என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • நாளை நடக்கிறது
    • கலெக்டர் அறிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குழந்தைகளின் நலனுக்காக குழந்தைகள் எதிர் கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு குறைதீர்க்கும் அமர்வு நாளை 12-ந்தேதி காலை ஆற்காடு - ஆரணி சாலையில், விலாரி கூட் ரோட்டில் உள்ள கே.பி.ஜே மண்டபத்தில் நடைபெறுகிறது.

    இந்த அமர்வில் கலந்து கொண்டு குழந்தைகள் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காணலாம்.

    மேற்கண்ட தகவலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது
    • விழிப்புணர்வு நாடகம் மற்றும் பொம்மலாட்டம்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாபேட்டையில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் உலக மனநல தினத்தை முன்னிட்டு மாவட்ட மனநல பிரிவு மற்றும் சமூக அமைப்புகள், நர்சிங் பயிற்சி கல்லூரிகள் ஆகியவை இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் விஜயமுரளி, மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷாநந்தினி, அலுவலக கண்காணிப்பாளர் சிவகுமார், மனநல மருத்துவர்கள் நர்மதா, கோகுலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மனநலத்தை பேணிகாப்பது போதை பழக்கங்கள் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது குறித்து கல்லூரி மாணவிகள் நடத்திய விழிப்புணர்வு நாடகம் மற்றும் பொம்மலாட்டம் நடைபெற்றது.

    இதில் டாக்டர்கள், மேல்விஷாரம் தி நேஷனல் வெல்பர் அசோசியேஷன் நிர்வாகிகள், மருத்துவமனை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தள்ளுபடி இலவசம் என ஏமாறாதீர்கள்
    • கலெக்டர் அறிவுரை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி, தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நுகர்வோர் பாதுகாப்பு குழுக் கூட்டம் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    நுகர்வோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தள்ளுபடி, இலவசம் என்று ஏமாறா தீர்கள். எந்த பொருள் வாங்கினாலும் ரசீது கேட்டு வாங்கவும், எந்த பொருளையும் அதன் தரத்தை பார்த்து வாங்க வேண்டும். மலிவு விலையில் கிடைக்கிறது என்று ஏமாந்து விடக்கூ டாது. பட்டுச்சேலைகள் வாங்கும் பொழுது சில்க் மார்க் முத்திரை பார்த்து வாங்க வேண்டும்.

    தங்க நகைகள் வாங்கும் போது ஹால்மார்க் முத்திரை இருக்கின்றதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் அக்மார்க் முத்திரையிடப்பட்ட பொருட்களை வாங்குவது மிகச் சிறந்தது. அதேபோல சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பொருள்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    பிளாஸ்டிக் பொரு ட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அன்றாடம் கடைகளுக்கு செல்லும் பொது கையில் துணி பைகளை எடுத்துச் சென்று பொருட்களை வாங்கி வர வேண்டும்.நுகர்வோர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் மாவட்ட குறை தீர்வு அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவ லர்களை அணுகலாம்.

    ரேஷன் கடைகளில் தரமான பொருட்களை பெற்று விநியோகம் செய்ய அறிவுரை வழங்கப்ப ட்டுள்ளது. இது குறித்த புகார்கள் இருந்தால் மாவட்ட குறைதீர்வு அலுவலருக்கு புகார் தெரிவிக்கலாம்.

    இந்த புகாரின் மீது உரிய விசாரணை செய்து நட வடிக்கை மேற்கொள்ள ப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவக்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் தேவிபிரியா, மாவட்ட வழங்கல் அலுவலர் சத்தியபிரசாத், மாவட்ட நுகர்வோர் ஒருங்கிணைப்பாளர் குமரேசன் மற்றும் அலுவ லர்கள். நுகர்வோர்கள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் வளர்மதி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • மாணவ - மாணவிகளுடன் இணைந்து குண்டு எறிதல் விளையாடினார்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஜி.வி.சி மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான தடகள போட்டி நடந்தது.

    போட்டியை கலெக்டர் வளர்மதி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் மாணவ - மாணவிகளுடன் இணைந்து குண்டு எறிதல் விளையாடினார்.

    இதில் முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஞானசேகரன், வட்டாட்சியர் வசந்தி. ஜி.வி.சி மேல்நிலைப் பள்ளி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் பக்தவச்சலம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செந்தில் குமார், தலைமையாசிரியை சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    • டிசம்பர் 23-ந் தேதி திருச்சியில் ’ வெல்லும் சனநாயகம்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் சீ.ம.ரமேஷ் கர்ணா தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.

