என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிளஸ்-1 மாணவர்களுக்கு தமிழ் திறனாய்வு தேர்வு
- 4 ஆயிரத்து 190 பேர் பங்கேற்றனர்
- ஊக்கத்தொகையாக மாதந் தோறும் 1,500 ரூபாய் வழங்கப்படும்
ராணிப்பேட்டை:
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்கள் தங்களின் தமிழ் மொழி இலக்கியத்திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில், பிளஸ்-1 மாணவர்களுக்கான தமிழ் திறனாய்வுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ் திறனாய்வு தேர்வு நடைபெற்றது.
இதற்காக மாவட்டத்தில் வாலாஜா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரக்கோணம் அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட மாவட்டத்தில் மொத்தம் 17 மையங்கள் அமைக்கப்பட்டன. இத்தேர்வு எழுத மொத்தம் 4 ஆயிரத்து 356 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடைபெற்ற தேர்வில் 4 ஆயிரத்து 190 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். 166 பேர் பங்கேற்வில்லை.
அரக்கோணம் வட்டத்தில் உள்ள தேர்வு மையங்களை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) விஜயலட்சுமி ஆய்வு செய்தார். இத்தேர்வு முடிவில், மாநிலம் முழுவதும் 1,500 பேர் தேர்வு செய்து, அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகையாக மாதந் தோறும் 1,500 ரூபாய் வழங்கப்படும்.
இதில், 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.






