என் மலர்
நீங்கள் தேடியது "ஜி.வி.சி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது"
- கலெக்டர் வளர்மதி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்
- மாணவ - மாணவிகளுடன் இணைந்து குண்டு எறிதல் விளையாடினார்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஜி.வி.சி மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான தடகள போட்டி நடந்தது.
போட்டியை கலெக்டர் வளர்மதி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் மாணவ - மாணவிகளுடன் இணைந்து குண்டு எறிதல் விளையாடினார்.
இதில் முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஞானசேகரன், வட்டாட்சியர் வசந்தி. ஜி.வி.சி மேல்நிலைப் பள்ளி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் பக்தவச்சலம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செந்தில் குமார், தலைமையாசிரியை சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.






