என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிரிக்கெட் அசோசியேஷன் முதலாம் ஆண்டு விழா
- 6 அணிகளுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷனின் முதலாம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் சந்தோஷ் காந்தி தலைமை தாங்கி பேசினார். செயலாளர் செல்வகுமார் ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஒ கே.எஸ்.விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் உதவி செயலாளர் டாக்டர்.ஆர்.என்.பாபா, பொருளாளர் டி.ஜெ.சீனிவாச ராஜ், வேலூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் ஜி.வி.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு கிரிக்கெட் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்தும், கிரிக்கெட் வீரர்களுக்கு தற்போது உள்ள வாய்ப்புகள் குறித்து விரிவாக பேசினர்.
பின்னர் மேற்கண்ட அணிகளினிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற 6 அணிகளுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. இதில் வேலூர், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருப்புத்தூர் மாவட்டங்களின் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த கிரிக்கெட் வீரர்கள், ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷனின் பொருளாளர் ஜெயக்குமார், இணை செயலாளர்கள் பாஸ்கர், எபினேசனர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பெல் கிரிக்கெட் கிளப் செயலாளர் நாராயண சாமி நன்றி கூறினார்.






