என் மலர்
ராணிப்பேட்டை
- 6 அணிகளுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷனின் முதலாம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் சந்தோஷ் காந்தி தலைமை தாங்கி பேசினார். செயலாளர் செல்வகுமார் ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஒ கே.எஸ்.விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் உதவி செயலாளர் டாக்டர்.ஆர்.என்.பாபா, பொருளாளர் டி.ஜெ.சீனிவாச ராஜ், வேலூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் ஜி.வி.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு கிரிக்கெட் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்தும், கிரிக்கெட் வீரர்களுக்கு தற்போது உள்ள வாய்ப்புகள் குறித்து விரிவாக பேசினர்.
பின்னர் மேற்கண்ட அணிகளினிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற 6 அணிகளுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. இதில் வேலூர், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருப்புத்தூர் மாவட்டங்களின் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த கிரிக்கெட் வீரர்கள், ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷனின் பொருளாளர் ஜெயக்குமார், இணை செயலாளர்கள் பாஸ்கர், எபினேசனர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பெல் கிரிக்கெட் கிளப் செயலாளர் நாராயண சாமி நன்றி கூறினார்.
- குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
காவேரிப்பாக்கம்:
பனப்பாக்கம் அருகே உள்ள துறையூர், உளியநல்லூர், சிறுவ ளையம், பொய்கைநல்லூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.
இவர்கள் வேலை முடிந்து திரும்பும்போது கம்பெனி பஸ்சில் இருந்து இறங்கி நள்ளிரவு 12 மணியளவில் பனப்பாக்கத்தில் இருந்து பைக்கில் வீட்டிற்கு செல்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு 2 தொழிலாளர்கள் பனப் பாக்கத்திலிருந்து துறையூர் செல்லும்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்து அவர்களிட மிருந்த பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி நேற்று வழிப் பறிநடந்த துறையூர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்ப டுத்தவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
- அப்துல் கலாமின் பிறந்த நாள் கொண்டாட்டம்
- ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாள் ஆண்டு தோறும் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு ராணிப்பேட்டையில் பள்ளி கல்வித்துறை மூலம் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பங்கேற்ற இளைஞர் எழுச்சி தின ஊர்வலம் நடைபெற்றது. ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் நவல்பூர், புதிய பஸ் நிலையம் வழியாக வந்து பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.
இதில் பள்ளிகளின் நாட்டு நலப்பணித் திட்டத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட தொடர்பு அலுவலர் அற்புதராஜ் இந்த ஊர்வலத்தை ஒருங்கிணைத்தார். இதில் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கை
- மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப்பதிவு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கை செய்யப்பட்டது.
பெற்றோருக்கு அபராதம்
அப்போது 18 வயதிற்கு உட் பட்ட சிறுவர்கள் 4 பேர் பைக் ஓட்டியதாக வாகனங்களை கைப்பற்றி, சிறுவர்களின் பெற்றோர் மற்றும் வாகனத்தில் உரிமையாளர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் இதுபோன்று சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
- தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் தொடங்கி வைத்தார்
- பொதுமக்கள், இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் ஸ்போர்ட்ஸ் கிளப், ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 8-ம் ஆண்டு கனவு மாரத்தான் ஓட்டப்பந்தயம் இன்று காலை நடைபெற்றது.
மாரத்தான் போட்டிகளை தி.மு.க.வின் மாநில சுற்றுச்சூழல் அணி துணைச்செயலாளர் வினோத்காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் 11 மற்றும் 21 கிலோமீட்டர் தூர பிரிவுகளில் பங்கேற்று ஓடினர்.
