என் மலர்
ராணிப்பேட்டை
- மீன் பண்ணையில் மீன்கள் உற்பத்தி செய்யப்படுவதை பார்வையிட்டார்
- உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்
ராணிப்பேட்டை:
வாலாஜா ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் வளர்மதி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாலாஜா அடுத்த அம்மனந்தாங்கல் ஊராட்சியில் மீன்வளத் துறை மூலம் பிரதமரின் மத்திய சம்பர்த யோஜனா திட்டத்தின் மூலம் பயோ பிளாக் முறையில் அமைக்கப்பட்டுள்ள மீன் பண்ணையில் மீன்கள் உற்பத்தி செய்யப்படுவதை பார்வையிட்டார்.
முசிறி ஊராட்சியில் விதை பண்ணை அமைத்து விதை நெல் நடவு செய்யப்பட்டுள்ள நிலத்தினையும், பாகவெளி ஊராட்சி காட்டேரி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் பொறியியல் துறையின் மூலம் பண்ணை குட்டை அமைத்து மீன் வளர்ப்பு தொழில் நடைபெறுவதையும் கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு விவரங்கள் கேட்டறிந்து, அறிவுரைகள் வழங்கினார்.
ஆய்வின் போது பல்வேறு அரசுத்துறைகளின் உயர் அதிகாரிகள் உடன்இருந்தனர்.
- 3 உண்டியல்களை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் முகுந்தராயபுரம் ஊராட் சிக்கு உட்பட்ட மலைமேடு கிராமத்தில் மலைமீது குமரன் கோவில் உள்ளது. இங்கு தின மும் ஏராளமன பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து வள்ளி, தெய் வானை கழுத்தில் இருந்த 4/2 பவுன் மாங்கல்யம், 3 உண்டி யல்களை உடைத்து சுமார் ரூ.30 ஆயிரம் பணம் ஆகிய வற்றை திருடிச்சென்றுள்ளனர்.
நேற்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு சென்ற நிர்வாகிகள் பூட்டு உடைக்கப் பட்டு நகை மற்றும் பணம். திருடப்பட்டிருப்பதைகண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சென்று பார்வை யிட்டு விசாரணை நடத்தி னர்.
- ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை
- யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என அடையாளம் தெரியவில்லை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பாலாற்றங்கரையில் உள்ள வேப்பமரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து போலீசார் தூக்கில் பிணமாக கிடந்தவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முன்னெச்சரிக்கையாக இருப்பது குறித்து விளக்கம்
- எராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையம் சார்பாக சிப்காட்டில் உள்ள தனியார் பொம்மைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கான சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நடந்தது.
நிகழ்ச்சியில் சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமை தாங்கினார். தொழிற்சாலை மனித வள மேம்பாட்டு பிரிவு மேலாளர் பிரபாகரன் வரவேற்று பேசினார்.
தொழிலாளர்களுக்கு மொபைல் போன் அழைப்புகள் மூலம் நடைபெறும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், பாதிக்கப்படாமல் முன்னெச்சரிக்கையாக இருப்பது குறித்தும் விரிவாக தெரிவிக்கப்பட்டது.
இதில் சிப்காட் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சஞ்சீவிராயன் உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
- டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை
- சாலை வசதியை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஒன்றியக்குழு மாதாந்திர கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு தலைமை தாங்கி னார். துணைத்தலைவர் தீனதயாளன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ரவி ஆகியோர் வரவேற்றனர்.
கூட்டத்தில் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் குடிநீர் மற்றும் சாலை வசதியை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் மழைக்காலங்களில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், அனைத்து துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- ஒருவர் படுகாயம்
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
சோளிங்கரை அடுத்த கொடைக்கல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 45). இவர் பைக்கில் துரை (54) என்பவரை ஏற்றிக்கொண்டு, கொடைக்கல் கிராமத்திலி ருந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன், பைக் மீது மோதியது. இதில் முத்துக் குமார், துரை ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவம னைக்கு எடுத்துச்சென்ற போது முத்துக்குமார் வழியி லேயே இறந்துவிட்டார். துரைக்கு கிச்சை அளித்து அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கொண்டப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
- மாற்றுப்பாதையை பயன்படுத்த வேண்டுகோள்
- ரெயில்வே கேட் பகுதியை பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுரை
அரக்கோணம்:
அரக்கோணம் - ஓச்சேரி பிரதான சாலையில் மேல்பாக்கம் பகுதியில் உள்ள அரக்கோணம் - காஞ்சீபுரம் ரெயில் மார்கத்தின் ரெயில்வே கேட் பகுதியில் இன்று (புதன்கிழமை) முதல் 27-ந் தேதி வரை இரவு 9 மணி முதல் மறுநாள் காலை மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
எனவே, அத்தியாவசிய தேவைக்கு பொது மக்கள் மற்றும் வாகனங் களில் செல்வோர் மேற்குறிப்பிட்டுள்ள நாட்களின் இரவில் ரெயில்வே கேட் பகுதியை பயன்படுத்துவதை தவிர்த்து பருத் திபுத்தூர் வழியாககும்பினிபேட்டை செல்லும் சாலையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அரக்கோணம் தாசில் தார் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
- 21 மூட்டைகள் பறிமுதல்
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையில் போலீசார் நரசிங்கபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நரசிங்கபு ரத்தில் உள்ள ஒரு வீட்டில் ரேசன் அரிசி மூட்டைகளை அடுக்கி வைத்துக் கொண்டி ருந்த நபர் தப்பிக்க முயன்றுள்ளார்.
அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் நரசிங்கபுரம், உடையார் தெருவை சேர்ந்த சரவணன் (வயது 40) என்பதும் , அங்கு அடுக்கி வைத்திருந்த அரிசி மூட்டைகளை பிரித்து சோதனை செய்த போது அதில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 21 மூட்டைகளில் சுமார் 1,050 கிலோ ரேசன் அரிசி இருப்பதும் தெரியவந்தது.
ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை ரெயில் மூலம் கர்நாடக மாநிலம், பங்காருபேட்டை கொண்டு சென்று அங்குள்ள ஓட்டல்கள் மற்றும் கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்று வருவது தெரிய வந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் வாலாஜாவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படை க்கப்பட்டது.
இது தொடர்பாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீசார், சரவணனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கொலு அமைக்கப்பட்டது
- பூஜைகளும், பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் சபரி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ நவசபரி அய்யப்பன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 15-ந் தேதி முதல் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டது.
தினந்தோறும் கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகிய முப்பெரும் தேவியருக்கு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்று வந்தது.
தெய்வங்கள், புராண இதிகாச நாயகர்கள், குருமார்கள், தேசத்தலை வர்கள் என நமது பாரம்பரிய பண்பாட்டினை பறை சாற்றும் வகையில் அழகிய பொம்மைகளை வைத்திருந்தனர்.
பூஜைகளும், பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது.
இதனைத்தொடர்ந்து நேற்று நவராத்திரி நிறைவு விழாவை முன்னிட்டு
கோவில் குருசாமி ஜெயச்சந்திரன் தலைமையில் காலை கோவில் நடைதிறக்கப்பட்டு கணபதி ஹோமம், அஷ்டா பிஷேகத்துடன் நவசபரி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் மாலையில் நவராத்திரி சிறப்பு பூஜையும், ஸ்ரீ சபரி சாஸ்தா சமிதியினரின் பஜனை நடைபெற்றது.
இதில் ராணிப்பேட்டை, சிப்காட் உள்பட சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் ஹரிவராசனம் பாடப்பட்டு, பக்தர்களுக்கு அன்ன பிரசாதமும் வழங்கப்பட்டது.
- 6 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் கொண்டகுப்பம் கிராமம்,சிலோன் காலனி அண்ணா நகரை சேர்ந்தவர்கள் ரவிகுமார் (வயது42), மணிகண்டன்(40).
இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு பள்ளேரி- வசூர் சாலையில் பொன்னை ஆற்று பாசன கால்வாய் பாலத்தில் அமர்ந்து மது குடித்தனர்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 6பேர் கொண்ட கும்பல் ரவிக்குமார் மற்றும் மணிகண்டனை தாக்கிவிட்டு ரவிக்குமார் வைத்திருந்த ரூ.20ஆயிரம் பணம், மற்றும் 2 பேரின் செல்போன்களை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.
இதில் ரவிக்குமாருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டு பூட்டுதாக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ரவிக்குமார் சிப்காட் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தகராறில் ஈடுபட்டு சரமாரியாக அடித்து உதைத்தனர்
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் அடுத்த சென்னசமுத்திரம் அருகே உள்ள மலைமேடு கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (36) ராணிப்பேட்டை மாவட்ட பா.ஜ.க. ஒ.பி.சி. அணி பொது செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
இவர் மினரல் வாட்டர் கேன்களை கடை கடையாக சப்ளை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் மதியம் வாணியன் சத்திரம் டாஸ்மாக் கடை அருகே உள்ள பெட்டி கடையில் மினரல் வாட்டர் கேன்களை இறக்கி கொண்டு இருந்த போது போதையில் அங்கிருந்த கடப்பேரி காலனி பகுதியை சேர்ந்த கோபி (27), சிலம்பரசன் (29) மற்றும் சிலர் பார்த்திபனிடம் வாய் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக அடித்து உதைத்தனர்.
தாக்குதலில் காயம் அடைந்த பார்த்திபனை அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து பார்த்திபன் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மது போதையில் ஏற்பட்ட தகராறில் விபரீதம்
- வீட்டின் படியில் தலை மோதி மயக்கம் அடைந்தார்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம், கலவையை அடுத்த அருப்பாக்கம் குளத்து தெருவை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 40), கூலித்தொழிலாளி. பள்ளமுள்ளுவாடி, சின்ன நாயக்கர் தெருவை சேர்ந்தவர் கமலகண்ணன் (33). தனியார் கல்லூரியில் சமையல் மாஸ்டராக வேலைபார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இவர்கள் இருவரும் மது குடிப்பதற்காக சென்றனர். மது போதையில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
ஆத்திரமடைந்த கமலகண்ணன், மகாதேவனை பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. அப்போது மகாதேவன் வீட்டின் படியில் தலை மோதி மயக்கம் அடைந்தார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கலவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்த துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரபு சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.கலவை இன்ஸ்பெக்டர் காண்டீபன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் ஆகியோர் மகாதேவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலக்கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






