என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எவ்வித பொருட் களும் திருடு போக வில்லை"

    • சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் டவுன் ஹால் தெரு பகுதியில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரது வீடு உள்ளது.

    இவர் சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று அதிகாலை அரக்கோணத்தில் உள்ள வீட்டில் மர்ம கும்பல் புகுந்துள்ளது.

    அப்போது வீட்டின் கதவை மர்ம கும்பல் உடைக்க முயன்றனர். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அதற்குள் மர்ம கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    போலீசார் சம் பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், வீட்டில் எவ்வித பொருட் களும் திருடு போக வில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இருப்பினும், ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×