என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்தது
    • தொண்டர்கள் ஏராளமானோர் கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூரில் வாலாஜா கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஊராட்சி பூத் கமிட்டி , இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ,மகளிர் அணி,தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் வன்னிவேடு வி.கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் எம்.சி.பூங்காவனம் ,கே.துரை,பி.பி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாபு உள்பட நிர்வாகிகள் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சேவூர். எஸ். ராமச்சந்திரன்.எம்.எல்.ஏ, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பூத் கமிட்டிகளை ஆய்வு செய்து சரி பார்த்து ஆலோசனைகள் வழங்கி பேசினர்.

    கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி.ஏழுமலை, மாவட்ட பொருளாளர் சாபுதீன், நிர்வாகிகள் வேதகிரி,முனுசாமி,பூண்டி.பிரகாஷ், மூர்த்தி, நவ்லாக்.தயாளன், தனஞ்செழியன் உள்பட மாவட்ட,ஒன்றிய, கிளைகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
    • 1 கிலோ எடை கொண்ட பொட்டலங்கள் சிக்கியது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து ராணிப்பேட்டை போலீசார் அம்மூரில் இருந்து ரெட்டியூர் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் அம்மூர் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த சரண்ராஜ் (21), அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் (24) என்பதும், அவர்கள் 1 கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து 2 வாலிபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • மாவட்ட வனத்துறை‌ சார்பில் நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் மாவட்ட வனத்துறை சார்பில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்க சாலிடரிடாட் மற்றும் ஸ்விட்ச் ஆசியா ஆகிய அமைப்புகளுடன் இணைந்து 600 மரக்கன்றுகள் நடுதல் தொடக்க நிகழ்ச்சி ராணிடெக் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார்.

    ராணிடெக் தலைவர் ரமேஷ் பிரசாத், நிர்வாக இயக்குநர் ஜபருல்லா,பொது மேலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலிடரிடாட் அமைப்பின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நிபுணர் எலியோனோரா அவாக்லியானோ கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

    இதில் சுற்றுச்சூழல் பொறியாளர்கள். ரவிசந்திரன்,சந்திரசேகர், மாவட்ட வனத்துறை அலுவலர் கலாநிதி, வனச்சரக அலுவலர் சரவணபாபு , சாலிடரிடாட் மேலாளர் சுரில் பன்னிர்செல்வம் மற்றும் அதிகாரிகள், தொழில திபர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    • பெற்றோர்கள் எதிர்ப்பு
    • வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை பூசாரி பச்சையப்பன் தெருவை சேர்ந்தவர் சரவணன்.இவருடைய மகன் சூரியபிரசாத். வாலாஜாபேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவரும், சின்னதகரகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மகள் கவுதமி என்பவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    பெற்றோர்கள் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சரவணனும், கவுதமியும் வீட்டை விட்டு வெளியேறி நேற்று திருமணம் செய்து கொண்டனர்.

    பாதுகாப்பு கேட்டு நெமிலி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

    இது சம்பந்தமாக நெமிலி இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி இருவரின் பெற்றோரையும் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தி இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டனர் என தெரிவித்து, காதல் கணவருடன் இளம் பெண்ணை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

    • மாணவர்களுக்கு அமைச்சர் ஆர்.காந்தி பரிசு வழங்கினார்
    • 67 மாணவர்கள் கலந்து கொண்டு போட்டியிட்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொறியியல் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணன் தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் காந்தி வரவேற்றார். இதில் ராணிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 67 மாணவர்கள் கலந்து கொண்டு போட்டியிட்டனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும், 4 மாணவர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தி.மு.க.சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் வினோத்காந்தி, ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமுர்த்தி, நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு, ஆற்காடு ஒன்றிய குழு தலைவர் புவனேஸ்வரி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வேதா சீனிவாசன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் கலாநிதி, பானுசந்தர் திலீபன், சேகர் தினேஷ், கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
    • மாவட்ட ஊராட்சி கூட்டம் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிகுழுவின் சாதாரண கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை தலைவர் நாகராஜ், ஊராட்சி செயலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு கூறியதாவது:-

    ஏற்கனவே செய்த பணிகளுக்கு பில் கொடுக்காததால் மற்ற பணிகள் நடைபெறாமல் உள்ளது, நிலுவையில் உள்ள பணிகளை முடிக்கவைப்பது அதிகாரிகளின் வேலை ஆகும். நிலுவைகளில் உள்ள பணிகள் பல இடங்களில் முடிவடைந்துள்ளன.

