என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமைச்சர் ஆர்.காந்தி சைக்கிள் போட்டியை தொடங்கி வைத்த காட்சி.
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி
- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராணிப்பேட்டை மாவட்ட பிரிவு சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாணவ, மாணவி களுக்கான சைக்கிள் ஓட்ட போட்டிகள் 3 பிரிவுகளில் நடைபெறும் என அறிவிக்க ப்பட்டிருந்தது.
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்திலிருந்து தொடங்கி லாலாபேட்டை அடுத்த சிப்காட் பகுதி 2 வரை சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகம் வரும் வகையிலும், மற்றொரு பிரிவில் ஏகாம்பரநல்லூர் கூட்ரோடு வரை சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் வகையில் இந்த போட்டி நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ. 2ஆயிரமும், 4-ம் இடம் முதல் 10-ம் இடம் வரை பெறும் மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.250 வீதமும் மொத்த பரிசு தொகையாக ரூ.70ஆயிரத்து 500-ம், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இன்று காலை சைக்கிள் ஓட்ட போட்டியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தலைமை தாங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஞானசேகரன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஆர்வமுடன் சைக்கிளை ஓட்டி சென்றனர்.






