என் மலர்
ராணிப்பேட்டை
- வீட்டின் அறைகள் முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது
- மின்சார ஒயர்கள் உராய்ந்ததில் தீப்பொறி ஏற்பட்டது
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த மேலப்புலம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 56)விவசாயி. இவர் நேற்று இரவு தன்னுடைய வீட்டின் முன் 4 பைக்குகளை நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
பின்னர் நள்ளிரவில் வீட்டின் அறைகள் முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சமையல் அறைக்கு சென்று பார்த்தார். பின்னர் வீட்டின் வெளிப்பகுதியில் இருந்து புகை வருவது கண்டு பிடிக்கட்டது.
இதனையடுத்து வெளியே சென்று பார்த்த போது, வீட்டின் முன்பகுதி வழியாக செல்லும் மின்சார ஒயர்கள் உராய்ந்ததில் தீப்பொறி ஏற்பட்டுள்ளது.
இதனால் வீட்டின் முன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4 பைக்குகளும் தீப்பற்றி புகை மண்டலமாக மாறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார்.
இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அனைக்க முயற்சித்தனர். அதற்குள் 4 வண்டிகளும் எரிந்து சாம்பலாகியது.
இந்த தீ விபத்தில் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏதும் இல்லை. இச்சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று நள்ளிரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக அவளூர் போலிசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்
- கல்வெட்டினை திறந்து வைத்தார்
காவேரிப்பாக்கம்:
வாலாஜா அஐகே உள்ள திருப்பாற்கடல் ஊராட்சியில் உள்ள எஸ்.தேவராஜ் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில், 6 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.
கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு நபார்டு திட்டத்தின் கீழ் திருப்பாற்கடல், வி.கே.மாங்காடு, ஆற்காடு, திமிரி, கலவை, ஒழுகூர், பனப்பாக்கம், புலிவலம், மகேந்திரவாடி, ரெண்டாடி, சோளிங்கர் உள்ளிட்ட 11 பள்ளிகளில் ரூ.18.23 கோடி மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் கல்வெட்டினை திறந்து வைத்து பணியினை தொடங்கி வைத்து பேசினார்.
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர் வெங்கட்ரமணன், உதவி செயற்பொறியாளர் திரிபுரசுந்தரி, முதன்மைக் கல்வி அலுவலர் உஷா. ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், ஓச்சேரி பாலாஜி, தெய்வசிகாமணி, மாவட்ட கவுன்சிலர்கள் மாலதி கணேசன், சக்தி, ஒன்றிய கவுன்சிலர் இந்திராணி சுந்தரம், மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- முனிரத்தினம் எம்.எல்.ஏ. வழங்கினார்
- ரூ.2 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டும் பணியை தொடங்கி வைத்தனர்
காவேரிப்பாக்கம்:
பனப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கும், ஆண்கள் பள்ளி மாணவர்களுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை ஷர்மிளா முன்னிலை வகித்தார். சோளிங்கர் எம்.எல்.ஏ. முனிரத்னம் கலந்துகொண்டு 225 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார்.
முன்னதாக நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.2 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டும் பணியை தொடங்கிவைத்தார். இதில் பேரூராட்சி துணைத்தலைவர் மயூரநாதன், நகர தி.மு.க. செயலாளர் சீனிவாசன், பேரூராட்சி கவுன்சிலர்கள் குலோத்துங்கன், சாரதி, செந்தமிழ்செல்வன், சகிலா விநாயகமூர்த்தி, உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து நெமிலி பேரூராட்சியில் உள்ள அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை சோளிங்கர் எம்.எல்.ஏ. முனிரத்தினம் வழங்கினார்.
