என் மலர்
ராணிப்பேட்டை
- வருகிற 7-ந் தேதி நடக்கிறது
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வன உயிரின வார விழாவை ஒட்டி வனத்துறை சார்பில் வருகிற 7-ந்தேதி காலை 9 மணியள வில் கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்க ளுக்கான ஓவிய போட்டி, வினாடிவினா மற்றும் சொற்பொழிவு போட்டிகள் நடைபெறுகிறது.
ஓவியப் போட்டியானது வனவிலங்கு பாதுகாப்பு என்ற தலைப்பில் எல்.கே.ஜி முதல் 1-ம் வகுப்பு வரை , 2 முதல் 5- ம் வகுப்பு,6 முதல் 8-ம் வகுப்பு , 9 முதல் பிளஸ்-2 மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் தனி, தனி பிரிவாக நடக்கிறது.
அதேபோல் சுற்றுச்சூழல் காடு மற்றும் வனவிலங்கு என்ற தலைப்பில் வினாடி வினா போட்டியும், வனவிலங்கு பாதுகாப்பு என்ற தலைப்பிலும் 6 முதல் 9-ம் வகுப்பு,10 முதல் 12-ம் வகுப்பு, கல்லூரி மாண வர்கள் என 3 பிரிவுகளில் சொற்பொழிவு போட்டியும் நடைபெறுகிறது.
ஆர்வமுள்ள மாண வர்கள் இந்த போட்டி களில் கலந்து கொள்ளுமாறு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த மேல குப்பம் கொள்ளை மேடுவை சேர்ந்தவர் கோபி (வயது 53). விவசாயி.
கடந்த 2-ந் தேதி வீட்டில் இருந்தபோது விஷ குளவி கோபியை கொட்டி உள்ளது. வலியால் அலறி துடித்த அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கோபி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ரத்தினகிரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கோபி உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- ஏராளமான விவசாயிகள் கலந்து கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம்,பாணாவரம் அடுத்த வெளிதாங்கிபுரம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் தணிகைமலை, வார்டு உறுப்பினர் செல்லப்பன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பளாராக மாவட்ட ஊராட்சிக்குழு மற்றும் திட்டகுழு உறுப்பினர் சுந்தரம்மாள், நெமிலி ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வெளிதாங்கிபுரம் மக்கள் அளித்த கோரிக்கை மனுவில்,'எங்கள் பகுதியில் 1,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
வெளிதாங்கிபுரம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளனர். இங்குள்ள விவசாயிகள் வங்கி கடன், பயிர் கடன் பெறவும், மாணவர்கள் கல்வி கடன் பெறவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கி தேவைப்படுகிறது.மேலும், வெளிதாங்கிபுரம் கிராமத்தில் ஏழை மக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர்.
இந்ததிட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வங்கி கணக்கை துவக்க ஏதுவாக, இந்தியன் வங்கியின் கிளையை வெளிதாங்கிபுரத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
- மகன் இறந்த துக்கத்தில் விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த கல்புதூர் கிராமம் முதல் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன், இவரது மனைவி தாமரைசெல்வி(60).
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தம்பதியினரின் மகன் இறந்து விட்டார்.
இதனால் தாமரைசெல்வி மனஉளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 1ம் தேதி அன்று காலை வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த தாமரைசெல்வி சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தாமரைசெல்வி விஷ செடியை அறைத்து குடித்து இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தாமரைசெல்வி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை
- நாளை நடக்கிறது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தி.மு.க.வின் ஒன்றிய,நகர,பேரூர் இளைஞரணி அமைப்பிற்கு விண்ணபித்தவர்களுக்கு நேர்காணல் நடைபெறுவது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், அமைச்ச ருமான ஆர்.காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி அமைப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு, மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நாளை காலை 8 மணிக்கு வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில்நேர்காணல் நடைபெற உள்ளது.
எனவே ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பொறுப்பிற்கு விண்ண ப்பித்த அனைவரும் தங்களது ஆதார் கார்டு, வயது சான்றிதழ்,கட்சி இளைஞர் அணி உறுப்பினர் கார்டு, தாங்கள் இதுவரை இளைஞர் அணியில் செயலாற்றிய தகவல்க ளுடன் நேர்காணலில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வடமாநிலத்தை சேர்ந்தவர்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
ராணிப்பேட்டை:
சோளிங்கர் தாலுகா பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் பெங்க ளூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலை பணிக்கு தேவைப் படும் கற்களை உருவாக்கும் பணியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிலர் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தன்று இரவு தள்ளு வண்டியில் பிஜேந்திரசிங்சர்தார் (வயது 33) உள்பட 3 பேர் கல்லை ஏற்றிக்கொண்டு வண்டியை தள்ளி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பிஜேந்திரசிங் தடுமாறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சக தொழிலாளர்கள் வேன் மூலம் ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார்.
விபத்து குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் டவுன் ஹால் தெரு பகுதியில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரது வீடு உள்ளது.
இவர் சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று அதிகாலை அரக்கோணத்தில் உள்ள வீட்டில் மர்ம கும்பல் புகுந்துள்ளது.