மாரத்தான் போட்டி யானது வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி அம்மூர், மாந்தாங்கல் முத்துக்கடை ஆகிய முக்கிய பகுதிகளின் வழியாக சென்று மீண்டும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ரோட்டரி ஆளுநர் பரணிதரன், வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், நகர மன்ற தலைவர் ஹரிணிதில்லை, துணை தலைவர் கமலராகவன், வன்னிவேடு ஊராட்சிமன்ற தலைவர் கற்பகராணி சக்திவேல், வாலாஜா ஸ்போட்ஸ் கிளப் தலைவர் பாலாஜி, அப்துல் கரீம், மற்றும் ஸ்போர்ட்ஸ் கிளப், ரோட்டரி சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- பயனாளிகளுக்கு இழப்பீடாக வழங்கி நீதிபதிகள் உத்தரவு
- ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடந்தது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நேற்று லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு 2-வது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், சார்பு நீதிபதி ஜெயசூர்யா, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிபதி நவீன் துரைபாபு ஆகியோர் தலைமை தாங்கினார்.
இதில் வாலாஜா அடுத்த வள்ளுவம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (வயது 28), கட்டிட மேஸ்திரி.
கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி பஸ் மோதி உயிரிழந்தார.
இது தொடர்பாக சுபாஷின் குடும்பத்தினர் ராணிப்பேட்டை 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்டில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.
இதனை விசாரித்த நீதிபதிகள் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ. 22 லட்சத்து 50 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டுமென உத்தரவிட்டு அதற்கான ஆணையை சுபாஷின் குடும்பத்தினரிடம் வழங்கினர்.
இதனை தொடர்ந்து மோட்டார் வாகன விபத்து, அசல் மற்றும் வங்கி வழக்குகள் என மொத்தம் 77 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2 கோடியே 30 லட்சத்து 86 ஆயிரம் ரூபாயை பயனாளிகளுக்கு இழப்பீடாக வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- ஆட்டோ டிரைவர் வாக்குமூலம்- பரபரப்பு
- ஆற்காடு அருகே கட்டிட மேஸ்திரி குத்தி கொலை
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரியை அடுத்த டி.சி.குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 45), கட்டிட மேஸ்திரி. அதேப்பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன் (32), ஆட்டோ டிரைவர்.
இவர்கள் இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணனை, கிருபாகரன் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இது குறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஆட்டோ டிரைவர் கிருபாகரனை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை டி.சி.குப்பத்தை அடுத்த நத்தம் மலை பகுதியில் உள்ள தனது நிலத்தில் கிருபாகரன் பதுங்கி இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ரத்தினகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருபாகரனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து கைதான கிருபாகரன் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
கிருஷ்ணனின் 2-வது மகள் திவ்யபாரதியும் (28), கிருபா என்கிற கிருபானந்தனும் (32) காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த கிருஷ்ணன், மகள் திவ்யபாரதியை மேல்குப்பம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துவைத்தார். திருமணமான பிறகும் திவ்யபாரதியும், கிருபாவும் பேசி, பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த திவ்யபாரதியின் கணவர் கிருபாகரனை கண்டித்துள்ளார். மேலும் இதுகுறித்து தனது மாமனார் கிருஷ்ணனிடமும் கூறியுள்ளார்.
இதுகுறித்து கிருஷ்ணன் நேற்று முன்தினம் கிருபாகரனிடம் சென்று 'எனது மகளின் வாழ்க் கையை ஏன் கெடுக்கிறாய்' என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.
2 பேருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கிருபா, கிருஷ்ணனை ஆபாசமாக பேசி சரமாரியாக தாக்கினர். பின்னர் இரவு 7 மணியளவில் கிருபாகரன் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்துக் கொண்டு ஆவேசமாக வந்தார்.
தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார். வாலிபர் மாட்டிக் கொள்ளாமல் இருக்க மலையில் பதுங்கி இருந்தபோது கைது செய்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வட்டார வேளாண் உதவி இயக்குநர் அறிவுரை
- மண், நீர் மற்றும் சுற்றுச்சூழல் விஷமாக மாறி வருகிறது
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட வேகமங்கலம் கிராமத்தில் இயற்கை வேளாண்மை குழுவிற்கு திறன் மேம்பாட்டு குழுவிற்கு ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு காவேரிப்பாக்கம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சண்முகம் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் அங்கக சான்று ஆய்வாளர் தனசேகர் கலந்து கொண்டு இயற்கை முறையில் சாகுபடி செய்யும்போது பயன்படுத்த கூடிய இடுபொருட்கள் பற்றி விவசாயி களுக்கு எடுத்துரைத்தார்.
