என் மலர்
ராணிப்பேட்டை
- ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு
- திட்டங்கள் குறித்து அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்
ராணிப்பேட்டை:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிலவரங்கள் குறித்து அனைத்துத் துறை அலுவ லர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வளர்மதி பேசியதாவது:-
முதல்வரின் முகவரி திட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. மனுக்களுக்கு 40 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும்.
மேலும், நிலுவையில் உள்ள மனுக்களுக்கு உடனடி தீர்வும், பதில் மனுக்களுக்கு நேர்மையான பதில்கள் இருப்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த மனுக்கள் மீது தலைமையிடத்திலிருந்து நேரடியாக மனுதாரரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே இதில் அனைத்து துறை அலுவலர்களும் சரியான தீர்வு மேற்கொள்ள வேண்டும்.
தற்போது பரவி வரும் காய்ச்சல் பாதிப்பினை கட்டுப்படுத்த அனைத்து தனியார் மருத்துவ மனைகளிலும் காய்ச்சல் சிகிச்சைக்கு வரும் நோயாளி களின் விவரங்களை சேகரித்து கண்காணிக்க வேண்டும்.
மழை பருவ காலங்களில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்பு குறித்த தகவல்களை உடனுக்குடன் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டுகள் வருகின்றது. தனியார் மருத்துவமனைகள் கட்டாயம் இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு அறிவுரைகளை வழங்கிட வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதி திட்டப்பணிகள் நிலுவையில் இருப்பதை உடனடியாக முடிக்க வேண்டும்.
மேலும் சிறப்பு செயலாக்க திட்டங்கள், காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து அடிக்கடி ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை
- பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்
காவேரிப்பாக்கம்:-
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்று காலை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கிருந்த வழக்குகள் தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கோப்புகளை சரிவர பராமரிக்க வேண்டும் பொதுமக்களிடம் வரும் புகார்களை விரைவாக முடிக்க வேண்டும் எந்தவித புகார்களை நிலுவையில் வைக்கக்கூடாது போலீஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்.
பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும், போலீஸ் நிலையத்தையும் மற்றும் வளாகத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது ஏ.டி.எஸ்.பி விஸ்வேஸ்வரய்யா, அரக்கோணம் டி.எஸ்.பி.ரவிச்சந்திரன், காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்- இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அருள்மொழி, எஸ்.எஸ்.ஐ பிச்சாண்டி உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.
- ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சாமி அபிஷேகம்
- 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
அரக்கோணம்:-
அரக்கோணத்தில் உள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சாமி கோவிலில் ராமலிங்க அடிகளாரின் 200-வது பிறந்த நாளையொட்டி சன்மார்க்க கொடியேற்றப்பட்டது. பின்னர் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு பால், தயிர், இளநீர், தேன், பன்னீர், சந்தனம், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
இதனையடுத்து பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சுப்பிரமணியர் மற்றும் வள்ளலாருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் திருப்புகழ் திருவருட்பா சபை சார்பில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- அடிப்படை வசதிகள் இல்லை
- நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி
அரக்கோணம்:-
அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தில் இருளர் இன மக்கள் வசிக்கும் காலணி உள்ளது. இங்கு 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அசத்து வருகின்றனர்.அவர்கள் வசிக்கும் பகுதி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இங்கு அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் அதே பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் சமூக நலத்துறைக்கு சொந்தமான பகுதியில் இடம் தந்து பட்டா வழங்க வேண்டும் எனகூறி சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மக்களிடம் தாசில்தார் சண்முகசுந்தரம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து கலைந்து சென்றனர்.
- மாணவிகளுக்கு கேடயங்களை வழங்கி பாராட்டு
- பனப்பாக்கம் அரசு பள்ளியில் நடந்தது
காவேரிப்பாக்கம்:-
ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் ஒரு வாரம் நடைபெற்றது. இதன் நிறைவு விழா நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷர்மிளா தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன் கலந்துகொண்டு முகாமில் சேவை செய்த மாணவிகளுக்கு கேடயங்களை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் மயூரநாதன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ரேகா, முன்னாள் தலைமை ஆசிரியை இளவரசி, நெமிலி முதல்நிலை காவலர் தனசேகர், உதவி தலைமை ஆசிரியர்
செந்தில்குமார், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
- 6 பேர் கைது
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
நெமிலியை அடுத்த கீழ்வெங் கடாபுரம் கிராமத்தில் செல் லும் கொசஸ்தலை ஆற்றில் நேற்று முன்தினம் இரவு மாம பர்கள் மாட்டு வண்டியில் மணல் திருடுவதாகவருவாய் மற்றும் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. இதையடுத்து நெமிலி தாசில்தார் பாலசந்தர், சப்- இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.
அப்போது மாட்டுவண்டி களில் மணல் திருட்டில் ஈடு பட்டவர்கள் போலீசார் வரு வதை கண்டவுடன் அங்கி ருந்து தப்பியோட முயன்ற னர். போலீசார் அவர்களை சுற்றிவளைத்தனர்.
பின்னர் 6 மாட்டு வண்டி களை பறிமுதல் செய்தபோலீ சார் அது தொடர்பாக கீழ் வெங்கடாபுரம் கிராமத்தை சார்ந்த ஏழுமலை (வயது 58), கார்த்திக் (30), சரவணன் (22), சதானந்தன் (40), முனுசாமி (58), வேலாயுதம் (54) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்
6 பேர் கைது
போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
நெமிலியை அடுத்த கீழ்வெங் கடாபுரம் கிராமத்தில் செல் லும் கொசஸ்தலை ஆற்றில் நேற்று முன்தினம் இரவு மாம பர்கள் மாட்டு வண்டியில் மணல் திருடுவதாகவருவாய் மற்றும் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. இதையடுத்து நெமிலி தாசில்தார் பாலசந்தர், சப்- இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.
