என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • வட்டார வேளாண் உதவி இயக்குநர் அறிவுரை
    • மண், நீர் மற்றும் சுற்றுச்சூழல் விஷமாக மாறி வருகிறது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட வேகமங்கலம் கிராமத்தில் இயற்கை வேளாண்மை குழுவிற்கு திறன் மேம்பாட்டு குழுவிற்கு ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு காவேரிப்பாக்கம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சண்முகம் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக வேலூர் அங்கக சான்று ஆய்வாளர் தனசேகர் கலந்து கொண்டு இயற்கை முறையில் சாகுபடி செய்யும்போது பயன்படுத்த கூடிய இடுபொருட்கள் பற்றி விவசாயி களுக்கு எடுத்துரைத்தார்.

    இதை தொடர்ந்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சண்முகம் பேசியதாவது:- தற்போது நிலவும் வேளாண் இடுபொருள் விலையானது விவசாயிகள் எளிதில் வாங்கி உபயோகப்படுத்தும் நிலையில் இல்லை.

    மேலும் மண், நீர் மற்றும் சுற்றுச்சூழல் விஷமாக வேகமாக மாறி வருகிறது. இதனால் விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    மேலும் இயற்கை விவசாயத்தில் இடுபொருட்கள் சுயமாக விவசாயிகளே பண்ணையில் தயாரித்து பயன்படுத்துவதால் இடுபொருட்கள் செலவு குறைந்து உற்பத்தி செலவு வெகுவாகக் குறைகிறது என்றார். இந்ந பயிற்சி முகாமில் 30-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • போலீசார் வழக்கு பதிவு
    • கடந்த 10-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்திலிருந்து வாணாபாடி கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் பழமை வாய்ந்த கிணறு உள்ளது.

    நீர் நிரம்பி உள்ள இந்த கிணற்றில் நேற்று காலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதப்பதாக வந்த தகவலை தொடர்ந்நு போலீசார் ஆண் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் பிணமாக மிதந்த நபர் செட்டித்தாங்கல் கிராமம் அண்ணா தெருவை சேர்ந்த சங்கர்(55) மெக்கானிக் என தெரியவந்தது.

    மேலும் இவர் கடந்த 10-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் நேற்று பிணமாக மிதந்ததும் தெரியவந்தது. இவர் கிணற்றில் தவறி விழுந்ததில் இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில்வே போலீசார் உடலை மீட்டனர்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே இன்று காலை உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அரக்கோணம் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்தனர்.

    விசாரணையில் அரக்கோணம் கிரிவல்ஸ் பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜசேகர்(வயது 43). என்பதும், இவர் தனியார் கம்பெனியில் செக்யூரிட்டி வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

    இவர் வழக்கம் போல் பணிக்கு செல்வதற்காக இன்று காலை தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது ரெயில் மோதி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதனைத் தொடர்ந்து ரெயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
    • மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராணிப்பேட்டை மாவட்ட பிரிவு சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாணவ, மாணவி களுக்கான சைக்கிள் ஓட்ட போட்டிகள் 3 பிரிவுகளில் நடைபெறும் என அறிவிக்க ப்பட்டிருந்தது.

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்திலிருந்து தொடங்கி லாலாபேட்டை அடுத்த சிப்காட் பகுதி 2 வரை சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகம் வரும் வகையிலும், மற்றொரு பிரிவில் ஏகாம்பரநல்லூர் கூட்ரோடு வரை சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் வகையில் இந்த போட்டி நடைபெற்றது.

    போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ. 2ஆயிரமும், 4-ம் இடம் முதல் 10-ம் இடம் வரை பெறும் மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.250 வீதமும் மொத்த பரிசு தொகையாக ரூ.70ஆயிரத்து 500-ம், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    இன்று காலை சைக்கிள் ஓட்ட போட்டியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தலைமை தாங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஞானசேகரன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஆர்வமுடன் சைக்கிளை ஓட்டி சென்றனர்.

    • 329 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 4-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு பயிற்சி நிலைய முதல்வர் சித்ரா தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக ரியல் டேலண்ட் இன்ஜீனியரிங் லிமிடெட் நிர்வாக இயக்குனர் துரைசாமி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மொத்தமாக 329 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

    இதில் பயிற்சி நிலைய மேலாண்மை குழு தலைவர் அரிதாஸ், ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவிதா, யூனியன் வங்கி கிளை மேலாளர் கிஷோர், பயிற்சி நிலைய நிர்வாக அலுவலர் சந்தியாஸ்ரீ, சாம்சங் இந்தியா ஆராய்ச்சி மேம்பாடு பொறியாளர் விஸ்வநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கண்துடைப்புக்கு நடத்துவதாக குற்றச்சாட்டு
    • ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் இரண்டாவது வெள்ளிக்கிழமைகளில் விவசாய குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்றும் விவசாய குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் உதவி கலெக்டர் வினோத்குமார் பல்வேறு வேலை நிமித்தமாக கலந்து கொள்ளாததால், நேர்முக உதவியாளர் பழனிராஜன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிருந்து விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் வந்திருந்தனர்.

    கூட்டம் நடைபெற்ற போது அலுவலக பணியாளர்கள் விவசாயிகளுக்கு தேனீர் கொண்டு வந்தனர். அப்போது திடீரென விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.

