கல்லூரி மாணவி மாயம்

கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை உறவினர்கள் வீடுகளில் தேடியும் இளம்பெண் கிடைக்கவில்லை
கல்லூரி மாணவி மாயம்
Published on

காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் அரக்கோணத்தில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இளம்பெண் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் இளம்பெண் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அவளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com