search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
    X

    மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்

    • அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
    • தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி வருகிற செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் அன்று மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார்.

    அதன்படி அன்று ராணிப்பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2ஆயிரத்து 500 பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இதில் உள்ளாட்சி பிரதிநிகள் கலந்து கொள்ள வேண்டும்.

    வருகிற 17-ந்தேதி கந்தனேரியில் நடைபெறும் நடைபெறும் முப்பெரும் விழாவில் நிர்வாகிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார். கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவ ட்டத்தில் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது.

    வேலூர் மாவட்டம், பள்ளி கொண்டா அருகே கந்தனேரியில் தி.மு.க. தலைவர், தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. இளைஞர் அணி செயலாளர்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் முப்பெரும் விழாவில் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் திரளாக கலந்து கொள்வது.

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ராணி ப்பேட்டை மாவட்டத்தில் விழா நடைபெறாத பகுதிகளிலும் சிறப்பாக நடத்திட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி, தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய , நகர,பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×