இதில் நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன், ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், நகர செயலாளர் ஜனார்த்தனன், நகர இளைஞரணி ராகேஷ் ஜெயின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- குளியல் அறை, தண்ணீர் தொட்டி, துணி துவைக்கும் இடம் ஆகியவற்றுடன் கட்டப்பட்டுள்ளது
- நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பிஞ்சி 11-வது வார்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் ரூ.24லட்சத்து 96ஆயிரம் மதிப்பில் புதியதாக சமூக கழிப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதனை நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத் ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்த சமூக கழிப்பறை கட்டிடம் குளியல் அறை, தண்ணீர் தொட்டி, துணி துவைக்கும் இடம் ஆகியவற்றுடன் கட்டப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் நகரமன்ற துணை தலைவர் ரமேஷ் கர்ணா, நகராட்சி ஆணையாளர் விநாயகம்,பொறியாளர் பரமுராசு, நகர செயலாளர் பூங்காவனம், நகரமன்ற உறுப்பினர்கள் வினோத்,குமார், கோபிகிருஷ்ணன், ஜெயசங்கீதா உள்பட நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- 247 பேர் தேர்வு செய்யப்பட்டனர்
- கலெக்டர் வழங்கினார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனா ளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமில் 380 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் 247 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட 247 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டைகளை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.
மேலும் 162 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்கான பதிவும், 30 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைக்கான பதிவும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மாற்றுத்திறனாளி களுக்கான மாதாந்திர உதவித் தொகை வேண்டி 13 பேரும், வங்கிக் கடனுதவி வேண்டி 22 பேரும்,வேலைவாய்ப்பு வேண்டி 32 பேரும், பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 12 பேரும் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார்உள்பட மருத்துவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி நல அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- பயணிகள் கடும் அவதி
- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அரக்கோணம்:
வேலூரில் கடந்த 17-ந் தேதி நடைபெற்ற தி.மு.க முப்பெரும் விழாவிற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரெயில் மூலம் வந்தார். அப்போது அரக்கோணம் ெரயில் நிலையத்தில் தொண்டர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரெயில் நிலையத்திற்குள் பாதுகாப்பிற்காக 30-க்கும் மேற்பட்ட இரும்பு தடுப்புகள் கொண்டு போலீசார் முதலாவது நடைமேடையில் தடுப்புகளை ஏற்படுத்தினர்.
தற்போது 4 நாட்கள் ஆகியும் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட இரும்பு தடுப்புகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது.
இந்த இரும்பு தடுப்புகள் சிதறி கிடக்கும் முதலாவது பிளாட்பாரம் சென்னையில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்கின்றன.
இப்பகுதியில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.
இதனால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வரும் பயணிகள் குறிப்பாக இரவு நேரங்களில், இரும்பு தடுப்புகளால் பிளாட்பாரத்தில் நடக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
பயணிகள் ரெயிலில் ஏறுவதற்கும் கடும் அவதி அடைகின்றனர்.
எனவே போலீசார் ஆங்காங்கே கிடக்கும் இரும்பு தடுப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- ஒன்றிய குழு தலைவர் ஆய்வு
- ரூ.40 லட்சம் ஒதுக்கீடு
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட பெரப்பேரி ஊராட்சியில் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு சாலை அமைக்கும் பணியை நேரில் ஆய்வு செய்தார். அப்போது பணியை தரமாகவும், விரைவாகவும் முடிக்க ஒப்பந்ததாரிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது ஒன்றியக்குழு துணைத்தலைவர் தீனதயாளன், ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி மகாலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் மணிமேகலை வெங்கடேசன், துணைத்தலைவர் சுமதி ஐயப்பன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
- ரூ.1000 கிடைக்காததால் வந்திருந்தனர்
- உதவி மையத்தில் கலெக்டர் ஆய்வு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக பொது மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்கள் ஆகியவற்றில் உதவி மையங்கள் தொடங்கப்பட்டு நேற்று முதல் செயல்படுகின்றன.
நேற்று வாலாஜா தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பணம் கிடைக்கப்பெறாத பெண்கள் ஏராளமானோர் குவிந்தனர்.
