search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயிலில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது
    X

    ரெயிலில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது

    • 4 கிலோ போதை பொருள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடி-ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே அசாம் மாநிலம் கவுகாத்தி ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு செல்லக்கூடிய பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது சேலம் ரெயில்வே உட்கோட்ட சிறப்பு பிரிவு போலிசார் அடங்கிய தனிப்படையினர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா என சோதனை மேற்கொண்டதில் பொது பெட்டியில் உடமைகள் வைக்கும் பகுதியில் இருந்த பேக்கில் சோதனை செய்ததில் அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து குறித்து விசாரித்ததில் அந்த பெட்டியில் பயணம் செய்த அசாம் மாநிலம் போர்லெங்கிரி பகுதியை சேர்ந்த கைருல் இஸ்லாம் (வயது 34) என்பவர் கவுகாத்தி பகுதியில் இருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் பகுதிக்கு எடுத்து சென்றது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×