என் மலர்
ராணிப்பேட்டை
- கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை
- உறவினர்கள் வீடுகளில் தேடியும் இளம்பெண் கிடைக்கவில்லை
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் அரக்கோணத்தில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இளம்பெண் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் இளம்பெண் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அவளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் சிலர் கீழே விழுந்து காயமடைகின்றனர்
- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி 15-வது வார்டுக்கு உட்பட்ட ஜெ.சி.கே நகர், ஹவுசிங் போர்டு, பகுதிகளில் அதிக அளவில் தெருநாய்கள் உள்ளன.
கூட்டமாக தெருக்களுக்குள் சுற்றித்திரி வதால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இந்தப் பகுதிகளில் சமீப காலங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது.காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த தெருநாய்கள் அனைத்து தெருக்களிலும் அலைந்து திரிவதால் வயதானவர்கள் மற்றும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு மற்றும் வேறு இடங்களுக்கு செல்லும் போது ஒருவித அச்சத்துடனேயே செல்ல வேண்டியதாக உள்ளது.
காலை நேரத்தில் பணிக்கு செல்வோரும் பணி முடிந்து இரவு நேரத்தில் வீடு திரும்புவோரும், பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளும் மாலை நேரங்களில் டியூசன் செல்லும் மாணவர்களை துரத்திச் சென்று கடிக்கிறது.சக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் சிலர் கீழே விழுந்து காயமடைகின்றனர்.
பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்களையும் விடாமல் துரத்துவதால் மக்கள் தெருவில் நடக்கவே அஞ்சுகின்றனர்.
பொது மக்களின் நலன் கருதி நாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- இந்திய ஜனநாயகம் தழைக்க ஒத்துழைக்க வேண்டும்
- கலெக்டர் பேச்சு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிக ளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் 342 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
முகாமிற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் 221 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், ஒரு மாற்றுத்திறனாளி குழந்தைக்கு ரூ.8,500 மதிப்பிலான சக்கர நாற்காலியும் வழங்கினார்.
முகாமில் 183 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்கான பதிவும், 73 நபர்களுக்கு முதல மைச்சரின் காப்பீட்டு அட்டைக்கான பதிவும் மேற்கொள்ளப்பட்டது.
மாதாந்திர உதவித் தொகை வேண்டி 53 மாற்றுத்திறனாளிகளும், வங்கிக் கடனுதவி வேண்டி 69 பேரும், பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 29 பேரும் கோரிக்கை மனுக்களை வழங்கி னார்கள்.
முகாமில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி எந்த வாக்காளரும் விடுப டக்கூடாது என்ற அடிப்படையில் மாற்றுத்திற னாளிகள் எளிதாக தேர்தலில் வாக்களிக்கத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித்தரும் நோக்கில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வருகிற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிக்கும் வண்ணம் அனைத்து வாக்குச்சா வடிகளிலும் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்ப டுத்தப்படும் அனைவரும் தவறாமல் வாக்களித்து, இந்திய ஜனநாயகம் தழைக்க ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
- அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்
- ரூ.24 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை நகரில் உள்ள காரை அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் ஆதி திராவிட நலத்துறை சார்பில் தாட்கோ நிதியில் ரூ.41 லட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட்டுள்ள பள்ளி வகுப்பறைகள், 18 வது வார்டு காரை வண்ணாரப்பேட்டை ரோடு பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள சமுதாய கழிப்பிடம் ஆகியவற்றிற்கான திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். நகரமன்றத் தலைவர் சுஜாதா வினோத், ஆணையாளர் விநாயகம்,துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார். இதில் பள்ளி தலைமைஆசிரியர் கணபதி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செழியன், நகரமன்ற உறுப்பினர்கள் குமார், வினோத், கிருஷ்ணன், நகர செயலாளர் பூங்காவனம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நகை, பட்டு சேலைகள் திருடிசென்றனர்
- குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற போது கும்பல் கைவரிசை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த தணிகைபோளூர் கண்டிகையை சேர்ந்தவர் பாபு(50). இவர் பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு ஒன்றிய துணை தலைவராக உள்ளார். மேலும் தனியார் டயர் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் பாபு குடும்பத்தோடு நேற்று முன்தினம் திருப்பதி கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றிருந்தனர்.
இதனை நோட்டமிட்ட மர்ம கும்ப கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதிலிருந்த 4 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.11 ஆயிரம், 9 பட்டுப் புடவைகள் ஆகியவற்றை கொள்ளை யடித்து சென்றனர்.
தரிசனம் முடிந்து பாபு இன்று அதிகாலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்ப ட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசில் பாபு புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
கோவிலுக்கு சென்ற போது பா.ஜ.க. பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம கும்பல் கொள்ளை யடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
- சிறப்பு சோதனைகளில் ஈடுபட்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமையில், 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 16 இன்ஸ்பெக்டர்கள், 64 சப் -இன்ஸ்பெக்டர்கள் உள்பட 547 போலீசார் அடங்கிய குழுவினர் கடந்த 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை சிறப்பு சோதனைகளில் ஈடுபட்டனர்.
இதில் 4 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.37 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் சூதாடிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்ந்து அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து ஜெயிலில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- தென்னங்கன்றுகள் 100 விழுக்காடு மானியத்தில் வழங்கப்பட்டது
- 1800 குடும்பங்கள் பயனடைந்தனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை துறை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் துறை சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நடைபெற்று வருகிறது.
வேளாண்மைத்துறை சார்பாக இந்த ஆண்டு மாகாணிப்பட்டு, சிறுவளையம், பெறுவளையம், சங்கரன் பாடி, சிறுகரும்பூர் மற்றும் அத்திப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் குறு சிறு மற்றும் ஆதி திராவிட பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 1800 குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் 100 விழுக்காடு மானியத்தில் வழங்கப்பட்டது.
