வாகனம் மோதி தொழிலாளி பலி

3 மகன்கள் உள்ள நிலையில் பரிதாபம் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
வாகனம் மோதி தொழிலாளி பலி
Published on

காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த மோட்டூரை சேர்ந்தவர் சந்திரன் (வயது 46). தொழிலாளி. இவரது மனைவி மலர் இவர்களுக்கு கார்த்திக், சாரதி, கலைமுத்து என 3 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்திரன் பொன்னப்பன்தாங்கல் கன்னி கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் நடந்து சென்று கொண்டிருந்த சந்திரன் மீது மோதியது.

இதில் அவர் பலத்த காயமடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் பாணாவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக சந்திரன் உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com