என் மலர்
நீங்கள் தேடியது "Yo is set in block mode"
- மீன் பண்ணையில் மீன்கள் உற்பத்தி செய்யப்படுவதை பார்வையிட்டார்
- உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்
ராணிப்பேட்டை:
வாலாஜா ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் வளர்மதி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாலாஜா அடுத்த அம்மனந்தாங்கல் ஊராட்சியில் மீன்வளத் துறை மூலம் பிரதமரின் மத்திய சம்பர்த யோஜனா திட்டத்தின் மூலம் பயோ பிளாக் முறையில் அமைக்கப்பட்டுள்ள மீன் பண்ணையில் மீன்கள் உற்பத்தி செய்யப்படுவதை பார்வையிட்டார்.
முசிறி ஊராட்சியில் விதை பண்ணை அமைத்து விதை நெல் நடவு செய்யப்பட்டுள்ள நிலத்தினையும், பாகவெளி ஊராட்சி காட்டேரி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் பொறியியல் துறையின் மூலம் பண்ணை குட்டை அமைத்து மீன் வளர்ப்பு தொழில் நடைபெறுவதையும் கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு விவரங்கள் கேட்டறிந்து, அறிவுரைகள் வழங்கினார்.
ஆய்வின் போது பல்வேறு அரசுத்துறைகளின் உயர் அதிகாரிகள் உடன்இருந்தனர்.






