என் மலர்
உள்ளூர் செய்திகள்

மகளுடனான தொடர்பை தட்டி கேட்டதால் கொலை செய்தேன்
- ஆட்டோ டிரைவர் வாக்குமூலம்- பரபரப்பு
- ஆற்காடு அருகே கட்டிட மேஸ்திரி குத்தி கொலை
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரியை அடுத்த டி.சி.குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 45), கட்டிட மேஸ்திரி. அதேப்பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன் (32), ஆட்டோ டிரைவர்.
இவர்கள் இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணனை, கிருபாகரன் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இது குறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஆட்டோ டிரைவர் கிருபாகரனை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை டி.சி.குப்பத்தை அடுத்த நத்தம் மலை பகுதியில் உள்ள தனது நிலத்தில் கிருபாகரன் பதுங்கி இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ரத்தினகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருபாகரனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து கைதான கிருபாகரன் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
கிருஷ்ணனின் 2-வது மகள் திவ்யபாரதியும் (28), கிருபா என்கிற கிருபானந்தனும் (32) காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த கிருஷ்ணன், மகள் திவ்யபாரதியை மேல்குப்பம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துவைத்தார். திருமணமான பிறகும் திவ்யபாரதியும், கிருபாவும் பேசி, பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த திவ்யபாரதியின் கணவர் கிருபாகரனை கண்டித்துள்ளார். மேலும் இதுகுறித்து தனது மாமனார் கிருஷ்ணனிடமும் கூறியுள்ளார்.
இதுகுறித்து கிருஷ்ணன் நேற்று முன்தினம் கிருபாகரனிடம் சென்று 'எனது மகளின் வாழ்க் கையை ஏன் கெடுக்கிறாய்' என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.
2 பேருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கிருபா, கிருஷ்ணனை ஆபாசமாக பேசி சரமாரியாக தாக்கினர். பின்னர் இரவு 7 மணியளவில் கிருபாகரன் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்துக் கொண்டு ஆவேசமாக வந்தார்.
தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார். வாலிபர் மாட்டிக் கொள்ளாமல் இருக்க மலையில் பதுங்கி இருந்தபோது கைது செய்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.