தாலுகா அலுவலகத்தில் குவிந்த பெண்களின் குடும்ப அட்டையை வைத்து செல்போன் செயலியில் சரிபார்த்து உதவி மைய அதிகாரிகள் விண்ணப்பத்தின் நிலை பற்றி தெரிவித்தனர்.
இதில் செல்போன் செயலியில் அதிகாரிகள் விண்ணப்பத்தின் நிலையை அறிய முயன்ற போது சர்வரால் தாமதம் ஏற்பட்டதால் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது தமிழ்நாடு முழுவதும் பணி நடைபெறுவதால் செயலி சர்வரில் கால தாமதம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் வாலாஜா தாலுகா அலுவல கத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறாவர்கள் தங்கள் விண்ணப்பங்களை மேல் முறையீடு செய்தால் கண்டிப்பாக தகவல்கள் சரிபார்க்கப்பட்டு அனைத்து தகுதியான பெண்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்படும். ஆகவே, உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் அச்சப்பட தேவையில்லை என கலெக்டர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது வாலாஜா தாசில்தார் வெங்கடேசன் உடனிருந்தார்.
- ஆற்காடு அரசு ஆண்கள் பள்ளியில் நடந்தது
- புவி வெப்பமடைதல் குறித்தும் விளக்கி பேசினார்
கலவை:
ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச ஓசோன் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அப்சர் பாஷா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட ஜே.ஆர்.சி அமைப்பாளர் க.வே.கிருபானந்தம் கலந்து கொண்டு சர்வதேச ஓசோன் தினம் குறித்தும், புவி வெப்பமடைதல் குறித்தும் விளக்கி பேசினார்.
பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளில் ரசாயனம் உள்ளதால் சாதாரண களிமண் சிலைகளையே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து கிரீன் டிரஸ்ட் இயக்குனரும், ராணிப்பேட்டை மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளருமான நா.மார்க்கசகாயம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இயற்கை வழி பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில் உடற் கல்வி இயக்குனர் பிரபு, பொறியாளர் முகமது அலி, ஜெயக்குமார் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
- பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்
- போலீசார் விசாரணை
திமிரி:
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த பரதராமி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குட்டை புறம்போக்கு இடத்தில் இரவோடு இரவாக சமன் செய்து கல் விநாயகர் சிலை வைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அங்கு பொதுமக்கள் கூடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் நேரில் சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது
- பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்
ராணிப்பேடட்டை:
வாலாஜா நகரில் அணைக்கட்டு சாலையில் பழமைவாய்ந்த ஸ்ரீ சுந்தரவிநாயகர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு ரூ.25 லட்சம். மதிப்பில் 18 அடி உயரத்தில் 3 டன் எடைக்கொண்ட தேர் செய்யப்பட்டு கடந்த 10-ந் தேதி வெள்ளோட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவிலில் சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடைபெற்றது.
பின்னர் மாலையில் முதல் முறையாக தேரோட்டம் நடைபெற்றது.அலங்கரிங்கப்பட்ட நேரில் சுந்தரவிநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வாண வேடிக்கை, மங்கல வாத்தியங்களுடன் தேர் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது .
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றுதேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
- பைக்கில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த தகர குப்பம் கிராமத்தை சேர்ந்த ராபர்ட் மனைவி ஜெபக்குமாரி (வயது 33) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
ராபர்ட்டும், ஜெபகுமாரியும் தனியார் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராபர்ட் மற்றும் ஜெபக்குமாரி ஆகியோர் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பைக்கில் வந்தனர்.
பொன்னை சாலையில் உள்ள அணைக்கட்டு சர்ச் அருகே வந்தபோது ஜெபகுமாரி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயமடைந்தார். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெபக்குமாரி நேற்று இரவு மூளைச்சாவு அடைந்தார்.
இதை தொடர்ந்து ஜெபக்குமாரியின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்து தானம் வழங்கியுள்ளனர்.
விபத்து தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






