என் மலர்
உள்ளூர் செய்திகள்

பட்டாசு குறித்து பாதுகாப்பு விழிப்புணர்வு
- பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்
- கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார்.
கூட்டத்தில் வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, காவல் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகளின் மூலம் பாதுகாப்பு நடைமுறைகள், விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டால் அதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமி நாராயணன், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் துணை இயக்குனர் சாந்தி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






