என் மலர்
ராணிப்பேட்டை
- கலெக்டர் அலுவலகத்தில் மனு
- போர் போட்டால் தண்ணீர் நிறம் மாறி வருவதாக புகார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் வாணாபாடி ஊராட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், முன்னாள் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் வளர்மதியிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர்.
அந்த மனுவில் வாணாபாடி ஊராட்சியில் சுமார் 15 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறோம். கடந்த 2000-ம் ஆண்டு வாணாபாடி, முகுந்தராயபுரம், செட்டிதாங்கல், நவ்லாக், மாந்தாங்கல் ஆகிய பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.
எங்கள் கிராமத்தின் அருகே பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளதால் போர் போட்டால் தண்ணீர் நிறம் மாறி வருகிறது. இதனால் பாதிப்புகள் ஏற்படுகிறது.
குடிநீர் சப்ளையும் போதுமானதாக இல்லை. எனவே நவ்லாக் பகுதி கிணற்றிலிருந்து எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட வாணாபாடி, உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
- கலெக்டர் வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒருங்கணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கடந்த செப்டம்பர் (1 முதல் 30 வரை) மாதம் முழுவதும் ஊட்டச்சத்து மாத விழாவாக கொண்டா டப்பட்டது.
அதிக அளவில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய திமிரி, ஆற்காடு, ராணிப்பேட்டை (நகர்புறம்) ஆகிய 3 வட்டாரங்களைச் ேசர்ந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்களுக்கும், வட்டார அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்திய அங்கன்வாடி பணியா ளர்களுக்கும் கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வளர்மதி வழங்கி பாராட்டி பேசினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.
- 3 மகன்கள் உள்ள நிலையில் பரிதாபம்
- 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த மோட்டூரை சேர்ந்தவர் சந்திரன் (வயது 46). தொழிலாளி. இவரது மனைவி மலர் இவர்களுக்கு கார்த்திக், சாரதி, கலைமுத்து என 3 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்திரன் பொன்னப்பன்தாங்கல் கன்னி கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் நடந்து சென்று கொண்டிருந்த சந்திரன் மீது மோதியது.
இதில் அவர் பலத்த காயமடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் பாணாவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக சந்திரன் உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபர் கைது
- 32 கிலோ சிக்கியது
ராணிப்பேட்டை:
வாலாஜா போலீசார் ராமசாமி தெரு பகுதியில் கடைகளில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள கடை ஒன்றில் விற்பனைக்காக ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 32 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து வாலாஜா போலீசார் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மகேந்திரகுமார் (வயது 23) என்ற வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலைக்கு சென்றபோது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு
காவேரிப்பாக்கம்:
பாணாவரம் அருகே குப்புக்கல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் பாபு (வயது 40). இவர் ஆற்காட்டில் உள்ள ஜவுளிக்கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் பாபு தனது மொபட்டில் இன்று காலை 9 மணிக்கு வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அப்போது மேல்வீராணம் அருகே சென்ற போது எதிரே வேகமாக வந்த லோடு ஆட்டோ மோதியது.
இதில் பாபு தலை நசுங்கி சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவேரிப்பாக்கம் போலீசார் இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ரோந்து பணியின் போது சிக்கினார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
காவேரிப்பாக்கம்:
நெமிலி அருகேயுள்ள நெல்லிக்குப்பம், சயனபுரம், ஆட்டுப்பாக்கம் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என நெமிலி சப்-இன்ஸ்பெக்டர்கள் லோகேஷ், சிரஞ்சீவிலு ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆட்டுப்பாக்கம் பத்ரகாளி அம்மன் கோவிலின் பின்புறம் செல்லும்போது ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றார்.
போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் வீட்டின் பின்புறம் மறைவான பகுதியில் பிளாஸ்டிக் கவர்களில் மொத்தம் 10 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும் விசாரணை நடத்தியதில் இவர் நெமிலி அடுத்த சயனபுரம், பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 54) என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- பா.ம.க. சார்பில் நாளை நடக்கிறது
- ரத்த தானம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் பா.ம.க. சார்பில் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு நாளை 9-ந்தேதி முத்துக்கடை பஸ் நிலையம் அருகில், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் ப.சரவணன் தலைமையில் இலவச கண் சிகிச்சை, ரத்ததானம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பல்வேறு பரிசோதனை, சிகிச்சைகள் பெறலாம் எனவும், ரத்த தானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்று ரத்த தானம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 22) கூலி தொழிலாளி.
இவருக்கு திருமணம் முடிந்து 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நந்தகுமார் ரெட்டிவலம் கிராமத்தில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை முன்னிட்டு நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்தார்.
பின்னர் இரவில் பனப்பாக்கம் அருகே நெடும்புலி கிராமத்தில் உள்ள சுடுகாடு பகுதியில் நடந்து வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று நந்தகுமார் மீது மோதியது.
இதில் இவர் உடல் நசுங்கி பலத்த காயங்களுடன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெமிலி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் வாலிபர் மீது மோதி சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வீட்டிலிருந்து வெளியே போனவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
காவேரிப்பாக்கம்:
பனப்பாக்கம் அருகே மேலபுலம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 59)கூலி தொழிலாளி. இவரது மனைவி ராணி (55). இவர் கடந்த 5 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சர்க்கரை நோய்க்கு மாத்திரைகள் வாங்க கணவரிடம் பணம் கேட்டதாகவும் அதற்கு அவர் இல்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ராணி நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே போனவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடினர். இந்த நிலையில் ராமாபுரம் பகுதியில் உள்ள கிணற்றில் ராணி பிணமாக மிதந்ததை கண்ட அப்பகுதியினர் அவளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சரிபார்க்கும் பணியில் ஈடுபட வேண்டும்
- அமைச்சர் ஆர்.காந்தி வேண்டுகோள்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வருகினற 27-ந்தேதி அன்று வெளியிட உள்ளது.
வருகிற 27-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 9-ந்தேதி வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும், பெயர்கள் நீக்கவும், திருத்தம் செய்யவும் மனு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர நவம்பர் மாதத்தில் 4, 5, 18, மற்றும் 19 ஆகிய 4 தேதிகளில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இந்த முகாம்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும், ஜனவரி 1-ந்தேதி அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும்.
வருகிற ஜனவரி 1-ந்தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும், புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும்,
ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் வாக்குச் சாவடி நிலைய முகவர்கள் ஆகியோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி முனைப்புடன் செயல்பட்டு வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- வன உயிரின வாரவிழாவை முன்னிட்டு நடந்தது
- வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரின வாரவிழாவையொட்டி கலவை ஆதிபராசக்தி வேளாாண்மை கல்லூரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஓவியம், விநாடி-வினா மற்றும் சொற்பொழிவு ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட வன அலுவலர் கலாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட வனபாதுகாவலர் சுஜாதா, வனசகர்கள் சரவணபாபு, ராஜா, வெங்கடேசன், பசுமை தோழர் ஏஞ்சலின், ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி முதல்வர் தனுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வனத்துறை சார்பில் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும் காடுகளை பாதுகாப்பதின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- 49 கிராம் தங்கம், 265 கிராம் வெள்ளி இருந்தது
- ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணத்தில் உள்ள எல்லையம்மன் கோவிலுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப பணம், நகை உள்ளிட்டவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
இந்நிலையில் நேற்று கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
இந்து சமய அறநிலை யத்துறை வேலூர் சரக ஆய்வர் சுரேஷ்குமார், குடியாத்தம் சரக ஆய்வர் பாரி ஆகியோர் முன்னிலையில் ஆம்பூர் நாகநாத சாமி கோவில் செயல் அலுவலர் சிவசங்கரி, எல்லையம்மன் கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி, கணக்காளர் பாபு மற்றும் ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் ரூ.6 லட்சத்து 86 ஆயிரம், 49 கிராம் தங்கம், 265 கிராம் வெள்ளி உள்ளிட்டவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.