இதை தொடர்ந்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சண்முகம் பேசியதாவது:- தற்போது நிலவும் வேளாண் இடுபொருள் விலையானது விவசாயிகள் எளிதில் வாங்கி உபயோகப்படுத்தும் நிலையில் இல்லை.
மேலும் மண், நீர் மற்றும் சுற்றுச்சூழல் விஷமாக வேகமாக மாறி வருகிறது. இதனால் விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும் இயற்கை விவசாயத்தில் இடுபொருட்கள் சுயமாக விவசாயிகளே பண்ணையில் தயாரித்து பயன்படுத்துவதால் இடுபொருட்கள் செலவு குறைந்து உற்பத்தி செலவு வெகுவாகக் குறைகிறது என்றார். இந்ந பயிற்சி முகாமில் 30-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு
- கடந்த 10-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்திலிருந்து வாணாபாடி கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் பழமை வாய்ந்த கிணறு உள்ளது.
நீர் நிரம்பி உள்ள இந்த கிணற்றில் நேற்று காலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதப்பதாக வந்த தகவலை தொடர்ந்நு போலீசார் ஆண் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் பிணமாக மிதந்த நபர் செட்டித்தாங்கல் கிராமம் அண்ணா தெருவை சேர்ந்த சங்கர்(55) மெக்கானிக் என தெரியவந்தது.
மேலும் இவர் கடந்த 10-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் நேற்று பிணமாக மிதந்ததும் தெரியவந்தது. இவர் கிணற்றில் தவறி விழுந்ததில் இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெயில்வே போலீசார் உடலை மீட்டனர்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே இன்று காலை உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அரக்கோணம் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்தனர்.
விசாரணையில் அரக்கோணம் கிரிவல்ஸ் பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜசேகர்(வயது 43). என்பதும், இவர் தனியார் கம்பெனியில் செக்யூரிட்டி வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
இவர் வழக்கம் போல் பணிக்கு செல்வதற்காக இன்று காலை தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது ரெயில் மோதி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து ரெயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராணிப்பேட்டை மாவட்ட பிரிவு சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாணவ, மாணவி களுக்கான சைக்கிள் ஓட்ட போட்டிகள் 3 பிரிவுகளில் நடைபெறும் என அறிவிக்க ப்பட்டிருந்தது.
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்திலிருந்து தொடங்கி லாலாபேட்டை அடுத்த சிப்காட் பகுதி 2 வரை சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகம் வரும் வகையிலும், மற்றொரு பிரிவில் ஏகாம்பரநல்லூர் கூட்ரோடு வரை சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் வகையில் இந்த போட்டி நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ. 2ஆயிரமும், 4-ம் இடம் முதல் 10-ம் இடம் வரை பெறும் மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.250 வீதமும் மொத்த பரிசு தொகையாக ரூ.70ஆயிரத்து 500-ம், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இன்று காலை சைக்கிள் ஓட்ட போட்டியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தலைமை தாங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஞானசேகரன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஆர்வமுடன் சைக்கிளை ஓட்டி சென்றனர்.
- 329 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 4-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு பயிற்சி நிலைய முதல்வர் சித்ரா தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக ரியல் டேலண்ட் இன்ஜீனியரிங் லிமிடெட் நிர்வாக இயக்குனர் துரைசாமி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மொத்தமாக 329 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
இதில் பயிற்சி நிலைய மேலாண்மை குழு தலைவர் அரிதாஸ், ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவிதா, யூனியன் வங்கி கிளை மேலாளர் கிஷோர், பயிற்சி நிலைய நிர்வாக அலுவலர் சந்தியாஸ்ரீ, சாம்சங் இந்தியா ஆராய்ச்சி மேம்பாடு பொறியாளர் விஸ்வநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






