என் மலர்
உள்ளூர் செய்திகள்

கால நிலை மாற்றம் குறித்த பயிற்சி வகுப்பு
- கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
- அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் சார்பில் காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி வகுப்பு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட வன அலுவலர் கலாநிதி, மாநில காலநிலை மாற்ற இயக்க உதவி திட்ட இயக்குநர் மனிஷ் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தார்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிர்வாகி வெற்றிச்செல்வன் ,அண்ணா பல்கலை கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பேராசிரியர் கீதா, தோட்டக்கலை துணை இயக்குநர் லதா மகேஷ், சுரில், பிரபாகரன் ஆகியோர் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஈரநில இயக்கத்தின் பங்கு, தோல்கழிவு மற்றும் திடக்கழிவு கையாள்வது ஆகியவை குறித்து விரிவாக பேசினர்.
பின்னர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் மரக்கன்றுகள் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி உள்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.