search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HELP CENTER"

    • தகுதியுடைய பெண்கள் வங்கிக் கணக்கில் ரூபாய் ஆயிரம் வரவு வைக்கப்பட்டது.
    • மேல்முறையீடு செய்வதற்கு விருப்பம் உள்ளவர்கள் இ-சேவை மையத்தினை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டது

    உடுமலை : 

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 15 -ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதைத் தொடர்ந்து தகுதியுடைய பெண்கள் வங்கிக் கணக்கில் ரூபாய் ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேலும் தகுதி இருந்தும் உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் மற்றும் நிராகரிக்கப்பட்டவர்கள் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளும் வகையில் தாலுகா அலுவலகங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.மேலும் இதற்கென இணையதள வசதியும் ஏற்படுத்தப்பட்டது.அதன்படி நேற்று உடுமலை தாலுகா அலுவலகத்தில் முகாம் அமைக்கப்பட்டது.அப்போது உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன் கலந்து கொண்டு பொதுமக்களின் விண்ணப்பத்தின் நிலையை ஆய்வு செய்தார்.முன்னதாக அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது.அதன்படி ஒவ்வொருவரையும் வரிசையாக அழைத்து சரி பார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது மேல்முறையீடு செய்வதற்கு விருப்பம் உள்ளவர்கள் இ-சேவை மையத்தினை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டது.இதற்கு அரசு சார்பில் கட்டணம் வசூலிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த முகமானது 30 நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது பொதுமக்கள் ஆதார்கார்டு,குடும்ப அட்டையை கொண்டு வந்து சரி பார்த்துக் கொள்ளலாம் என்று வருவாய் துறையினர் தெரிவித்தனர்.முதல் நாளான நேற்று 150 விண்ணப்பதாரர்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. முகாமில் உடுமலை தாசில்தார் ப.சுந்தரம் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ரூ.1000 கிடைக்காததால் வந்திருந்தனர்
    • உதவி மையத்தில் கலெக்டர் ஆய்வு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக பொது மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்கள் ஆகியவற்றில் உதவி மையங்கள் தொடங்கப்பட்டு நேற்று முதல் செயல்படுகின்றன.

    நேற்று வாலாஜா தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பணம் கிடைக்கப்பெறாத பெண்கள் ஏராளமானோர் குவிந்தனர்.

    தாலுகா அலுவலகத்தில் குவிந்த பெண்களின் குடும்ப அட்டையை வைத்து செல்போன் செயலியில் சரிபார்த்து உதவி மைய அதிகாரிகள் விண்ணப்பத்தின் நிலை பற்றி தெரிவித்தனர்.

    இதில் செல்போன் செயலியில் அதிகாரிகள் விண்ணப்பத்தின் நிலையை அறிய முயன்ற போது சர்வரால் தாமதம் ஏற்பட்டதால் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது தமிழ்நாடு முழுவதும் பணி நடைபெறுவதால் செயலி சர்வரில் கால தாமதம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் வாலாஜா தாலுகா அலுவல கத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறாவர்கள் தங்கள் விண்ணப்பங்களை மேல் முறையீடு செய்தால் கண்டிப்பாக தகவல்கள் சரிபார்க்கப்பட்டு அனைத்து தகுதியான பெண்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்படும். ஆகவே, உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் அச்சப்பட தேவையில்லை என கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது வாலாஜா தாசில்தார் வெங்கடேசன் உடனிருந்தார்.

    • நெல்லை மாவட்டத்தில் வழக்குகளை மின்னணு முறையில் பதிவு செய்வதற்கான உதவி மையத்தை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு இன்று திறந்து வைத்தார்.
    • விரைவில் மாவட்டத்தில் உள்ள எல்லா கோர்ட்டுகளிலும் உதவி மையம் தொடங்கப்பட உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வழக்குகளை மின்னணு முறையில் பதிவு செய்வதற்கான உதவி மையத்தை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு இன்று திறந்து வைத்தார்.

    நீதிமன்றங்களில் எல்லா பதிவுகளும் மின்னனு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், வழக்குகளை

    மின்னணு முறையில் பதிவு செய்வதற்காக இந்த உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், இது வரை 2 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் மாவட்டத்தில் உள்ள எல்லா கோர்ட்டுகளிலும் உதவி மையம் தொடங்கப்பட உள்ளது.இந்த மையங்கள் மூலம் கோர்ட்டுக்கு வரும் மக்கள், வழக்கு தொடர்பாக தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

    மேலும், மக்களுக்கு அவர்களின் செல்போன் மூலம் வழக்கு விவரங்கள் குறித்தும், கோர்ட் செயல்பாடுகள் குறித்தும் அறிந்து கொள்ள உதவுவது உட்பட பல சேவைகள் இந்த மையங்கள் மூலம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி மையம் திறக்கப்பட்டது.
    • 15-ந் தேதி வரை செயல்படும்

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு இணையவழி மூலம் விண்ணப்பிக்கவேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு உதவும் வகையில் பெரம்பலுர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மையம் வரும் 15ம்தேதி வரை செயல்படும். உதவி மைய எண் 98406 93775.

    எனவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு இணையவழி மூலம் விண்ணப்பிக்க ஏற்படும் சந்தேகங்களை நேரிலோ அல்லது உதவி மைய எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என எஸ்பி மணி தெரிவித்துள்ளார்.

    ×