search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sue the parents"

    • தென்னங்கன்றுகள் 100 விழுக்காடு மானியத்தில் வழங்கப்பட்டது
    • 1800 குடும்பங்கள் பயனடைந்தனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை துறை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் துறை சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    வேளாண்மைத்துறை சார்பாக இந்த ஆண்டு மாகாணிப்பட்டு, சிறுவளையம், பெறுவளையம், சங்கரன் பாடி, சிறுகரும்பூர் மற்றும் அத்திப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் குறு சிறு மற்றும் ஆதி திராவிட பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 1800 குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் 100 விழுக்காடு மானியத்தில் வழங்கப்பட்டது.

    நடவு மேற்கொள்ளப்பட்ட தென்னங்கன்றுகளை சென்னை வேளாண்மை ஆணையரக துணை இயக்குநர் ஸ்ரீவித்யா நேற்றுமுன்தினம் சிறுவளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராமாபுரம், பள்ளிப்பட்டறை மற்றும் பெருவளையம் ஊராட்சிக்கு உட்பட்ட களப்பலாம்பட்டு ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் இத்தரிசு நில தொகுப்பில் வரப்போரம் வேளாண்மை துறையினரால் நடப்பட்ட தேக்கு, மகாகனி முருங்கை மற்றும் அகத்தி மர கன்றுகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) செல்வராஜ், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சண்முகம், மாவட்ட வேளாண்மை அலுவலர் (மாநில திட்டம்) வினோத் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் ஆகாஷ் உடன் இருந்தனர்.

    • கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது
    • 3.5 கிலோ போதைபொருள் பறிமுதல்

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் பைக் ஓட்டிய சிறுவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து அவர்களின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இது குறித்து அரக்கோணம் டி.எஸ்.பி ஆர்.ரவிச்சந்திரன் கூறியதாவது:-

    அரக்கோணம் உட்கோட்டப் பகுதியில் வாகன விபத்துகளைக் குறைக்க சிறப்பு வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இதில் பைக் ஓட்டிய 18 வயதுக்கு குறைவான 9 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.அரக்கோணம் டவுன் உள்ளிட்ட பகுதிகளில் சிறுவர்கள் பைக்குகளை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறுவர்கள் ஓட்டி விபத்துகள் நடந்தால் பெற்றோர் மீதும், வாகன உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க ப்படும். அரக்கோணம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தற்போது கஞ்சா விற்பனை செய்ததாக 5 பேர் கைது செய்யப்ப ட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் கஞ்சாவை விற்பனைக்கு அனுப்பியவர்கள் குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது. கஞ்சா விற்பனை, தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை குறித்து கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்க ப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தொடர்ந்து சிறப்பு வாகன தணிக்கையிலும், தொடர் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

    ×