search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trafficking in cannabis"

    • காட்பாடியில் 2 பேர் கைது
    • போலீசார் வாகன தணிக்கையில் சிக்கினர்

    வேலூர்:

    ஆந்திராவில இருந்து ரெயில் மற்றும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலம் கஞ்சா கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தனிப்படைகள் அமைத்து போலீசார் சோதனை நடத்தியும், அவர்கள் ஒரு சில நேரங்களில் தப்பிச் செல்கின்றனர்.

    அதன்படி வேலூர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள், காட்பாடி ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.

    இந்த நிலையில் தமிழக -ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டி யான்பேட்டை சோதனை சாவடி அருகில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆந்திராவில் இருந்து வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். இதில் சந்தேகக்கும் வகையில் பிளாஸ்டிக் காகிதம் சுற்றப்பட்ட பண்டல்கள் இருந்தன. அதனைப் பிரித்து பார்த்தபோது அதில் சுமார் 100 கிலோ கஞ்சா இருந்தது.

    லாரியில் வந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஈரோடு பகுதியை சேர்ந்த சதாசிவம் (வயது 30), திருச்சியை சேர்ந்த பாண்டீஸ்வரன் (25) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தியதும் தெரிந்தது.

    2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிட மிருந்து கஞ்சா பொட்ட லங்களை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
    • 1 கிலோ எடை கொண்ட பொட்டலங்கள் சிக்கியது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து ராணிப்பேட்டை போலீசார் அம்மூரில் இருந்து ரெட்டியூர் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் அம்மூர் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த சரண்ராஜ் (21), அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் (24) என்பதும், அவர்கள் 1 கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து 2 வாலிபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 1½ கிலோ பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் டவுன் போலீசார் மங்கம்மாபேட்டை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    பின்ன ர் அவர்களின் சோதனை செய்தபோது 1½ கிலோ கஞ்சா கடத்தியது தெரிந்தது.

    விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரத்தை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 34), ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராஜசேகர் (32), தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கண்ணவேணி மகேஷ் (27 ) என்பது தெரிய வந்தது.

    வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆந்திராவில் இருந்து கண்டெய்னர் லாரியில் வந்தது
    • மதுரை உரிமையாளர் முன்பு பிரித்து பரிசோதனை

    வேலூர்:

    வடமாநிலங்களில் இருந்து வேலூர் வழியாக கன்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர் நேற்று இரவு 9 மணியளவில் வேலூர் கொணவட்டம் பகுதியில் சென்னை-பெங்களூரு அணுகுசாலையில் திடீரென வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.

    அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி, வேன், சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி, அவற்றில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்று சோதனை செய்தார்.

    அதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவினர் அந்த வழியாக வந்த மற்ற வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்தினர்.

    அப்போது ஒரு கன்டெய்னர் லாரியில் ஏராளமான பிளாஸ்டிக் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. போலீசார் இதுகுறித்து டிரைவரிடம் விசாரித்தபோது மூட்டைகளில் பஞ்சு இருப்பதாக தெரிவித்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியில் இருந்த மூட்டைகளை சோதனை செய்வதற்காக ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்துக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு வைத்து வேலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் போலீசார் 2 மூட்டைகளை சோதனை செய்தனர். அந்த மூட்டைகளில் பஞ்சு இருப்பது தெரிய வந்தது. டிரைவரிடம் நடத்திய விசாரணையில், ஒரிசாவில் இருந்து பஞ்சு மூட்டைகளை சேலத்துக்கு கொண்டு செல்வதாக கூறினார்.

    பின்னர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து மதுரைக்கு செல்வதாக டிரைவர் தெரிவித்தார்.மேலும் சில கேள்விகளுக்கு டிரைவர் முன்னுக்கு பின் முரண்பாடான தகவல்கள் தெரிவித்தார்.

    அதனால் லாரியில் இருக்கும் அனைத்து பஞ்சு மூட்டைகளையும் பிரித்து சோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இது குறித்து மதுரையை சேர்ந்த லாரி உரிமையாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரது முன்னிலையில் இன்று சோதனை செய்ய ஏற்பாடு செய்தனர்.

