பஸ் நிலையத்தில் ஓட்டல் ஊழியர் பிணம்

தூங்கிய போது இறந்து விட்டாரா? போலீசார் விசாரணை
பஸ் நிலையத்தில் ஓட்டல் ஊழியர் பிணம்
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை முத்துக்கடையில் பஸ் நிலையம் அருகில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை அருகில் உள்ள டீக்கடைக்கு வந்தவர்கள் ஆண் பிணமாக கிடப்பது தொடர்பாக ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆண் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அவர் பெயர் கார்த்தி, காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் என்பதும் முத்துக்கடை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்தவர் என்பதும் தெரியவந்தது.

மது போதையில் இங்கு வந்து படுத்து தூங்கிய போது இறந்து விட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com