நடவு மேற்கொள்ளப்பட்ட தென்னங்கன்றுகளை சென்னை வேளாண்மை ஆணையரக துணை இயக்குநர் ஸ்ரீவித்யா நேற்றுமுன்தினம் சிறுவளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராமாபுரம், பள்ளிப்பட்டறை மற்றும் பெருவளையம் ஊராட்சிக்கு உட்பட்ட களப்பலாம்பட்டு ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இத்தரிசு நில தொகுப்பில் வரப்போரம் வேளாண்மை துறையினரால் நடப்பட்ட தேக்கு, மகாகனி முருங்கை மற்றும் அகத்தி மர கன்றுகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) செல்வராஜ், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சண்முகம், மாவட்ட வேளாண்மை அலுவலர் (மாநில திட்டம்) வினோத் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் ஆகாஷ் உடன் இருந்தனர்.
- கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது
- 3.5 கிலோ போதைபொருள் பறிமுதல்
அரக்கோணம்:
அரக்கோணத்தில் பைக் ஓட்டிய சிறுவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து அவர்களின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து அரக்கோணம் டி.எஸ்.பி ஆர்.ரவிச்சந்திரன் கூறியதாவது:-
அரக்கோணம் உட்கோட்டப் பகுதியில் வாகன விபத்துகளைக் குறைக்க சிறப்பு வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதில் பைக் ஓட்டிய 18 வயதுக்கு குறைவான 9 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.அரக்கோணம் டவுன் உள்ளிட்ட பகுதிகளில் சிறுவர்கள் பைக்குகளை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறுவர்கள் ஓட்டி விபத்துகள் நடந்தால் பெற்றோர் மீதும், வாகன உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க ப்படும். அரக்கோணம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது கஞ்சா விற்பனை செய்ததாக 5 பேர் கைது செய்யப்ப ட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் கஞ்சாவை விற்பனைக்கு அனுப்பியவர்கள் குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது. கஞ்சா விற்பனை, தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை குறித்து கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்க ப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தொடர்ந்து சிறப்பு வாகன தணிக்கையிலும், தொடர் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
- அமைச்சர் ஆர்.காந்தி சீர்வரிசை பொருட்கள் வழங்கினார்
- ஏராளமாேனார் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி,அங்கன்வாடி பணியாளர்கள் அமைத்திருந்த ஊட்டச்சத்து குறித்த உணவு கண்காட்சி அரங்கை பார்வையிட்டு, 200 கர்ப்பிணிகளுக்கு தனது சொந்த செலவில் சீர்வரிசை தட்டுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்றத் தலைவர்கள் சுஜாதா வினோத்,ஹரிணி தில்லை, முகமது அமீன், ஒன்றிய குழு தலைவர்கள் சேஷா வெங்கட், புவனேஸ்வரி சத்தியநாதன், நகரமன்ற துணை தலைவர் ரமேஷ் கர்ணா,ஒன்றியக் குழு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், நகரமன்ற உறுப்பினர்கள்,குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
தமிழக அரசு விளையாட்டுத்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகம் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் 40-வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே பயன்பெற முடியும். சர்வதேச போட்டிகளில் (வெற்றி பெற்றவர்கள், பங்கேற் றவர்கள்), தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற www. sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தகுதியான வீரர், வீராங்கனைகள் விண்ணப் பத்தினை பதிவிறக்கம் செய்து உரிய விவர இணைப்புகளுடன் வரும் 31-ம் தேதிக்குள், இணையதள முகவரி அல்லது சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இயங்கி வரும் தலைமை அலுவலகத்தில் அளிக்குமாறு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
- 4 ஆயிரத்து 190 பேர் பங்கேற்றனர்
- ஊக்கத்தொகையாக மாதந் தோறும் 1,500 ரூபாய் வழங்கப்படும்
ராணிப்பேட்டை:
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்கள் தங்களின் தமிழ் மொழி இலக்கியத்திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில், பிளஸ்-1 மாணவர்களுக்கான தமிழ் திறனாய்வுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ் திறனாய்வு தேர்வு நடைபெற்றது.
இதற்காக மாவட்டத்தில் வாலாஜா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரக்கோணம் அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட மாவட்டத்தில் மொத்தம் 17 மையங்கள் அமைக்கப்பட்டன. இத்தேர்வு எழுத மொத்தம் 4 ஆயிரத்து 356 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடைபெற்ற தேர்வில் 4 ஆயிரத்து 190 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். 166 பேர் பங்கேற்வில்லை.
அரக்கோணம் வட்டத்தில் உள்ள தேர்வு மையங்களை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) விஜயலட்சுமி ஆய்வு செய்தார். இத்தேர்வு முடிவில், மாநிலம் முழுவதும் 1,500 பேர் தேர்வு செய்து, அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகையாக மாதந் தோறும் 1,500 ரூபாய் வழங்கப்படும்.
இதில், 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
- 1½ கிலோ போதைபொருள் பறிமுதல்
அரக்கோணம்:
அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் அரக்கோணம் - திருவள்ளூர் ரோடு, புளி யமங்கலம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புளியமங்கலம் ரெயில்வே கேட் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் அரக்கோணம் அசோக் நகரை சேர்ந்த லோகேஷ் (வயது 22). தமிழரசு (23) மற்றும் மேல்பாக்கம் பகுதியை சேர்ந்த அபூர்வராஜ் (21) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்க ளிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் 3 பேர் மீதும் வழக்கு பதிந்து அவர்களை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் வேடல் பகுதியை சேர்ந்த கருணாகரன்(28), தண்டலம் பகுதியை சேர்ந்த சேட்டு(21) என்பதும் அவர் வைத்திருந்த பையில் ஒன்றரை கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
மேலும் 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