    அரசு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது.ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்பட்ட பின்னர் தான் ஒப்பந்ததாரர்களுக்கு நிதி வழங்கபடுகிறது.அதிகாரிகளால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.

    நிலுவையில் உள்ள பணிகளை கண்காணிப்பது எங்கள் வேலை இல்லை. ஒப்பந்ததாரர்கள் முறையாக ஜி.எஸ்.டி செலுத்தவில்லை, ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை என்றால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

    அதை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. கூட்ட தீர்மானத்தின் படி அதிகாரிகள் நடக்கவேண்டும்.முடிந்த பணிகளுக்கு உடனடியாக பணம் வழங்க வேண்டும்,தேவையற்ற காரணங்களை கூறி முடக்க கூடாது என்ற குற்றச்சாட்டுகளை வலியுறுத்தினர்.

    மாவட்ட கவுன்சிலர்கள் சக்தி, செல்வம், காந்திமதி உள்பட பலர் பேசினர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் நவ்லாக் ஊராட்சியில் சிப்காட்டில், சிப்காட் தொழில் நிறுவனத்தின் மூலம் இணைப்பு சாலை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அமைப்பட்ட சாலை ஆகும்.

    இந்த சாலையை கடந்து தான் மணியம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட ஐ.ஒ.பி நகர், கீழ் மணியம்பட்டு மற்றும் நவ்லாக் ஊராட்சிக்குட்பட்ட வ.ஊ.சி நகர், திருவள்ளுவர் நகர், நேதாஜி நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியும். சிப்காட் தொழில் நிறுவனத்திற்கு சொந்தமான சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

    இச்சாலை சரியில்லாத காரணத்தால் பள்ளி மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள், அலுவலகத்திற்கு செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சிப்காட் நிறுவனம் மூலம் இச்சாலைகளை புதுப்பித்து அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பல பொதுத்துறை வங்கிகளில் பொது கழிப்பறை வசதி இல்லாததால் வங்கிக்கு வரும் பெண்கள் சிரமப்படுகின்றனர்.

    அதனால் வங்கிகள் உள்ள இடத்தில் பொது கழிப்பிடம் அமைத்தும், இடவசதியில்லாத இடங்களில் நடமாடும் கழிவறையாவது அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் மாவட்ட ஊராட்சி உதவியாளர் உமாபதி நன்றி கூறினார்.

    • மினி வேன் தாறுமாறாக ஓடி முட்புதரின் மீது சாய்ந்து
    • பாதுகாப்பாக அதிகாரி வாகனத்தில் அனுப்பி வைத்தார்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பொன்ன ப்பன்தாங்கல் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு மா ணவ ர்களை ஏற்றி க்கொண்டு மினி வேன் சென்று கொண்டிருந்தது.

    புதுப்பட்டு காலனி பகுதி அருகே வரும்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள முட்புதரின் மீது சாய்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.

    அப்போது அந்த வழியாக வந்த கலெக்டர் வளர்மதி விபத்து நடந்த இடத்தில் இறங்கினார்.

    மேலும் பள்ளி மாணவர்களை மீட்டு கலெக்டர் வளர்மதி பாதுகாப்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரி வாகனத்தில் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.

    • மாணவ, மாணவிகளுக்கு உணவினை பரிமாறினார்
    • உணவு பொருட்கள் தரம் குறித்து சோதனை

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த வள்ளுவம்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு முதல் -அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை பள்ளியில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி திடீர் ஆய்வு செய்தார்.

    பள்ளி மாணவ, மாணவி களுக்கு உணவினை பரிமாறி, உணவின் சுவை, சமையல் கூடத்தில் பயன்ப டுத்தப்படும் உணவு பொருட்கள் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    அப்போது பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

    • நினைவு சின்னத்திற்கு மலர்வளையம் வைத்தனர்
    • 63 குண்டுகள் முழங்கிட அரசு மரியாதை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா தலைமை தாங்கி பணியின் போது உயிர் நீத்த காவலர்கள் நினைவு சின்னத்திற்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தொடங்கி வைத்தார். பின்னர் 63 குண்டுகள் முழங்கிட போலீசார் மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் குமார், ரவிச்சந்திரன், பிரபு, சுரேஷ், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் உள்பட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பங்கேற்று பணியின் போது உயிர் நீத்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

