய்திகள்

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. வினர் பேரணி
- மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணத்தில் அண்ணாவின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு அரக்கோணம் நகர தி.மு.க செயலாளர் வி.எல்.ஜோதி தலைமையில், தி.மு.க வினர் பேரணியாக எஸ்.ஆர்.கேட் பகுதியில் தொடங்கி பழனி பேட்டை, அம்பேத்கர் நகர், மார்கெட், பழைய பஸ் நிலையம், வழியாக சுவால்பேட்டை பழைய நகராட்சி அலுவலகம் வரை சென்றனர்.
பின்னர் பழைய நகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
உடன் மாவட்ட பொருளாளர் மு.கண்ணையன், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.தமிழ்ச்செல்வன், பசுபதி, முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்குமார், நகர துணை செயலாளர் தமிழ்வாணன், நகர மன்ற அவைத் தலைவர் துரை. சீனிவாசன், நகர மன்ற உறுப்பினர்கள் கே.எம்.பி.பாபு, மாலின் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






