என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • வார்டு உறுப்பினர்கள் குறைகளை தெரிவித்தனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நகர மன்ற தலைவர் முகமது அமீன் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தனர்.

    கூட்டத்தில், துணைத் தலைவர் குல்சர் அகமது, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு)சந்தானம், பணி மேற்பார்வையாளர் கமலக்கண்ணன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்
    • 26 பேருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி ஒன்றியம் காவனூரில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி னார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் காவனூர், புங்கனூர், பட்டினம், வரகூர், குப்பம், வெங்கடாபுரம் இன் னும் பல கிராம மக்கள் பயன் பெறுவார்கள்.

    வெங்கடாபுரம் போன்ற மலைப்பகுதி மக்கள் அவசர சிகிச்சைபெற வேண்டும் என்றால் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விளாப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டி உள்ளது.

    தற்போது இந்த மருத்துவ மனை தொடங்கப்பட்டால் அவசரகால சிகிச்சைகள், பிரசவங்கள், விஷ பூச்சி, விஷ பாம்பு கடிகள் போன்ற அவசர சிகிச்சைகளை இப்பகுதி மக்களால் விரைவில் பெற முடியும்.

    பொதுமக்களின் அடிப் படை வசதிகளை நிறை வேற்றி தருவதில் முதல்- அமைச்சர் மிகவும் முக்கியத் துவம் அளிக்கிறார். பெண்கள் சுலபமாக தொழில் தொடங்கிடவும், தன்னிறைவு பெற்று சுய மரியாதையுடன் வாழ்ந்திடவும் அதிகளவில் மகளிர் சுய உதவிக்கு ழுக்களுக்கு கடன்களை வழங்கி வருகின்றார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு தனியார் இடத்தினை விலைக்கு வாங்க நன்கொடை வழங்கிய 26 பேருக்கு அமைச்சர் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.

    இப்பணிக்காக முதன் முதலில் காவனூர் இந்திரா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி நிர்வாகி ஆர்.சேட்டு ரூ.1 லட்சம் வழங்கினார். அதன் பிறகு ஆற்காடு எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் தங்களது பங்களிப்பை அளித்தனர்.

    நிகழ்ச்சியில் ஆற்காடு தொகுதி ஜெ.எல்.ஈஸ்வரப் பன் எம்.எல்.ஏ., சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மணிமாறன், ஒன்றியக் குழு தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் தன்ராஜ், வட்டார மருத்துவ அலுவலர் கிரிஜா, பொதுப்ப ணித்துறை உதவி செயற்பொ றியாளர் திரிபுர சுந்தரி, வட் டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சித்குமார், ஆர் சேட்டு, பி. வடமலை, எஸ் ஆறுமுகம், பி.பொன்னரசன் பி.மகேந்திரன், கே.ஆர்.சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பதிவேடுகள் சோதனை செய்யப்பட்டது
    • குறைகளை கேட்டறிந்தார்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை போலீஸ் நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு திடீரென ஆய்வு செய்தார்.

    அப்போது போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் வழக்குகள், பதிவேடுகள், போலீஸ் நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்ததோடு போலீசாரின் குறைகளையும் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணமூர்த்தி, உஷா, சூரியா, சங்கர், உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • ராணிப்பேட்டை நகர மன்ற கூட்டம் நடந்தது
    • பெண் கவுன்சிலர் வாயில் பிளாஸ்டிக் ஒட்டிக்கொண்டு எதிர்ப்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகர மன்ற கூட்டம் தலைவர் சுஜா தாவினோத் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் விநாயகம் முன்னிலை வகித்தார். நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை களை தெரிவித்தனர்.

    கூட்டத்தில் குடும்ப தலை விகளுக்கு மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை திட் டத்தினை செயல்படுத்தியுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ராணிப் பேட்டை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திய அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையத் திற்கு தேவையான நூல்கள் கொள்முதல் செய்ய விலை நிர்ணயக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட பதிப்பகத்தாரர்கள், வெளியீட்டாளர்கள் மூலம் புத்தகங்கள் வினியோகம் செய்ய ரூ.10 லட்சம் செலுத்துவது, நகராட்சிக்கு சொந்தமான 16 கடைகளுக்கு நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாததால் வருவாய் ஆய்வாளர் மூலம் சீல் வைக்கப்பட்டது. இந்த கடைகளின் உரிமத்தை ரத்து செய்து பொது ஏலம் விடவும், கடை வாடகை செலுத்தாதவர்கள் மீது கோர்ட்டு மூலம் வழக்கு தொடர்ந்து வசூல் செய்ய நடவடிக்கை மேற்கொள்வது என்பது உள்ளிட்ட 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    26-வது வார்டு அ.தி.மு.க. நகரமன்ற உறுப்பினர் ஜோதி சேதுராமன், தனது வார்டில் நீண்ட நாட்களாக வைக்கப்படும் கோரிக்கைகள் நிறை வேற்றப்படவில்லை என கூறி தனது வாயில் துணியை வைத்து, அதன்மீது பிளாஸ் டிக்கால் ஒட்டிக் கொண்டு கூட்டத்தில் பங்கேற்று நூதன முறையில் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

    அப்போது எங்கள் வார்டில் மின்விளக்கு எரிவதில்லை, நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் ராணிப்பேட்டை நகரத்தில் உள்ள 30 வார்டுகளிலும் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் போக்குவரத்து பாதிப்பு, விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என கூறினார்.

