திமிரி ஒன்றியத்தில் சமுதாய வளைகாப்பு விழா

சீர்வரிசை தட்டுகளை வழங்கி வாழ்த்தினார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திமிரி ஒன்றியத்தில் சமுதாய வளைகாப்பு விழா
Published on

கலவை:

திமிரி ஒன்றியம் கே.பி.ஜே மஹாலில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

இந்நிகழ்ச்சியில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு ஆற்காடு சட்டமன்றத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 200 கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், சந்தனம் பல்வேறு பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தட்டுகளை வழங்கி வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், ஒன்றியக் குழுத் தலைவர்கள் எஸ்.அசோக், புவனேஸ்வரி சத்தியநாதன், துணைத் தலைவர் ஜெ.ரமேஷ், நகரமன்றத் தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சி.தன்ராஜ், பேரூராட்சித் தலைவர் மாலா இளஞ்செழியன், துணைத் தலைவர் கௌரி தாமோதரன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் பாரதி, அம்சப்பிரியா, கிரிஜா தேவி மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com