    • ராணிப்பேட்டை கோர்ட் தீர்ப்பு
    • உயிருடன் தப்பி வந்து நடந்த சம்பவத்தை தனது பாட்டி, ஊர் பொதுமக்களிடம் தெரிவித்தான்

    ராணிப்பேட்டை :

    அரக்கோணம் தாலுகா, தக்கோலம் அடுத்த கணபதிபுரம் கிராமம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் முனியப்பன்(40) முடிதிருத்தும் தொழில் செய்து வந்தார். இவருக்கும் காஞ்சிபுரம் அடுத்த போந்தவாக்கம் கிராமத்தை சேர்ந்த ராதா(34) என்பவருக்கும் திருமணமாகி தீபக்(7) ரூபன்(3.1/2) என இரண்டு மகன்கள் இருந்தனர்.

    இந்நிலையில் முனியப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்நதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ராதா கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இதனால் தீபக், ரூபன் ஆகிய இரண்டு பேரும் முனியப்பனுடைய தாய் மற்றும் தங்கையிடம் வளர்ந்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 29.06.2018 அன்று காஞ்சிபுரம் சென்ற முனியப்பன் தனது மனைவி ராதாவை தன்னுடன் வாழ அழைத்துள்ளார் .

    அதற்கு ராதா வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனியப்பன் மறுநாள் 30ம் தேதி அன்று கணபதிபுரத்திற்கு வந்து தனது மகன்களிடம் உங்கள் தாய் என்னுடன் வாழ வரவில்லை என தெரிவித்துள்ளார்.

    பின்னர் தனது இரு மகன்களையும் கிணற்றிற்கு அழைத்து சென்று இளைய மகன் ரூபனை கிணற்றில் தள்ளிவிட்டு, பின்னர் தீபக்கையும் தூக்கி கிணற்றில் வீசிவிட்டு முனியப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் சிறுவன் ரூபன் நீரில் மூழ்கி இறந்து விட்டான் .

    தீபக் மட்டும் உயிருடன் தப்பி வந்து நடந்த சம்பவத்தை தனது பாட்டி, அத்தை மற்றும் ஊர் பொதுமக்களிடம் தெரிவித்தான்.

    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தக்கோலம் போலீசார் வழக்கு பதிவு செய்து முனியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் நேற்று ராணிப்பேட்டை இரண்டாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், முனியப்பனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து முனியப்பன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • தூய்மை பணியாளர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்
    • பணிக்கு வந்த நிரந்தர ஊழியர்களிடம் பிச்சை கேட்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    இங்கு உள்ள குடியிருப்பு பகுதிகளில் தூய்மை செய்யும் பணியை மேற்கொள்ள ஒப்பந்தம் விடப்பட்டு ஒப்பந்த முறையில் 34 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் 2-ந் தேதி வழங்க வேண்டிய சம்பளத்தை முறையாக வழங்காமல் காலம் தாழ்த்தி வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    எனவே தங்களுக்கு குறித்த தேதியில் முறையாக சம்பளம் வழங்க வேண்டுமென கூறி நேற்று பெல் தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பணிக்கு வந்த நிரந்தர ஊழியர்களிடம் பிச்சை எடுத்து நூதன போராட்டத்திலும் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வாலாஜா ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் நேற்று ஒன்றிய குழு தலைவர் சேஷா.வெங்கட் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவப்பிரகாசம் , சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். சீக்கராஜபுரம் பகுதியில் கால்நடை மருத்துவ முகாம்கள் நடைபெறும் போது முறையான தகவல்கள் தெரிவிப்ப தில்லை. இதனால் பொதுமக்கள் தொலைவில் உள்ள நவ்லாக் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிரமப்பட்டு வருகின்றனர்.

    ஒன்றிய பகுதிகளில் பணிகளுக்கு விடப்படும் டெண்டர்கள் குறித்து உறுப்பினர்களுக்கு தகவல்தெரியப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில்:-

    சீக்கராஜபுரம் பகுதி பொது மக்களின் கால் நடைகளுக்கு சிகிச்சை பெற வசதிக்காக ஏகாம்பரநல்லூர் கால்நடை மருத்துவமனையுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஒன்றியக்குழு பதவி ஏற்று 2 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

    இதில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஒன்றியத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் சுமார் ரூ.30 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளது.

    இதற்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் ஆர்.காந்திக்கும் நன்றி தெரிவித்து க்கொள்கிறேன் என்றர்.

    கூட்டத்தில் ஒன்றி யக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×