என் மலர்
நீங்கள் தேடியது "பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு"
- தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் தொடங்கி வைத்தார்
- பொதுமக்கள், இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் ஸ்போர்ட்ஸ் கிளப், ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 8-ம் ஆண்டு கனவு மாரத்தான் ஓட்டப்பந்தயம் இன்று காலை நடைபெற்றது.
மாரத்தான் போட்டிகளை தி.மு.க.வின் மாநில சுற்றுச்சூழல் அணி துணைச்செயலாளர் வினோத்காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் 11 மற்றும் 21 கிலோமீட்டர் தூர பிரிவுகளில் பங்கேற்று ஓடினர்.
மாரத்தான் போட்டி யானது வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி அம்மூர், மாந்தாங்கல் முத்துக்கடை ஆகிய முக்கிய பகுதிகளின் வழியாக சென்று மீண்டும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ரோட்டரி ஆளுநர் பரணிதரன், வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், நகர மன்ற தலைவர் ஹரிணிதில்லை, துணை தலைவர் கமலராகவன், வன்னிவேடு ஊராட்சிமன்ற தலைவர் கற்பகராணி சக்திவேல், வாலாஜா ஸ்போட்ஸ் கிளப் தலைவர் பாலாஜி, அப்துல் கரீம், மற்றும் ஸ்போர்ட்ஸ் கிளப், ரோட்டரி சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