அப்போது மாட்டுவண்டி களில் மணல் திருட்டில் ஈடு பட்டவர்கள் போலீசார் வரு வதை கண்டவுடன் அங்கி ருந்து தப்பியோட முயன்ற னர். போலீசார் அவர்களை சுற்றிவளைத்தனர்.
பின்னர் 6 மாட்டு வண்டி களை பறிமுதல் செய்தபோலீ சார் அது தொடர்பாக கீழ் வெங்கடாபுரம் கிராமத்தை சார்ந்த ஏழுமலை (வயது 58), கார்த்திக் (30), சரவணன் (22), சதானந்தன் (40), முனுசாமி (58), வேலாயுதம் (54) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
- ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார்
- ஏராளமனோர் கலந்து கொண்டனர்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கோ. வரதராசுலு செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நிர்வாக குழு செயலாளர் கே.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
இதில் நிர்வாக குழு துணைத் தலைவர் பி.என்.பக்தவச்சலம் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் எம்.சாந்தி அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிளை வழங்கினார்.
இதில் ஆற்காடு நகர தி.மு.க. நகர செயலாளர் ஏ.வி சரவணன், நகர மன்ற உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட பிரதிநிதிகள் கோபு, சிவா, நகரத் துணைச் செயலாளர்கள் சொக்கலிங்கம், ருக்மணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் முரளிதரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
- வருகிற 7-ந் தேதி நடக்கிறது
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வன உயிரின வார விழாவை ஒட்டி வனத்துறை சார்பில் வருகிற 7-ந்தேதி காலை 9 மணியள வில் கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்க ளுக்கான ஓவிய போட்டி, வினாடிவினா மற்றும் சொற்பொழிவு போட்டிகள் நடைபெறுகிறது.
ஓவியப் போட்டியானது வனவிலங்கு பாதுகாப்பு என்ற தலைப்பில் எல்.கே.ஜி முதல் 1-ம் வகுப்பு வரை , 2 முதல் 5- ம் வகுப்பு,6 முதல் 8-ம் வகுப்பு , 9 முதல் பிளஸ்-2 மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் தனி, தனி பிரிவாக நடக்கிறது.
அதேபோல் சுற்றுச்சூழல் காடு மற்றும் வனவிலங்கு என்ற தலைப்பில் வினாடி வினா போட்டியும், வனவிலங்கு பாதுகாப்பு என்ற தலைப்பிலும் 6 முதல் 9-ம் வகுப்பு,10 முதல் 12-ம் வகுப்பு, கல்லூரி மாண வர்கள் என 3 பிரிவுகளில் சொற்பொழிவு போட்டியும் நடைபெறுகிறது.
ஆர்வமுள்ள மாண வர்கள் இந்த போட்டி களில் கலந்து கொள்ளுமாறு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த மேல குப்பம் கொள்ளை மேடுவை சேர்ந்தவர் கோபி (வயது 53). விவசாயி.
கடந்த 2-ந் தேதி வீட்டில் இருந்தபோது விஷ குளவி கோபியை கொட்டி உள்ளது. வலியால் அலறி துடித்த அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கோபி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ரத்தினகிரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கோபி உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- ஏராளமான விவசாயிகள் கலந்து கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம்,பாணாவரம் அடுத்த வெளிதாங்கிபுரம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் தணிகைமலை, வார்டு உறுப்பினர் செல்லப்பன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பளாராக மாவட்ட ஊராட்சிக்குழு மற்றும் திட்டகுழு உறுப்பினர் சுந்தரம்மாள், நெமிலி ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வெளிதாங்கிபுரம் மக்கள் அளித்த கோரிக்கை மனுவில்,'எங்கள் பகுதியில் 1,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
வெளிதாங்கிபுரம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளனர். இங்குள்ள விவசாயிகள் வங்கி கடன், பயிர் கடன் பெறவும், மாணவர்கள் கல்வி கடன் பெறவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கி தேவைப்படுகிறது.மேலும், வெளிதாங்கிபுரம் கிராமத்தில் ஏழை மக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர்.
இந்ததிட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வங்கி கணக்கை துவக்க ஏதுவாக, இந்தியன் வங்கியின் கிளையை வெளிதாங்கிபுரத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
- மகன் இறந்த துக்கத்தில் விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த கல்புதூர் கிராமம் முதல் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன், இவரது மனைவி தாமரைசெல்வி(60).
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தம்பதியினரின் மகன் இறந்து விட்டார்.
இதனால் தாமரைசெல்வி மனஉளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 1ம் தேதி அன்று காலை வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த தாமரைசெல்வி சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தாமரைசெல்வி விஷ செடியை அறைத்து குடித்து இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தாமரைசெல்வி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை
- நாளை நடக்கிறது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தி.மு.க.வின் ஒன்றிய,நகர,பேரூர் இளைஞரணி அமைப்பிற்கு விண்ணபித்தவர்களுக்கு நேர்காணல் நடைபெறுவது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், அமைச்ச ருமான ஆர்.காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி அமைப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு, மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நாளை காலை 8 மணிக்கு வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில்நேர்காணல் நடைபெற உள்ளது.
எனவே ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பொறுப்பிற்கு விண்ண ப்பித்த அனைவரும் தங்களது ஆதார் கார்டு, வயது சான்றிதழ்,கட்சி இளைஞர் அணி உறுப்பினர் கார்டு, தாங்கள் இதுவரை இளைஞர் அணியில் செயலாற்றிய தகவல்க ளுடன் நேர்காணலில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






