என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்து மக்கள் கட்சி செயற்குழு கூட்டம்
    X

    இந்து மக்கள் கட்சி செயற்குழு கூட்டம்

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
    • ஆன்மீக நூல்கள் வழங்கப்பட்டது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில், இந்து மக்கள் கட்சி சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. வேலூர் கோட்ட தலைவர் எஸ்.கே.மோகன் தலைமை தாங்கினார்.

    மாநில துணை செயலாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பார்த்திபன் வரவேற்றார். இதில் மாநில செயலாளர் கண்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    இக்கூட்டத்தில் வாலாஜா ஒன்றியத்திற்கு உட்பட்ட திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பயன்பாட்டில் உள்ள நிலத்தை மீட்டெடுத்து, பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன. இதனையடுத்து பொது மக்களுக்கு பகவத்கீதை, கருடபுராணம் உள்ளிட்ட ஆன்மீக நூல்கள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×