மின் கசிவால் 4 பைக்குகள் எரிந்து நாசம்

வீட்டின் அறைகள் முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டதுமின்சார ஒயர்கள் உராய்ந்ததில் தீப்பொறி ஏற்பட்டது
மின் கசிவால் 4 பைக்குகள் எரிந்து நாசம்
Published on

காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த மேலப்புலம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 56)விவசாயி. இவர் நேற்று இரவு தன்னுடைய வீட்டின் முன் 4 பைக்குகளை நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.

பின்னர் நள்ளிரவில் வீட்டின் அறைகள் முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சமையல் அறைக்கு சென்று பார்த்தார். பின்னர் வீட்டின் வெளிப்பகுதியில் இருந்து புகை வருவது கண்டு பிடிக்கட்டது.

இதனையடுத்து வெளியே சென்று பார்த்த போது, வீட்டின் முன்பகுதி வழியாக செல்லும் மின்சார ஒயர்கள் உராய்ந்ததில் தீப்பொறி ஏற்பட்டுள்ளது.

இதனால் வீட்டின் முன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4 பைக்குகளும் தீப்பற்றி புகை மண்டலமாக மாறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அனைக்க முயற்சித்தனர். அதற்குள் 4 வண்டிகளும் எரிந்து சாம்பலாகியது.

இந்த தீ விபத்தில் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏதும் இல்லை. இச்சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று நள்ளிரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக அவளூர் போலிசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.        

X

Maalai Malar
www.maalaimalar.com