நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உதவி மையம் திறப்பு

நெல்லை மாவட்டத்தில் வழக்குகளை மின்னணு முறையில் பதிவு செய்வதற்கான உதவி மையத்தை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு இன்று திறந்து வைத்தார்.விரைவில் மாவட்டத்தில் உள்ள எல்லா கோர்ட்டுகளிலும் உதவி மையம் தொடங்கப்பட உள்ளது.
உதவி மையத்தை  மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு திறந்து வைத்தபோது எடுத்தபடம்
உதவி மையத்தை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு திறந்து வைத்தபோது எடுத்தபடம்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் வழக்குகளை மின்னணு முறையில் பதிவு செய்வதற்கான உதவி மையத்தை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு இன்று திறந்து வைத்தார்.

நீதிமன்றங்களில் எல்லா பதிவுகளும் மின்னனு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், வழக்குகளை

மின்னணு முறையில் பதிவு செய்வதற்காக இந்த உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், இது வரை 2 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் மாவட்டத்தில் உள்ள எல்லா கோர்ட்டுகளிலும் உதவி மையம் தொடங்கப்பட உள்ளது.இந்த மையங்கள் மூலம் கோர்ட்டுக்கு வரும் மக்கள், வழக்கு தொடர்பாக தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

மேலும், மக்களுக்கு அவர்களின் செல்போன் மூலம் வழக்கு விவரங்கள் குறித்தும், கோர்ட் செயல்பாடுகள் குறித்தும் அறிந்து கொள்ள உதவுவது உட்பட பல சேவைகள் இந்த மையங்கள் மூலம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com