என் மலர்
நீங்கள் தேடியது "Leaders of various parties are expected to participate."
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
- டிசம்பர் 23-ந் தேதி திருச்சியில் ’ வெல்லும் சனநாயகம்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் சீ.ம.ரமேஷ் கர்ணா தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் வருகிற டிசம்பர் 23-ந் தேதி திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்' வெல்லும் சனநாயகம்' என்ற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அகில இந்திய அளவில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டின் நோக்கம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வருகிற 15-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சமூக நல்லிணக்க பேரணிகள் நடத்த ஏற்பாடு செய்ய ப்பட்டுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் பேரணிக்கு அனுமதி அளித்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதில் கட்சியின் மண்டல துணைச் செயலாளர் தமிழ், முன்னாள் மாவட்ட செயலாளர் குண்டா சார்லஸ், நிர்வாகிகள் சசிகுமார், ராஜா, பெல் சேகர், ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