    வேலூரில் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் ஆந்திராவில் இருந்து மதுரை மற்றும் தேனி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்திய நபர்கள் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    லாரியில் உள்ள பஞ்சு மூட்டைகளில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தால் தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வரும் கும்பலை கூண்டோடு கைது செய்ய வாய்ப்பு உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

    • 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
    • கலெக்டர் அதிரடி நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 22). பிஞ்சி ஆத்துக்கால்வாய் தெருவை சேர்ந்தவர் அஜய் (21) இவர்கள் 2 பேரும் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.

    இது சம்பந்தமாக கடந்த மாதம் 13-ந்தேதி அன்று கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேற்படி இருவரும் கஞ்சா சம்பந்தப்பட்ட வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் சாமுவேல் மற்றும் அஜய் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் பரிந்துரை செய்தார்.

    அதன் பேரில் 2 வாலிபர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து அவர்கள்குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    • 1 ½ கிலோ பறிமுதல்
    • வியாபாரி கைது

    குடியாத்தம்:

    குடியாத்தம் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின்பேரில் கஞ்சா வியாபாரிகளை போலீசார் கண்காணித்து வந்தனர்.

    அதில் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட குடியாத்தம் நெல்லூர்பேட்டை, தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் 10 பேரை கூட்டாளிகளாக வைத்துக்கொண்டு கஞ்சா விற்பது தெரியவந்தது.

    அவரது கூட்டாளிகள் 8 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கியமான வியாபாரியை தொடர்ந்து கஞ்சா விற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சுரேஷ்குமார், பிரபு, கணேசன் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர் குடியாத்தம் அருகே பெரும்பாடு ரோடு சேங்கண்டியம்மன் கோவில் அருகே கஞ்சா வியாபாரியை கைது செய்தனர். அவரிடமிருந்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமநேர் அடுத்த காலவபல்லி கிராமத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    • கேரள வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் தனிப்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உஷாராணி தலைமையில் கண்ணன், அருண்குமார் உள்ளிட்ட ரெயில்வே போலீசார் நேற்று ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திலும், ஜோலார் பேட்டை மார்க்கமாக செல்லும் ரெயில்களிலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என்பது குறித்து சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஹவுராவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் வரை செல்லும் பெங் களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் வந்து நின்றது.

    அப்போது தனிப்படை போலீசார் ரெயில் பெட்டியில் சோதனை செய்தபோது இருக்கையின் அடியில் இருந்த பையை சோதனை செய்தபோது அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து இருக்கையின் அருகே அமர்ந்திருந்த வாலிபர் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டதில் கேரள மாநிலம் ஆலப்புழா அடுத்த கோமலாபுரம் பகுதியை சேர்ந்த முகமது ஷரீப் என்பவரின் மகன் ஷபி (வயது 27) என்பதும், ஒடிசா மாநிலம் செமிலிகுடாவில் இருந்து கஞ்சாவை குறைந்த விலைக்கு வாங்கி பெங்களூருக்கு கடத் தியது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • 100 கிராம் பறிமுதல்
    • போலீசார் சோதனையில் சிக்கினர்

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த் திகேயன் உத்தரவின்பேரில் திருவண்ணாமலை கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வினி தலைமையில் தண் டராம்பட்டு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார் கஞ்சா தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அகரம் பள்ளிப்பட்டு கிராமத்திற்கு அருகில் 2 பேர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்தனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா புதுப் பேட்டை கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார் மகன் மணிகண்டன் (வயது 21), சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த வெள்ளையன் மகன் விஜய் (22) என்பதும், கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.

    • 2 கிலோ பறிமுதல்
    • வாகன தணிக்கையின் போது சிக்கினர்

    போளூர்:

    போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார், கருணாநிதி, மற்றும் போலீசார் நேற்று பிற்பகல் வசூர் கூட்ரோடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது பதிவு எண் இல்லாத கார் அதிவேகமாக சென்றது. அந்தக் காரை போலீசார் பின் தொடர்ந்து மடக்கிப்பிடித்தனர்.