    பின்னர் அவர்கள் கூறியதாவது:-

    உதவி கலெக்டர் வினோத்குமாருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடத்தது. இதன் காரணமாக அவர் விடுமுறையில் இருந்தார். பின்னர் பணிக்கு வந்தும்

    தொடர்ந்து 4 மாதகாலமாக விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தை அவருக்கு இணையான அதிகாரிகள் அல்லது உயர் அதிகாரிகள் தலைமையில் நடத்த வேண்டும். ஆனால் அப்படி நடப்பதில்லை.

    குறைதீர்வு கூட்டத்தில் இதர துறை சார்ந்த அலுவலர்களும் முறையாக கலந்து கொள்வதில்லை, கூட்டத்தை முறையாக விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயன் தரும் வகையில் நடத்தாமல் கண்துடைப்பு கூட்டமாக நடத்துவதை கண்டித்தும், குறித்த நேரத்தில் கூட்டம் நடத்துவதில்லை , மனுக்கள் மீதும் உரிய நடவடிகைகள் எடுப்பதில்லை எனவே கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினோம் என தெரிவித்தனர்.

    • கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு
    • போலீசார் விசாரணை

    கலவை:

    வேலூர் சேண்பாக்கம் பகு தியை சேர்ந்தவர் தஸ்தகீர் (வயது 40), வேலூரில் உள்ள பழக்கடையில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரிஸ்வானா. இவர்கள் ஆற்காட்டில் உள்ள வேலூர் மெயின் ரோடு பகு தியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். தஸ்தகீருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் தூங்க சென்ற தஸ்தகீர் வெளியில் வரவில்லை. அவரது மனைவி சென்று பார்த்தபோது தஸ்த கீர் தூக்குப்போட்டுக்கொண் டது தெரியவந்தது. உடனடி யாக அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்
    • கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார்.

    கூட்டத்தில் வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, காவல் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகளின் மூலம் பாதுகாப்பு நடைமுறைகள், விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டால் அதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமி நாராயணன், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் துணை இயக்குனர் சாந்தி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை
    • கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் கொடுத்தனர்

    ராணிப்பேட்டை:

    சோளிங்கர் அருகே உள்ள செங்கல் நத்தம் ஊராட்சி, ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 40 பேர் நேற்று கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராமாபுரம் கிராமத்தில் அரசு புறம்போக்கு இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ளனர். இது சம்பந்தமாக ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்து புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட வீட்டை காலி செய்ய உத்தர விட்டனர். இருப்பினும் வீடுகளை காலி செய்யாமல் இருந்து வருகின்றனர்.

    புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை, மேலும் கிராமத்திற்கு தேவையான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட அரசு உத்தரவு பெற்று பணி நடைபெறும் நிலையில் அதையும் தடுத்து வருகின்றனர்.

    மழைக்காலங்களில் கிராமத்திற்கு செல்ல சாலை வசதி போதுமானதாக இல்லாததால் விவசாய நிலத்தில் பயிர் அறுவடை செய்யும் எந்திரங்களை எங்கள் ஊர் வழியாக வர முடியாமல் வேறு வழியாக விவசாய நிலத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ளவர்களை காலி செய்து எங்கள் பகுதிக்கு சாலை மற்றும் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தனர்.

    இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் கொடுத்தனர்.

    • தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பரத்குமார் (வயது 35).

    இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து தனது பைக்கில் பனப்பாக்கம் சென்றார்.

    ஓச்சேரி-அரக்கோணம் ரோடு நங்கமங்கலம் கிராம் அருகே வரும்போது திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்த சாலையோரம் உள்ள புளியமரத்தில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பரத்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவேரிப்பாக்கம் போலீசார் பரத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • உறவினருக்கு போன் செய்து தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்
    • இவருக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் மேட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் சுகுமார் இவரது மகன் கார்த்திக் (36).இவர் ராணிப்பேட்டை வி.சி. மோட்டூர் பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தவர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வேலை முடிந்த பின்னர் தொழிற்சாலை செக்யூரிட்டி அறையில் அமர்ந்து தனது உறவினருக்கு போன் செய்து தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.

    பின்னர் சிறிது நேரத்தில் அங்கே மயங்கி விழுந்தார். இதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கார்த்திக் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்துபோன தொழிலாளி கார்த்திக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

    • யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்திலிருந்து வாணாபாடி கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் பழமை வாய்ந்த கிணறு உள்ளது.

    ஆழமான இந்த கிணற்றில் தற்போது பெருமளவிற்கு நீர் நிரம்பி உள்ளது . இந்த நிலையில் இன்று காலை கிணற்றில் ஆண் பிணம் மிதப்பது குறித்து அப்பகுதி பொது மக்கள் ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு கிணற்றில் மிதந்த ஆண் பிணத்தை மீட்டனர்.

    கிணற்றில் பிணமாக மிதந்த நபர் சுமார் 50. வயது மதிக்கத்தக்க நபர் ஆவார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? இங்கு எப்படி வந்தார் என்ற விவரம் தெரியவில்லை.

    இதை தொடர்ந்து ராணிப்பேட்டை போலீசார் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கிணற்றில் பிணமாக மிதந்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா, தவறி விழுந்து இறந்து விட்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×