    இதற்கு பதில் அளித்த நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆழ்துளை கிணறு அமைக்க இடம் தேர்வு செய்து கொடுத்தால் உடனடியாக ஆழ்துளை கிணறு அமைத்துத் தரப்படும் எனவும் மற்ற கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

    • மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளூர் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் பிரதாப் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து பேசினார்.

    பின்னர் திட்டப் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார். இந்த சிறப்பு மருத்துவ முகாமில், பொது மருத்துவம், இருதய சிகிச்சை பிரிவு, மகப்பேறுமருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்து, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் நெமிலி ஒன்றியக்குழு துணை தலைவர் தீனதயாளன், வட்டார மருத்துவ அலுவலர் ரதி, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், ஊராட்சி மன்றத் துணை அம்சா மாசிலாமணி, சுகாதார ஆய்வாளர்கள் பெருமாள், பூஞ்செழியன், தேவநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், சுகாதர செவிலியர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • போலீசார் சோதனையில் சிக்கினார்
    • 520 பாட்டில்களை பறிமுதல்

    காவேரிப்பாக்கம்:

    ஒச்சேரி அருகே மாமண்டூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே உள்ள பெட்டிக்கடையில் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பதாக அவளூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்று அவளூர் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் அரசு மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வந்த, கடையின் உரிமையாளரான மாமண்டூரை சேர்ந்த குட்டி என்பவரை கைது செய்தனர். மேலும் ரூ.67 ஆயிரம் மதிப்பிலான 520 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • வினாடிக்கு 1350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
    • நீர்வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக வாலாஜா அருகே உள்ள பாலாறு அணைக்கட்டு தடுப்ப ணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    இதனால் பாலாறு அணைக்கட்டில் நீர் தேங்கி பரந்து விரிந்து கடல் போல்காட்சி அளிக்கிறது.

    நீர் வரத்து அதிக ரித்துள்ளதை தொடர்ந்து பாலாறு அணைக்கட்டு தடுப்பணையிலிருந்து பாசன கால்வாய்கள் மூலம் வினாடிக்கு 1350 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதன்படி காவேரிப்பாக்கம் பெரிய ஏரிக்கு 280 கன அடி, மகேந்திரவாடி ஏரிக்கு 268 கன அடி, சக்கரமல்லூர் ஏரிக்கு 110 கன அடி, தூசி ஏரிக்கு 692 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • தோல் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தோல் தொழிற்சாலையில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நசீப் கான் (வயது 22) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் வழக்கம்போல் நசீப் கான் பணியில் ஈடுபட்டிருந்த போது தொழிற்சாலை இயந்திரத்தை இயக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட நசீப்கான் மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் நசீப்கான் வரும் வழியி லேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சு.ரவி எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே குருராஜபேட்டையில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் பஸ் நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் ஜி.இ.செல்வம் தலைமை தாங்கினார். அ.தி.மு.க ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

    அப்போது ஒன்றிய செயலாளர்கள் பழனி, பிரகாஷ் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • கோவிந்தா என கோஷத்துடன் பக்தர்கள் வணங்கினர்
    • சர்வ அலங்காரம் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தப்பட்டது

    அரக்கோணம்:

    அரக்கோணம் பஜார் பகுதியில் உள்ள பக்தர்கள் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையில் திருப்பதிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டு 12-வது ஆண்டாக பாதயாத்திரை செல்கின்றனர்.

    முன்னதாக ஸ்ரீதிருப்பதி திருமலை பாதயாத்திரை குழுவினர் சார்பாக ஸ்ரீசீனிவாச பெருமாள் சர்வ அலங்காரம் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தி 1008 லட்டுகள் கொண்டு உருவாக்கப்பட்ட மாலை அணிவித்து தீபாராதனை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா என கோஷம் எழுப்பி பெருமாளை வணங்கினர். 1008 லட்டுகளால் உருவாக்கப்பட்ட மாலையில் உள்ள ஸ்ரீசீனிவாச பெருமாளை திரளான பக்தர்கள் வியப்புடன் பார்த்து வணங்கி சென்றனர்கள்.

    • டி.ஐ.ஜி. வழங்கினார்
    • 36 மனுக்கள் பெறப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

    \கூட்டத்திற்கு வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மொத்தம் 36 மனுக்கள் பெற்று, மனுக்களின் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விஸ்வே ஸ்வரய்யா, குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    பின்னர் நடைபெற்ற மாதாந்திர சரக குற்றகலந்தாய்வு கூட்டத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, விநாயகர் சதுர்த்தி விழா எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனை களின்றி அமைதியாக நடந்தமைக்காக போலீஸ் சூப்பிரண்டுகள் வேலூர் மணிவண்ணன், திருவண்ணாமலை கார்த்திகேயன், திருப்பத்தூர் ஆல்பர்ட் ஜான், ராணிப்பேட்டை கிரண் ஸ்ருதி ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    இதில் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    • நெமிலி ஒன்றியக்குழு தலைவர் தொடங்கி வைத்தார்
    • பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டினார்

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட சயனபுரம் ஊராட்சியில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றதலைவர் பவானி வடிவேலு தலைமை தாங்கினார்.

    முன்னதாக சயனபுரம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ரேஷன் கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு கலந்துகொண்டு கடையை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 15-வது நிதிக்குழு மானியத்திலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் மாணவர்களுக்கான கழிவறை கட்டிடம் கட்டும்பணியும், அரசினர் மேல்நிலை பள்ளியில் 15-வது நிதிக்குழு மானியத்திலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் மாணவர்களுக்கான கழிவறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுகன்யா ரவி,

    ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×