என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி வளாகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடக்க விழா
- கலெக்டர் தகவல்
- ராணிப்பேட்டையில் நாளை நடக்கிறது
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்ப டுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தை நாளை 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் அரசின் முறையான வழிகாட்டுதல்களை பின்பற்றி பல்வேறு கள ஆய்வுகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப ங்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் குடும்ப அட்டை வாரியாக ரேசன் கடை பணியாளர்கள் மூலம் பதிவு செய்யப்பட்டது.
பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு நாளை முதல் ரூ.1000 வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நாளை காலை 10 மணிஅளவில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்து, தொடக்கமாக 2ஆயிரத்து 500 பயனாளிகளுக்கு உரிமை தொகையினை வழங்க உள்ளார்.
இதில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் தெரிவித்துள்ளார்.