அப்போது வீட்டின் கதவை மர்ம கும்பல் உடைக்க முயன்றனர். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அதற்குள் மர்ம கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
போலீசார் சம் பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், வீட்டில் எவ்வித பொருட் களும் திருடு போக வில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கலவை:
ஆற்காட்டில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி விழா அறக்கட்டளை உடன் இணைந்து ஏ.பி.ஜே அறக்கட்டளை சார்பாக ஓவியப்போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் இந்திரா நர்சரி பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு ஏ.பி.ஜே அறக்கட்டளை சார்பாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட வணிக சங்க பேரமைப்பு தலைவர் சரவணன், ரோட்டரி மாவட்ட தலைவர் பரத்குமார், வணிகர் சங்க நகர செயலாளர் பாஸ்கரன், பள்ளி தாளாளர் சேட்டு, தொழிலதிபர் தர்மிச்சந்த் மற்றும் ஆசிரியர் இங்கர்சல் அறக்கட்டளை தலைவர் கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- போலீசார் விசாரணை
- வடமாநிலத்தை சேர்ந்தவர்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த நக ரிகுப்பத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர் வானவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பயிற்சிக் குப்பின் அவர்கள் விமான நிலையம், துறைமுகம், அணு உலைகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களில் பாது காப்பு பணியில் ஈடுபடுவார்.
இந்தநிலையில், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தினேஷ் சிங் என்பவ ரது மகள் சோனம் சிங் (வயது 23) என்பவர் பயிற்சி பெற்று வருகிறார்.
அவரது சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட மாநிலத் திற்கு அனுப்பி சரிபார்த்தபோது சான்றிதழ் போலியானது என்பது தெரிய வந்தது.
இது குறித்து மத்திய தொழிற் பாது காப்பு படை இன்ஸ்பெக்டர் சிவபத்மா தக்கோலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற்றது
- தூய்மை பணியாளர்களும் கலந்துகொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பேரூராட்சியில் நேற்று தூய்மை பணி நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா சீனிவாசன் தலைமை தாங்கி தூய்மை சேவைபணியை தொடங்கி வைத்தார்.பேரூராட்சி செயல் அலுவலர் குமார் முன்னிலை வகித்தார்.
முன்னதாக பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை சேவைபணிக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.
பின்பு பேரூராட்சியில் உள்ள பஸ் நிலையம், மருத்துவமனை, பள்ளி வளாகம், அனைத்து வீதிகளிலும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நாட்டுநல பணிதிட்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணியும் தூய்மை பணியா ளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற்றது.
தூய்மை பணி குறித்து ஓவியப்போட்டி பனப்பாக்கம் அரசு மாதிரி பள்ளியில் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் என்.ஆர்.சீனிவாசன், கோகிலா, ராஜேஸ்வரி, சஞ்சீவி, சகிலா விநாயகமூர்த்தி, சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் ஷர்மிளா, சுகாதார மேற்பார்வை யாளர் பிரவீன்குமார், உதவி தலைமை ஆசிரியர் செந்திக்குமார் மற்றும் தூய்மை பணியாளர்களும் கலந்துகொண்டனர்.
- ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்
- ஜெயலலிதா படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக எஸ்.எம். சுகுமார் நியமிக்க ப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து அவர் மாவட்டத்திற்குட்பட்ட நகர, ஒன்றிய, பேரூராட்சி களில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று தலைவர்களின் சிலைகள், படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து நேற்று வாலாஜாவில் நகரம் மற்றும் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் நகர செயலாளர் டபிள்யு.ஜி மோகன், ஒன்றிய செயலாளர் வி.கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமாருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
வாலாஜா நகராட்சி அருகில் எம்.ஜி.ஆர். சிலை மற்றும் ஜெயலலிதா படத்திற்கும் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து கட்சியி னருடன் ஊர்வலமாக சென்று, வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர், பெரியார், அண்ணா சிலைகளுக்கும், அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கும். மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேசினார்.
பின்னர் அம்மூரில் பேரூராட்சி செயலாளர் தினகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கலந்து கொண்டு, எம்.ஜி.ஆர் சிலை, ஜெயலலிதா படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி.ஏழுமலை உள்பட கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள்,பிற அணிகளின் நிர்வாகிகள் உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
வாலாஜாவில், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. வன்னியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் பஸ்நிலையத்தில் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்திற்கு வாலாஜா நகர பா.ம.க.செயலாளர் எல்.ஞானசேகர் தலைமை தாங்கி பேசினார்.
வாலாஜா தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ரவி, வாலாஜா நகர தலைவர் நரேஷ் உள்பட பா.ம.க மற்றும் வன்னியர் சங்கத்தின் நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் ரஜினி சக்கரவர்த்தி வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, மாநில செயலாளர் தி.க.ராஜா, பா.ம.க. மாவட்ட செயலாளர் ப.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மாவட்ட பொருளாளர் ஞானசவுந்தரி, மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் மணிவண்ணன், மாவட்ட தலைவர் லட்சுமணன், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் பா.ம.க மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வாலாஜா வடகிழக்கு ஒன்றிய செயலாளர் பாலாஜி நன்றிகூறினார்.






