என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிணற்றில் ஆண் பிணம் மீட்பு
- யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என அடையாளம் தெரியவில்லை
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்திலிருந்து வாணாபாடி கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் பழமை வாய்ந்த கிணறு உள்ளது.
ஆழமான இந்த கிணற்றில் தற்போது பெருமளவிற்கு நீர் நிரம்பி உள்ளது . இந்த நிலையில் இன்று காலை கிணற்றில் ஆண் பிணம் மிதப்பது குறித்து அப்பகுதி பொது மக்கள் ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு கிணற்றில் மிதந்த ஆண் பிணத்தை மீட்டனர்.
கிணற்றில் பிணமாக மிதந்த நபர் சுமார் 50. வயது மதிக்கத்தக்க நபர் ஆவார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? இங்கு எப்படி வந்தார் என்ற விவரம் தெரியவில்லை.
இதை தொடர்ந்து ராணிப்பேட்டை போலீசார் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கிணற்றில் பிணமாக மிதந்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா, தவறி விழுந்து இறந்து விட்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.






