என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ozone Day Awareness"

    • ஆற்காடு அரசு ஆண்கள் பள்ளியில் நடந்தது
    • புவி வெப்பமடைதல் குறித்தும் விளக்கி பேசினார்

    கலவை:

    ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச ஓசோன் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அப்சர் பாஷா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட ஜே.ஆர்.சி அமைப்பாளர் க.வே.கிருபானந்தம் கலந்து கொண்டு சர்வதேச ஓசோன் தினம் குறித்தும், புவி வெப்பமடைதல் குறித்தும் விளக்கி பேசினார்.

    பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளில் ரசாயனம் உள்ளதால் சாதாரண களிமண் சிலைகளையே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து கிரீன் டிரஸ்ட் இயக்குனரும், ராணிப்பேட்டை மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளருமான நா.மார்க்கசகாயம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இயற்கை வழி பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இதில் உடற் கல்வி இயக்குனர் பிரபு, பொறியாளர் முகமது அலி, ஜெயக்குமார் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    ×