என் மலர்
நீங்கள் தேடியது "மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்"
- ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்
- ஜெயலலிதா படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக எஸ்.எம். சுகுமார் நியமிக்க ப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து அவர் மாவட்டத்திற்குட்பட்ட நகர, ஒன்றிய, பேரூராட்சி களில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று தலைவர்களின் சிலைகள், படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து நேற்று வாலாஜாவில் நகரம் மற்றும் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் நகர செயலாளர் டபிள்யு.ஜி மோகன், ஒன்றிய செயலாளர் வி.கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமாருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
வாலாஜா நகராட்சி அருகில் எம்.ஜி.ஆர். சிலை மற்றும் ஜெயலலிதா படத்திற்கும் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து கட்சியி னருடன் ஊர்வலமாக சென்று, வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர், பெரியார், அண்ணா சிலைகளுக்கும், அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கும். மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேசினார்.
பின்னர் அம்மூரில் பேரூராட்சி செயலாளர் தினகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கலந்து கொண்டு, எம்.ஜி.ஆர் சிலை, ஜெயலலிதா படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி.ஏழுமலை உள்பட கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள்,பிற அணிகளின் நிர்வாகிகள் உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.






