என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளைஞர் எழுச்சி தின ஊர்வலம்
- அப்துல் கலாமின் பிறந்த நாள் கொண்டாட்டம்
- ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாள் ஆண்டு தோறும் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு ராணிப்பேட்டையில் பள்ளி கல்வித்துறை மூலம் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பங்கேற்ற இளைஞர் எழுச்சி தின ஊர்வலம் நடைபெற்றது. ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் நவல்பூர், புதிய பஸ் நிலையம் வழியாக வந்து பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.
இதில் பள்ளிகளின் நாட்டு நலப்பணித் திட்டத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட தொடர்பு அலுவலர் அற்புதராஜ் இந்த ஊர்வலத்தை ஒருங்கிணைத்தார். இதில் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.