    அந்த மனுவில் வருகிற டிசம்பர் 23-ந் தேதி திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்' வெல்லும் சனநாயகம்' என்ற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அகில இந்திய அளவில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    மாநாட்டின் நோக்கம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வருகிற 15-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சமூக நல்லிணக்க பேரணிகள் நடத்த ஏற்பாடு செய்ய ப்பட்டுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் பேரணிக்கு அனுமதி அளித்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இதில் கட்சியின் மண்டல துணைச் செயலாளர் தமிழ், முன்னாள் மாவட்ட செயலாளர் குண்டா சார்லஸ், நிர்வாகிகள் சசிகுமார், ராஜா, பெல் சேகர், ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒன்றியக்குழு தலைவர் தொடங்கி வைத்தார்
    • பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட பருத்திப்புத்தூர் ஊராட்சியில் பி.எம்.ஏஜி.ஒய் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணியை தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மன்ற தலைவர் சரஸ்வதி கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    இதைத் தொடர்ந்து சிறுணமல்லி ஊராட்சியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் நெற்களம் அமைக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி அருணாச்சலம் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு கலந்து கொண்டு திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

    இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, ஒன்றிய துணைச்செயலாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி அளித்தனர்
    • மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து கூட்டமைப்பு சார்பிலும், சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் சார்பிலும் நேற்று கலெக்டர் வளர்மதியிடம் மனுக்களை அளித்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கூட்டமைப்பின் சார்பில் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

    இந்த நிறுவனங்களின் பொதுவான கோரிக்கையாக புதிய மின் கட்டணத்தை ரத்து செய்து, பழைய மின் கட்டணம் செயல்படுத்த அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

    மின்நுகர்வோர்களுக்கு பீக் ஹவர் கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    மேற்கூரை, சோலார் நெட்வொர்க் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், தமிழக அரசு மல்டி டாரிப்பை உடனடியாக ரத்து செய்வதுடன், 2 ஆண்டுகளுக்கு மின்சார மற்றும் இதர கட்டணங்களை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர்.

    பின்னர் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீதான மின் கட்டண உயர்வை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தி வருகிற 16-ந் தேதி சென்னையில் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று ராணிப்பேட்டை மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்க மாவட்ட செயலாளர் முரளி தெரிவித்தார்.

    • கலெக்டர் அலுவலகத்தில் மனு
    • போர் போட்டால் தண்ணீர் நிறம் மாறி வருவதாக புகார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் வாணாபாடி ஊராட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், முன்னாள் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் வளர்மதியிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர்.

    அந்த மனுவில் வாணாபாடி ஊராட்சியில் சுமார் 15 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறோம். கடந்த 2000-ம் ஆண்டு வாணாபாடி, முகுந்தராயபுரம், செட்டிதாங்கல், நவ்லாக், மாந்தாங்கல் ஆகிய பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.

    எங்கள் கிராமத்தின் அருகே பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளதால் போர் போட்டால் தண்ணீர் நிறம் மாறி வருகிறது. இதனால் பாதிப்புகள் ஏற்படுகிறது.

    குடிநீர் சப்ளையும் போதுமானதாக இல்லை. எனவே நவ்லாக் பகுதி கிணற்றிலிருந்து எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட வாணாபாடி, உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    • கலெக்டர் வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒருங்கணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கடந்த செப்டம்பர் (1 முதல் 30 வரை) மாதம் முழுவதும் ஊட்டச்சத்து மாத விழாவாக கொண்டா டப்பட்டது.

    அதிக அளவில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய திமிரி, ஆற்காடு, ராணிப்பேட்டை (நகர்புறம்) ஆகிய 3 வட்டாரங்களைச் ேசர்ந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்களுக்கும், வட்டார அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்திய அங்கன்வாடி பணியா ளர்களுக்கும் கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வளர்மதி வழங்கி பாராட்டி பேசினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.

    • 3 மகன்கள் உள்ள நிலையில் பரிதாபம்
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த மோட்டூரை சேர்ந்தவர் சந்திரன் (வயது 46). தொழிலாளி. இவரது மனைவி மலர் இவர்களுக்கு கார்த்திக், சாரதி, கலைமுத்து என 3 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்திரன் பொன்னப்பன்தாங்கல் கன்னி கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் நடந்து சென்று கொண்டிருந்த சந்திரன் மீது மோதியது.

    இதில் அவர் பலத்த காயமடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் பாணாவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக சந்திரன் உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் கைது
    • 32 கிலோ சிக்கியது

    ராணிப்பேட்டை:

    வாலாஜா போலீசார் ராமசாமி தெரு பகுதியில் கடைகளில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள கடை ஒன்றில் விற்பனைக்காக ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 32 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து வாலாஜா போலீசார் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மகேந்திரகுமார் (வயது 23) என்ற வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலைக்கு சென்றபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு

    காவேரிப்பாக்கம்:

    பாணாவரம் அருகே குப்புக்கல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் பாபு (வயது 40). இவர் ஆற்காட்டில் உள்ள ஜவுளிக்கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் பாபு தனது மொபட்டில் இன்று காலை 9 மணிக்கு வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அப்போது மேல்வீராணம் அருகே சென்ற போது எதிரே வேகமாக வந்த லோடு ஆட்டோ மோதியது.

    இதில் பாபு தலை நசுங்கி சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த காவேரிப்பாக்கம் போலீசார் இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×