    காரில் சோதனை செய்ததில் சுமார் 2 கிலோ எடையுள்ள கஞ்சா பாக்கெட்டுகள் (மதிப்பு ரூபாய் 20000) பறிமுதல் செய்தனர்.

    காரில் பயணம் செய்த போளூர் அல்லி நகரைச் சேர்ந்த பாலகுமாரன் (32) போளூர் மாட்டுப்பட்டி தெருவை சேர்ந்த சுரேஷ் (38) போளூர் வேங்கடத்தான் தெருவில் வசிக்கும் குமரேசன் (32) திருப்பத்தூர் அருகே பொம்மி குப்பம் சேர்ந்த மூர்த்தி (47) ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தப்பி ஓடிய பொம்மி குப்பம் சேர்ந்த மாது மகன் வேலு என்பவரை தேடி வருகின்றனர்.

    • போலீசாரின் வாகன சோதனையில் சிக்கினர்
    • 1½ கிலோ கஞ்சா பறிமுதல்

    அரக்கோணம்:

    அரக்கோணம் மங்கம்மாபேட்டை பகுதியில் டவுன் இன்ஸ் பெக்டர் சாலோமன் ராஜா தலைமையில் பயிற்சி சப்-இன்ஸ் பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத் திற்கு இடமளிக்கும் வகையில் ஸ்கூட்டரில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் ஆந்திர மாநி லம் ஓ.ஜி.குப்பத்தை சேர்ந்த துர்காராவ் (வயது 38), அவரது தம்பி மகேந்திரா (35) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.

    இதனையடுத்து அவர்களிடம் இருந்து சுமார் 1½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, அண்ணன் தம்பி மீது வழக் குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • 4 கிலோ போதை பொருள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடி-ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே அசாம் மாநிலம் கவுகாத்தி ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு செல்லக்கூடிய பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது சேலம் ரெயில்வே உட்கோட்ட சிறப்பு பிரிவு போலிசார் அடங்கிய தனிப்படையினர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா என சோதனை மேற்கொண்டதில் பொது பெட்டியில் உடமைகள் வைக்கும் பகுதியில் இருந்த பேக்கில் சோதனை செய்ததில் அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து குறித்து விசாரித்ததில் அந்த பெட்டியில் பயணம் செய்த அசாம் மாநிலம் போர்லெங்கிரி பகுதியை சேர்ந்த கைருல் இஸ்லாம் (வயது 34) என்பவர் கவுகாத்தி பகுதியில் இருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் பகுதிக்கு எடுத்து சென்றது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    • சோதனைச்சாவடிகளில் 3 சுழற்சிகளாக ஆய்வு
    • சோதனையை தீவிரப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

    வேலூர்:

    ஆந்திர மாநிலத்துடன் வேலூர் மாவட்ட எல்லை சுமார் 80 கிலோமீட்டர் கொண்டதாக உள்ளது. பொன்னை, கிறிஸ்டியான்பேட்டை, பரதராமி, சயனகுண்டா சோதனைச்சாவடிகள் உள்ளன. கஞ்சா கடத்தல் தடுக்க தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஆனால், மாவட்ட எல்லையில் உள்ள சில கிராமங்கள் வழியாக சுலபமாக வந்து செல்ல முடியும் என கூறப்படுகிறது. ஆந்திர மாநிலத்துடன் இணைக்கும் கிராம அளவிலான அனைத்து பாதைகள் குறித்த விவரங்களையும் உட்கோட்ட அளவில் போலீசார் சேகரித்துள்ளனர்.

    இங்கு சோதனையை தீவிரப் படுத்த முடிவு செய்துள்ளனர். மேலும், ஆந்திர மாநிலத்தில் இருந்து இனி வேலூர் மாவட்டம் வழியாக ஒரு கிலோ கஞ்சாவும் கடத்த முடியாத அளவுக்கு சோதனையை தீவிரப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தர விட்டுள்ளார்.

    மாநில எல்லை சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் 3 சுழற்சிகளாக சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே பஸ்களில் இன்று போலீசார் சோதனை நடத்தினர்.

    ×