search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணா பிறந்த நாள் மாரத்தான் போட்டி
    X

    அண்ணா பிறந்த நாள் மாரத்தான் போட்டி

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • வெற்றி பெற்ற வர்களுக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பரிசு வழங்கினர்

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராணிப்பேட்டை மாவட்ட பிரிவின் சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் போட்டியை மாவட்ட கலெக்டர் வளர்மதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டி 17 வயது முதல் 25 வயதிற்கு ட்பட்ட ஆண்கள் பிரிவிற்கு 8கி.மீ, பெண்கள் பிரிவிற்கு 5கி.மீ, 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவிற்கு 10கி.மீ, பெண்கள் பிரிவிற்கு 5 கி.மீ என 4 பிரிவுகளில் தனித்தனியே நடைபெற்றது.

    ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி முக்கிய பகுதிகள் வழியாக சென்று மீண்டும் அரசினர் மேல்நிலை ப்பள்ளியிலேயே முடிவும் வகையில் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களுடன் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2ஆயிரம், நான்காம் இடம் முதல் 10-ம் இடம் வரை பரிசுத் தொகை தலா ரூ.1000 வீதம் என அனைத்து பிரிவிற்கும் வழங்கப்ப ட்டது.

    இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகர், ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு , போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி உள்பட விளையாட்டு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மாரத்தான் ஓட்டபோட்டி யில் வெற்றி பெற்ற வர்களுக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விஸ்வேஸ்வரய்யா, குமார் ஆகியோர் பரிசு வழங்கினர்.

    சுமார் 100 பேர் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடினர்.

    Next Story
    ×